என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    கல்லூரி பேராசிரியர் அதிரடி கைது

    பெரம்பலூர்,  

    விழுப்புரம் மாவட்டம் திருவண்ணை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் திருவள்ளுவன். இவரது மகள் சுபா ஆடலரசி (வயது 26). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியிள் அலுலலக உதவியாளராகவும், அதே பள்ளியின் மாணவிகள் விடுதியில் காப்பாளராகவும் பணி புரிந்தது வந்தார்.

    சம்பவத்தன்று தனது விடுதி அறைக்கு சென்ற அவர் அங்கு துப்பட்டாவில் துக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் மதியம் பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் விடுதி அறைகளை சுத்தம் செய்ய சென்ற போது சுபாஆடலரசி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து பள்ளி நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுபாஆடலரசி இறப்பதற்கு முன்பாக கைப்பட உருக்கமான கடிதம் எழுதியுள்ள்ளார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக பெரம்பலூர் போலீசார் தற்கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனிடையே சுபா ஆடலரசி தற்கொலை செய்து கொள்ள கூடியவர் இல்லை என்றும், மகளின் சாவில் சந்தேகம் உள்ளதகாவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் அவரது பெற்றோர் பெரம்பலூர் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் பள்ளி மற்றும் விடுதி விடுமுறையில் உள்ள போது விழுப்புரத்திலிருந்து மகள் ஏன் வந்தார் என்றும் சந்தேகம் எழுப்பினர்.

    இதை தொடர்ந்து பெரம்பலூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது சுபா ஆடலரசி தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அதே நிறுவன கல்லூரியில் பணியாற்றிவரும் கும்பகோணத்தைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் சுபா ஆடலரசியை சத்தியராஜ் காதலித்து வந்ததும், அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தும், இருவரும் சேர்ந்து பல இடங்களுக்குச் சென்று ஒன்றாக சுற்றி வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் அவருக்கு சுபா ஆடலரசியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

    பின்னர் வேறு ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அவரை திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்துவந்தார். இது சுபா ஆடலரசிக்கு தெரிந்து மன வேதனையில் இருந்தார். இதையடுத்து சுபா ஆடலரசி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து சத்தியராஜ் மீதும், அவரது தற்போதைய காதலி மீதும் தற்கொலைக்கு தூண்டிதாக பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சத்யராஜை பெரம்பலூர் நீநிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரம்பலூர் அருகே கிராம உதவியாளர்கள் மாநில கூட்டம்
    • 500-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    அகரம்சீகூர், 

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள சின்னாறு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில கூட்டம் மாநில தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பிரேம்குமார் வரவேற்புரையாற்றினார். தமிழக அரசு அறிவித்த ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி தமிழ்நாட்டில் அனைத்து கிராம உதவியாளர்களுக்கும் 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும்,

    வருவாய் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை ஆணையாளர்களை சந்தித்து வலியுறுத்தப்பட்ட 7 அம்ச கோரிக்கைகளில் 3 அம்ச கோரிக்கைகள் 10 நாட்களுக்குள்ளும், ஏனைய கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதனை நிறைவேற்ற வேண்டும். கிராம உதவியாளர்கள் இறந்தால் கருணை அடிப்படையில் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • குன்னம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த திருச்சி பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார்
    • பிடிபட்ட கொள்ளையர் மீது கொலை, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் இவரது மனைவி பார்வதி (வயது 60). இவர் நன்னை பஸ் நிறுத்தத்தில் இருந்து அருகாமையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு நடந்து சென்றார்.அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அறிமுகம் இல்லாத 2 மர்ம நபர்கள் அவரிடம் பேச்சு கொடுத்தனர்.

    பின்னர் மூதாட்டி அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.இதில் திருச்சி சுப்பிரமணியபுரம் சுந்தர் ராஜா முதல் தெரு பகுதியைச் சேர்ந்த பாட்டில் மணி என்கிற மணிகண்டன் (27) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.பின்னர் போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து ஆறரை பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    இவர் மீது மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த வழக்கில் குற்றவாளியை விரைவாக கைது செய்த சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சியாமளா தேவி பாராட்டினார்.

