என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூரில் ஊழல் தடுப்பு வார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, விஜயலட்சுமி பதிலளித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி தலைமை வகித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் பேசினார்.லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமச்சித்ரா பேசுகையில்,

    பொதுமக்கள் நினைத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். எனவே லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். லஞ்சம் கேட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பெரம்பலூரில் வெங்கடாஜலபதி நகரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 95006 05027, 94981 06692, 86103 74314 என்ற எண்ணிலோ தகவல் தெரிவித்து புகார் அளிக்கவேண்டும். ஊழல், லஞ்சம் சம்பந்தமாக தகவல் அல்லது புகார் தெரிவிப்பவர்கள் விபரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்தார்.

    தொடர்ந்து மாணவ,மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. சிறந்த கேள்வி கேட்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் மனோகரன் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூர் இலவச எம்ப்ராய்டரி பயிற்சி பெற மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • ௩௦ நாட்கள் பயிற்சிக்கு தொழில் தொடங்க வங்கி கடன் வழங்கப்படும் என்று அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி வரும் 3-ந்தேதி முதல் இலவசமாக அளிக்கப்படவுள்ளது. 18 வயதுக்கு மேலும், 45 வயதுக்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்த வேண்டும். பயிற்சியின் கால அளவு 30 நாட்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், கிராமப்புற மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சி பெற விருப்பமுள்ள பெண்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் அலுவலகத்தில் தகுந்த ஆவணங்கள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் வரும் 2-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் 2ம்தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளவேண்டும். மேலும் விபரங்களுக்கு 04328-277896, 9488840328 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    • பெரம்பலூரில் நடந்த கல்குவாரி ஏலத்தில் பயங்கர மோதல் நடைபெற்றது
    • அமைச்சர் உதவியாளர் உள்பட தி.மு.க.வினர் 10 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு

    பெரம்பலுார், அக்.31-

    பெரம்பலுார் மாவட்டத்தில், பெரம்பலுார் மற்றும் ஆலத்துார் யூனியனில் உள்ள, 31 கல் குவாரிகளை, இன்று (செவ்வாய் கிழமை) ஏலம் விடுவதாக, பெரம்பலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி, ஏற்கனவே செயல்படும், 19 பழைய பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா, 1.36 கோடி ரூபாயும், 12 புது பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா 2 கோடி ரூபாயும் என டெண்டர் தொகை நிர்ணயிக்கப்பட்ட டது.

    இதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டது.டெண்டர் பெறும் பணியில் கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குனர் ஜெயபால் மற்றும் துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    இதனால் அந்த அலுவல கத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அதில் தி.மு.க.வினர் பெரும்பான் மையாக திரண்டிருந்தனர்.

    இதில் தி.மு.க.வினர் வேறு எவரையும் டெண்டர் சமர்ப்பிக்க அனுமதிக்க வில்லை என்று கூறப்படு கிறது. போலீசாரும் அங்கு பாதுகாப்புக்காக குவிக்க ப்பட்டு இருந்தனர். இந்நிலையில், பா.ஜ.க. வைச் சேர்ந்த, பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் (வயது 48) என்பவர், தன் தம்பி முரு கேசன் என்பவருக்கு, கல் குவாரி டெண்டருக்கு விண்ணப்பிப்பதற்காக, பா.ஜ.க தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசனுடன் பெரம்ப லுார் கலெக்டர் அலுவல கத்துக்கு வந்தார்.அங்குள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டி யில் விண்ணப்பத்தை போடுவதற்காக, விண்ணப்பம் மற்றும் 50 ஆயிரத்திற்கான 2 வங்கி வரைவோலையுடன் சென்றார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தி.மு.க.வினர் அவர்களை தடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவ லகத்தின் முதல் தளத்தி லேயே பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதில் கலைச் செல்வன் கட்டையால் தாக்கப்பட்டார். விண்ணப்பங்கள் கிழித்தெ றியப்பட்டது. டெண்டர் செலுத்து வதற்காக வைக்கப் பட்டிருந்த மரத்தடுப்புகள் உடைத்து சேதப்படுத் தப்பட்டன. இதனை தடுக்க வந்த அரசு அலுவலர்கள், பாது காப்பிற்காக நிறுத்தப்ப ட்டிருந்த போலீஸ் அதிகாரி கள் உள்ளிட்டோர் தாக்கப் பட்டனர்.

    அலுவலகம் சூறையா டப்பட்டதில் ஆவணங்கள், விண்ணப்பங்கள் கீழே சிதறி கிடந்தன. இதனால் கலெக்டர் அலுவலகம் முதல் தளம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    இந்த தகராறில் காயம டைந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனி சாமி, நெடுஞ்சாலை போக்கு வரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பையன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கலா, பெரம்பலூர் சப் இன்ஸ்பெக்டர் சண்மு கம், பெண் போலீஸ் ஏட்டு லட்சுமி மற்றும் மாவட்ட உதவி புவியியலாளர் இளங்கோவன், புவியியல் துறை வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன் ஆகியோர் பெரம்பலூர் மருத்துவ மனையில் வெளி நோயாளி களாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உள்பட தி.மு.க.வினர் 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இதைய றிந்து, கனிம வளத்துறை அலுவலகத்திற்கு விரைந்து வந்த கலெக்டர் கற்பகம், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருதி கல் குவாரி டெண்டரை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • தி.மு.க.வினர் வேறு எவரையும் டெண்டர் சமர்ப்பிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • கலெக்டர் அலுவலகம் முதல் தளம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    பெரம்பலுார்:

    பெரம்பலுார் மாவட்டத்தில், பெரம்பலுார் மற்றும் ஆலத்துார் யூனியனில் உள்ள, 31 கல் குவாரிகளை, இன்று (செவ்வாய் கிழமை) ஏலம் விடுவதாக, பெரம்பலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி, ஏற்கனவே செயல்படும், 19 பழைய பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா, 1.36 கோடி ரூபாயும், 12 புது பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா 2 கோடி ரூபாயும் என டெண்டர் தொகை நிர்ணயிக்கப்பட்டது.

    இதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டது.

    டெண்டர் பெறும் பணியில் கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குனர் ஜெயபால் மற்றும் துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    இதனால் அந்த அலுவலகத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அதில் தி.மு.க.வினர் பெரும்பான்மையாக திரண்டிருந்தனர்.

    இதில் தி.மு.க.வினர் வேறு எவரையும் டெண்டர் சமர்ப்பிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. போலீசாரும் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த, பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் (வயது 48) என்பவர், தன் தம்பி முருகேசன் என்பவருக்கு, கல் குவாரி டெண்டருக்கு விண்ணப்பிப்பதற்காக, பா.ஜ.க தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசனுடன் பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    அங்குள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் விண்ணப்பத்தை போடுவதற்காக, விண்ணப்பம் மற்றும் 50 ஆயிரத்திற்கான 2 வங்கி வரைவோலையுடன் சென்றார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தி.மு.க.வினர் அவர்களை தடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்திலேயே பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    இதில் கலைச்செல்வன் கட்டையால் தாக்கப்பட்டார். விண்ணப்பங்கள் கிழித்தெறியப்பட்டது. டெண்டர் செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மரத்தடுப்புகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இதனை தடுக்க வந்த அரசு அலுவலர்கள், பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் தாக்கப்பட்டனர்.