    • சு. ஆடுதுறை கிராமத்தில் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு. ஆடுதுறை கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், முருகன், அங்காள பரமேஸ்வரி அம்மன், பாவாடைராயர், வீரபத்திரர் இருளப்பர், மதுரை வீரன், ஐயப்பன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.இரண்டாம் நாள் விநாயகர் பூஜை வருண பூஜை அஷ்டபந்தனம் பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.கும்பாபிஷேகமத்தை முன்னிட்டு மேலும் மங்கள வாத்தியங்கள் , செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.இதனையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • இரவும், பகலுமாக இயங்கும் கல்குவாரிகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • முறையாக பராமரிக்காததால் இரு சக்கர வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே க.எறையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை திரண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் நடராஜன் தலைமையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளாவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட க.எறையூர் கிராமத்திற்கு அருகே உள்ள மலை பகுதிகளில் அதிகமாக கல் குவாரிகள் உள்ளது. இரவும், பகலுமாக இயங்கும் கல்குவாரிகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. நீகல் குவாரிகளில் இருந்து அதிக வேகத்தில் செல்லும் லாரிகள் மற்றும் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படுகிறது. மேலும் கற்கள், மண் அள்ளி செல்லும் லாரிகள் அதிக பாரம் ஏற்றி செல்கின்றன. அவ்வாறு செல்லும்போது சாலையின் இருபுறமும் கற்கள், மண் கீழே விழுவதால் சாலைகள் பழுதாகி உள்ளது. அதை முறையாக பராமரிக்காததால் இரு சக்கர வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

    அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்திருந்தனர்.

    பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில செயலாளர் ரகு கூறுகையில், கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது, கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க எடுக்கவேண்டும். வரும் 30ம் தேதி புதிய கல்குவாரி ஏலம் விடப்படுகிறது. அந்த ஏலத்தினை நடத்தக்கூடாது , நடத்தும் பட்சத்தில் பொதுமக்கள் சார்பில் எங்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் அட்டை ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைத்துவிட்டு ஏலம் விடப்படும் கல் குவாரிகளிலே சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என தெரிவித்தார்.

    • ராஜ்குமார் தனது மனைவி பிரவீணாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
    • ராஜ்குமார் திட்டமிட்டது போல் தீபக் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்தில் பிரவீணாவை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 33), தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர். இவருடைய மனைவி பிரவீணா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இரவு எளம்பலூர் சாலையில் ராஜ்குமார், பிரவீணா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த கும்பல் பிரவீணாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பிரவீணா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்ததை பிரவீணா கண்டித்ததால் கணவர் ராஜ்குமாரே கூலிப்படை மூலம் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    ராஜ்குமாருக்கும், பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். இது தொடர்பாக புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கண்டுபிடித்து அழைத்து வந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டனர். ஆனாலும் ராஜ்குமார் தனது கள்ளக்காதலியை மறக்க முடியாமல் தவித்து வந்தார்.

    இந்த சூழ்நிலையில் அவர்கள் 2 பேரையும் கண்டித்த பிரவீணா தனது கணவர் ராஜ்குமாரை ஒரு நாள் செருப்பால் அடித்துள்ளார். இதனால் ராஜ்குமாரிடம் பழகுவதை அந்த பெண் நிறுத்தி விட்டு வேறோருவருடன் பழகி வந்துள்ளார்.

    மேலும் ராஜ்குமார் தனது அண்ணனின் மனைவி ஆனந்தியுடன் (33) தகாத உறவு வைத்து இருப்பதாக பிரவீணா சந்தேகமடைந்தார். இதனால் ஆனந்தியையும் ஒரு நாள் பிரவீணா துடைப்பத்தால் அடித்துள்ளார்.

    இதனால் ராஜ்குமார் தனது மனைவி பிரவீணாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். உதவிக்கு தனது அண்ணி ஆனந்தியையும் சேர்த்துக் கொண்டாராம்.

    பின்னர் ஆனந்தி தனது அக்காள் மகனான திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வாசுகி தெருவை சேர்ந்த சுரேசின் மகன் தீபக்கை (19) நாடியுள்ளார்.

    இவனுக்கு ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்பு உள்ளது. அவனிடம் பிரவீணாவை கொலை செய்யும் திட்டத்தை கூறியுள்ளார். அதற்கு அவன் ரூ.2 லட்சம் கேட்டுள்ளான்.

    இதையடுத்து, கடந்த 19-ந்தேதி ராஜ்குமார் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரத்தை முன்பணமாக ஆனந்தியின் கணக்கிற்கு ஜி-பே மூலம் அனுப்பி, பின்னர் அந்த பணத்தை ஆனந்தி கணக்கிற்கு அனுப்பினார்.

    பணத்தை பெற்றுக்கொண்ட தீபக் தனது நண்பர்களான சந்தோஷ் பாபு என்ற சஞ்சய் (19), சரண்குமார் (19), பப்லு (22) லக்கி என்ற லட்சன் (19) ஆகியோரை பெரம்பலூருக்கு அழைத்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று ராஜ்குமாருக்கு இரவு பணி என்பதால் மனைவி பிரவீணாவை எளம்பலூரில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பிரிவு சாலையில் உள்ள சித்தப்பா வீட்டில் வசிக்கும் அக்காள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு விட அழைத்து சென்றார்.