    அலுவலகம் சூறையாடப்பட்டதில் ஆவணங்கள், விண்ணப்பங்கள் கீழே சிதறி கிடந்தன. இதனால் கலெக்டர் அலுவலகம் முதல் தளம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    இந்த தகராறில் காயமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பையன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், பெண் போலீஸ் ஏட்டு லட்சுமி மற்றும் மாவட்ட உதவி புவியியலாளர் இளங்கோவன், புவியியல் துறை வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன் ஆகியோர் பெரம்பலூர் மருத்துவமனையில் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இச்சம்பவம் தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இக்குனர் ஜெயபால் பெரம்பலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க.வை சேர்ந்த மகேந்திரன், சிவசங்கர், ரமேஷ், செல்வம், அன்பழகன், விஜயகாந்த், தர்மா உள்பட 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இதையறிந்து, கனிம வளத்துறை அலுவலகத்திற்கு விரைந்து வந்த கலெக்டர் கற்பகம், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருதி கல் குவாரி டெண்டரை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • பெரம்பலூரில் சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • இது தொடர்பான அறிவிப்பு கடிதம் சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் சாலை ஓரங்களில் பொது மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள தள்ளுவண்டிகள் மற்றும் கடைகளை அறிவிப்பு கிடைக்கப்பட்ட 3 தினங்களுக்குள் தாங்களாகவே முன் வந்து அகற்றி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தவறினால் நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறையினர்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றப்படுவதுடன் தாங்கள் வைத்துள்ள பொருட்களை பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையாளர் ராமர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அறிவிப்பு கடிதம் சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் துறைரீதியான ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா, சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சுகன்யா உடனிருந்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் துறைரீதியான ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது, தமிழ் வளர்ச்சித்துறையில் பராமரிக்கப்படும் வருகைப் பதிவேடு, கொடுபடா பதிவேடு, பணப்பதிவேடு, சுத்தநகல் பதிவேடு, பயணக்குறிப்பு பதிவேடு, சில்லரை செலவினம், ஆட்சிமொழித் திட்டம் முன்னேற்ற விழுக்காடு பதிவேடு, துறைவாரிப் பதிவேடு, கருவூல ஒத்திசைவுப் பதிவேடு, வங்கிக்கணக்குப் புத்தகம், அஞ்சல் வில்லைப் பதிவேடுகள், கருவூலப் பதிவேடு உள்ளிட்ட பல பதிவேடுகளை இயக்குநர் அருள் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பெரம்பலூர் மாவட்ட செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா, சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சுகன்யா உடனிருந்தனர்.

    • நாளை மறுநாள் (புதன் கிழமை) காலை 10 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.
    • இதர பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினமான நாளை மறுநாள் (புதன் கிழமை) காலை 10 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    கூட்டத்தை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

    உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்களாகிய வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சியில் இதர பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • ஆசிரியர்கள் படித்துக் கொண்டே இருந்திட வேண்டு என்பதற்காக உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கினார்.
    • ஆனால் உயர்கல்வி முடித்திடும் அனைவருக் கும் பழையமுறையில் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரு கின்றோம்.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:-

    அண்ணாத்துரை தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த போது ஆசிரியர்கள் படித்துக் கொண்டே இருந்திட வேண்டு என்பதற்காக உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கினார்.

    இது தொடர்ந்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக 2020-ல் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு அரசிற்கு ஏற்பட்ட நிதிச் சுமையால் ஆசிரியர்களுக்கு காலம் காலமாக வழங்கி வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மாற்றி அமைத்து அரசாணை வெளியிட்டதில் 9.3.2020-க்கு முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்களிடம் கருத்துருக்கள் பெற்று அதன் அடிப்படையில் பழைய முறையில் ஊக்க ஊதியம் வழங்கிட நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    ஆனால் உயர்கல்வி முடித்திடும் அனைவருக் கும் பழையமுறையில் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரு கின்றோம்.

    எனவே முதல்வர் உயர்கல்வி முடித்திட்ட ஆசிரியர்களுக்கு பழைய முறையில் கணக்கிட்டு ஊக்க ஊதியம் வழங்கிட ஆணை பிறப்பித்திட வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.

    • முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
    • பசுமை தமிழகத்தை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மாநில தலைவர் அக்ரி மாதவன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்த அம்மனுவில் கூறப் பட்டுள்ளதாவது, வேளாண் அறிவியல் கல்வியை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் அறிமுகம் செய்து வேளாண்மை பட்ட தாரிகளை முதுநிலை ஆசிரி யர்களாக நியமனம் செய்ய வேண்டுதல்.

    மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் வேளாண் அறிவியல் ஆசி ரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

    வேளாண்மை மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்ப பட்டதாரிகளை பள்ளிக்கல்வித்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகியவற்றில் உரிய பணியிடங்களில் நியமனம் செய்து பல்லாயிரக்கணக்கான வேலையில்லா வேளாண் பட்டதாரிகளின் வாழ்வில் ஒளி ஏற்றி பசுமை தமிழகத்தை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    தமிழ்வளர்ச்சித்துறை அலுவலக செயல்பாடுகள் - இயக்குநர் நேரில் ஆய்வு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் நேற்று துறைரீதியான ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது, தமிழ் வளர்ச்சித்துறையில் பராமரிக்கப்படும் வருகைப் பதிவேடு, கொடுபடா பதிவேடு, பணப்பதிவேடு, சுத்தநகல் பதிவேடு, பயணக்குறிப்பு பதிவேடு, சில்லரைச் செலவினம், ஆட்சிமொழித் திட்டம் முன்னேற்ற விழுக்காடு பதிவேடு, துறைவாரிப் பதிவேடு, கருவூல ஒத்திசைவுப் பதிவேடு, வங்கிக்கணக்குப் புத்தகம், அஞ்சல் வில்லைப் பதிவேடுகள், கருவூலப் பதிவேடு உள்ளிட்ட பல பதிவேடுகளை இயக்குநர் அருள் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பெரம்பலூர் மாவட்ட செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா, சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சுகன்யா உடனிருந்தனர்.


    மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் 1033 என்ற எண்ணை உதவிக்கு அழைக்கலாம்

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி கடந்த மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துக்கள் குறித்தும், என்னென்ன காரணங்களால் அந்த விபத்துகள் நடைபெற்றது. மீண்டும் அந்த இடங்களில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் பேசுகையில், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் விபத்து ஏற்படும் நேரங்களில் 1033 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டால் உடனடியாக அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அவசர ஊர்தி சம்பவ இடத்திற்கு வருகை தந்து போதிய உதவிகள் வழங்கப்படும். அதுமட்டுமல்லாது, வாகனங்கள் பழுதாகி நின்றாலோ, எரிபொருள் இல்லாமல் நின்றுவிட்டாலோ, வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, அவசர உதவி ஏற்பட்டாலும் 1033 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அழைக்கலாம்.

    24 மணிநேரமும் அவசரகால ஊர்தி தயார் நிலையில் இருக்கும் . 1033 என்ற எண் குறித்து வாகன ஓட்டிகளுக்கோ, பொதுமக்களுக்கோ போதிய விழிப்புணர்வு இல்லை. ஆகையால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நேரத்தில் உதவ இப்படி ஒரு வசதி உள்ளது என்பது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசுங்கள். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடைகள் தெரியாத காரணத்தால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அதிவேகமாக செல்லும் வாகனங்களின் எண்ணை படம்பிடித்து காவல்துறைக்கு அனுப்பும் நவீன தொழில்நுட்பத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் அமல்படுத்த தேவையான திட்ட அறிக்கையினை தயார் செய்து வழங்கிட வேண்டும்.

    அவ்வாறு அனுப்பப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு டிரைவரன் உரிமத்தை ரத்துசெய்து, சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) மஞ்சுளா, ஆர்.டி.ஓ. (பொ) சத்திய பாலகங்காதரன், டிஎஸ்பி பழனிசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அருளாளன், வட்டார போக்குவரத்து அலுவலர்(பொ) பிரபாகரன், வாகன ஆய்வாளர் ராஜாமணி மற்றும் தாசில்தார்கள், காவல்துறையினர், போக்குவரத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பெரம்பலூருக்கு 2 தங்கபதக்கம்

    பெரம்பலூர், 

    65-வது குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் குடியரசு தின விழா போட்டிகளில் முதல் 2 இடங்களை வென்ற மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்த போட்டிகளில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி. எஸ்.சாத்விகா, 14 வயதிற்குட்பட்ட 600 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கம் பதக்கம் பெற்றுள்ளார்.

    அதே போல் பெரம்பலூர் தந்தை ஹென்ஸ் ரோவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சஜீவா, 14 வயதுக்குட்பட்ட 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். 2 பேரும் தங்க பதக்கம் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்

    ×