    அப்போது ஏற்கனவே ராஜ்குமார் திட்டமிட்டது போல் தீபக் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்தில் பிரவீணாவை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்தனர். போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க பிரவீணாவின் ஒரு பவுன் தங்க தாலியையும், 1½ பவுன் தங்க சங்கிலியையும், கொலுசுகளையும் கூலிப்படையினர் திருடியதோடு, ராஜ்குமாரையும் கத்தியால் லேசாக கீறி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து ஆனந்தி, தீபக், சந்தோஷ்பாபு, சரண்குமார், லட்சண், பப்லு ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். நேற்று அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 24 மணிநேரமும் லாரிகள் சென்று வருவதால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி தருகிறது.
    • இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் எசனை மற்றும் கீழக்கரை கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் கற்கள் மிக அதிக அளவில் வெடிவைத்து வெட்டி எடுக்கப்படுகிறது.

    இப்படி வெட்டி எடுக்கப்படும் ஜல்லிகள், கிரஷர் பவுடர்கள், சிப்ஸ்கள் பெரம்பலூர் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை உள்பட வெளிமாவட்டங்களுக்கு டிப்பர் லாரிகளில் எசனை-ஆலங்கிளி சாலை வழியாக எடுத்து செல்லப்படுகிறது.

    இப்படி செல்லும் லாரிகள் அதிவேகமாகவும் ஜல்லிகற்கள் சாலை முழுவதும் சிதறி பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது.

    மேலும் 24 மணிநேரமும் லாரிகள் சென்று வருவதால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் இன்று காலை எசனை குவாரியிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றி வந்த 2 லாரிகளை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆலங்கிளி சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

    இதனை அறிந்த அதிகாரிகள் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் கூச்சலிட்டனர்.

    உங்களுடைய கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் சாலையில் சிதறிக்கிடக்கும் கற்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும்.

    மேலும் இது போல் கற்களை சிதறி செல்லும் லாரிகள் குறித்து புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதனை தொடர்ந்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பெரம்பலூரில் போலீசார் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது
    • பொதுமக்களிடம் இருந்து 16 மனுக்கள் பெறப்பட்டன

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம்கள் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் மொத்தம் 16 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.

    • பெரம்பலூர் அருகே லாரி டிரைவரை மயக்கமடைய செய்து பணம்-செல்போன் திருடிய இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது
    • இளம்பெண்ணை கையும், களவுமாக பிடித்து பொதுமக்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.24 ஆயிரத்து 500 எடுத்து கொண்டு வெளியே வந்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவருடன் நின்று கொண்டிருந்த இளம்பெண், லாரி டிரைவர் மீது ஏதோ ஒன்றை தடவினார். இதில் மயக்கமடைந்த லாரி டிரைவரிடம் இருந்து அவர்கள் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி சென்றனர். இதையடுத்து மயக்கம் தெளிந்த லாரி டிரைவர் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே நின்று கொண்டு இருந்த அந்த இளம்பெண்ணை பொதுமக்கள் உதவியுடன் கையும், களவுமாக பிடித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 73 டாஸ்மாக் கடைகளுக்கு பார் அமைக்க இ-டெண்டர் கோரப்பட்டு உள்ளது
    • நாளைக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

    பெரம்பலூர், 

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் செயல்படும் 81 (மதுபானம்) கடைகளில், 8 கடைகள் மதுக்கூடங்களுடன் இயங்கி வருகிறது. இதில் பார் இல்லாத 73 டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து மதுக்கூடங்களுக்கு இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிவரை https://tntenders.gov.in.nicgep/app என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பம் செய்யலாம். நாளை மாலை 4.30 மணியளவில் டெண்டர் திறக்கப்படும் என்று ஒருங்கிணைந்த பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.50 ஆயிரம் வாங்கிக்கொண்டு பெண்ணை தீர்த்துக்கட்டிய கூலிப்படையினர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்
    • கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவன் வெறிச்செயல்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 33), தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர். இவருடைய மனைவி பிரவீணா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு எளம்பலூர் சாலையில் ராஜ்குமார், பிரவீணா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த கும்பல் பிரவீணாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பிரவீணா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.இது குறித்து ராஜ்குமார் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்ததை பிரவீணா கண்டித்ததால் கணவர் ராஜ்குமாரே கூலிப்படை மூலம் அவரை கொலை செய்தது தெரியவந்தது.ராஜ்குமாருக்கும், பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். இது தொடர்பாக புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கண்டுபிடித்து அழைத்து வந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டனர். ஆனாலும் ராஜ்குமார் தனது கள்ளக்காதலியை மறக்க முடியாமல் தவித்து வந்தார்.

    இந்த சூழ்நிலையில் அவர்கள் 2 பேரையும் கண்டித்த பிரவீணா தனது கணவர் ராஜ்குமாரை ஒரு நாள் செருப்பால் அடித்துள்ளார். இதனால் ராஜ்குமாரிடம் பழகுவதை அந்த பெண் நிறுத்தி விட்டு வேறோருவருடன் பழகி வந்துள்ளார்.

    மேலும் ராஜ்குமார் தனது அண்ணனின் மனைவி ஆனந்தியுடன் (33) தகாத உறவு வைத்து இருப்பதாக பிரவீணா சந்தேகமடைந்தார். இதனால் ஆனந்தியையும் ஒரு நாள் பிரவீணா துடைப்பத்தால் அடித்துள்ளார்.இதனால் ராஜ்குமார் தனது மனைவி பிரவீணாவை கொலை செய்ய திட்டம் திட்டினார். உதவிக்கு தனது அண்ணி ஆனந்தியையும் சேர்த்துக் கொண்டாராம்.பின்னர் ஆனந்தி தனது அக்காள் மகனான திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வாசுகி தெருவை சேர்ந்த சுரேசின் மகன் தீபக் (19) நாடியுள்ளார்.இவனுக்கு ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்பு உள்ளது. அவனிடம் பிரவீணாவை கொலை செய்யும் திட்டத்தை கூறியுள்ளார். அதற்கு அவன் ரூ.2 லட்சம் கேட்டுள்ளான்.இதையடுத்து, கடந்த 19-ந்தேதி ராஜ்குமார் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரத்தை முன்பணமாக ஆனந்தியின் கணக்கிற்கு ஜி-பே மூலம் அனுப்பி, பின்னர் அந்த பணத்தை ஆனந்தி கணக்கிற்கு அனுப்பினார்.

    பணத்தை பெற்று கொண்ட தீபக் தனது நண்பர்களான சந்தோஷ் பாபு என்ற சஞ்சய் (19), சரண்குமார் (19), பப்லு (22) லக்கி என்ற லட்சன் (19) ஆகியோரை பெரம்பலூருக்கு அழைத்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று ராஜ்குமாருக்கு இரவு பணி என்பதால் மனைவி பிரவீணாவை எளம்பலூரில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பிரிவு சாலையில் உள்ள சித்தப்பா வீட்டில் வசிக்கும் அக்காள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு விட அழைத்து சென்றார்.

    அப்போது ஏற்கனவே ராஜ்குமார் திட்டமிட்டது போல் தீபக் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்தில் பிரவீணாவை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்தனர். போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க பிரவீணாவின் ஒரு பவுன் தங்க தாலியையும், 1½ பவுன் தங்க சங்கிலியையும், கொலுசுகளையும் கூலிப்படையினர் திருடியதோடு, ராஜ்குமாரையும் கத்தியால் லேசாக கீறி விட்டு தப்பி சென்றுள்ளனர்.மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து ஆனந்தி, தீபக், சந்தோஷ்பாபு, சரண்குமார், லட்சண், பப்லு ஆகிேயாரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். நேற்று அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்..

    • பூலாம்பாடியில் தினசரி காய்கறி சந்தை திறப்பு விழா நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்துவைத்தார்

    அரும்பாவூர் அக் 26

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூரில் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் போல் பிளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தினசரி காய்கறி சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.

    இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பிளஸ் மேக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் கற்பகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளாதேவி, பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட வன அலுவலர் குகனேஷ், ரோவர் வேளாண் கல்லூரி துணைத்தாளாளர் ஜான்அசோக் வரதராஜன், ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்கச் செயலாளர் எ.கே.ராமசாமி வரவேற்றுப்பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு காய்கறி சந்தையை திறந்து வைத்தார். 

    அதனைத்தொடர்ந்து டத்தோ பிரகதீஸ்குமாருக்கு விவசாயிகள் பொதுமக்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். நிறைவாக பிளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தினசரி காய்கறிசந்தை ஆலோசகர் விஐபி ராஜா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.விழாவில் டத்தோ பிரகதீஸ்குமாரின் தந்தை சூரிய பிரகாசம், கோட்டாட்சியர் நிறைமதி, பிளஸ்மேக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் நந்தினி பிரகதீஸ்குமார், பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் டி.சி.பி பாஸ்கரன், வேப்பந்தட்டை ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம், பூலாம்பாடி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ராஜேந்திரன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், பேருராட்சித்தலைவர் பாக்கியலட்சுமி, பூலாம்பாடி கவுன்சிலர்கள், மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். 

    ×