என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
    • மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் விக்ரம பாண்டியன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆசைமணி கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அறிவு, மாவட்ட துணை செயலாளர் பிச்சமுத்து, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வராஜ், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சாமிநாதன், விவசாய அணி மாவட்ட செயலாளர் குணசேகரன்,

    ஒன்றிய பொருளாளர் நலமுத்து மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஜெயராமன், பேரவை இணை செயலாளர் தேவா மற்றும் இந்த கூட்டத்திற்கு இரவாங்குடி பாப்பாக்குடி ஏ.என்.பேட்டை, பட நிலை, காடுவெட்டி உள்ளிட்ட கிராமத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி செயலாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

    • கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு குழு கூட்டம் நடைபெற்றது
    • 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கூட்–டு–றவு வார விழா கொண்டாடுவதை முன்னிட்டு நடைபெற்றது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் 70-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் க.பாண்டியன் தலைமையில் குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கூட்டுறவு வார விழா கொண்டாடுவதை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்களில் கொடியேற்றுதல், மரக்கன்று நடுதல், ரத்த தான முகாம், கால்நடை சிகிச்சை முகாம், பள்ளி மாணவ, மாணவி–களுக்கு கவிதைப்பேட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, துறை பணியாளர்களுக்கு விளையாட்டுப்போட்டி நடத்துவது. மற்றும் இறுதிநாள் அன்று சிறந்த சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • தி.மு.க.வினரை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • 8-ந்தேதி நடக்கிறது

     பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அ.தி.மு.க.வினர், எஸ்.பி. ஷ்யாம்ளாதேவியை சந்தித்து, கடந்த 30-ந்தேதி நடந்த கல்குவான் ஏலத்திற்கான டெண்டரின் போது அரசு அதிகாரிகளை தாக்கிய தி.மு.க.வினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கோரி மனு கொடுத்தனர்.

    பின்னர் அ.தி.மு.க .மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறும்போது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி கனிமம் மற்றும் சுரங்கம் புவியியல் துறை சார்பில், கல்குவாரி ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஜனநாயக முறைப்படி கலந்துகொள்ள வந்தவர்களை 300க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி போக்குவரத்து துறை அமைச்சர் நேர்முக உதவியாளர் மகேந்திரன் தலைமையில், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சண்டையிட்டு அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும் அரசு அதிகாரிகளும், போலீசாரும், நிருபர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

    கலெக்டரே நேரில் வந்து கலவரம் நடக்கும்போது கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்த போதும் அவரையும் ஒருமையிலே மிரட்டியும், டெண்டர் போட வந்தவர்களை அரை நிர்வாணப்படுத்தி அடித்து விரட்டிய கோரக்காட்சி, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரங்கேறியது. இந்த செயலை அ.தி.மு.க .சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரின் செயலை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரும் 8-ந்தேதி காலை 10 மணியளவில் முன்னாள் அமைச்சர் மோகன் தலைமையில், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம் முன்னிலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

    மனு கொடுத்தபோது, மாவட்ட நிர்வாகிகள் குணசீலன் ராஜாராம், ராணி, வீரபாண்டியன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், கர்ணன், சிவப்பிரகாசம் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகில் சாலையோர வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகில் சாலையோர வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்க மாவட்ட தலைவர் வரதராஜ் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட தலைவர் ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அகஸ்டின் பேசுகையில், சாலையோர வியாபாரி களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். சாலையோர வியாபாரி களின் வாழ்வாதார பாது காப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும், வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

    நகராட்சி ஆணையரின் தள்ளு வண்டிகளை அப்பு றப்படுத்தப்படும், பறிமுதல் செய்யப்படும் என்ற அறி விப்பை திரும்ப பெறவேண் டும், சாலையோர வியாபாரி களின் கோரிக்கைகள் மீது தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என வலி யுறுத்தினார்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி பழனிசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த் தையில், தீபாவளி பண்டிகை வரை தள்ளுவண்டி பறி முதல் செய்யப்படாது, தீபா வளி பண்டிகைக்கு பிறகு தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    • கல் குவாரிகளுக்கான ஏலத்தின்போது பங்கேற்க வந்த பா.ஜ.க. கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைசெல்வன் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
    • நடவடிக்கை எடுத்து எங்களது உயிரும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

    பெரம்பலூர

    பெரம்பலூரில் கடந்த திங்கட்கிழமை நடந்த 31 கல் குவாரிகளுக்கான ஏலத்தின்போது அதில் பங்கேற்க வந்த பா.ஜ.க. கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைசெல்வன், அதை தடுக்க வந்த போலீசார், அரசு ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தி.மு.க.வினர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைசெல்வன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 30-ந்தேதி நடந்த கல் குவாரிகளுக்கான மறைமுக ஏலத்திற்கான ஒப்பந்தம் கோரி விலைபுள்ளி அளிக்க சென்ற என்னையும், எனது தம்பி முருகேசன், தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோரை தி.மு.க.வினர் தடுத்தனர். பின்னர் அலுவலகத்திற்குள் புகுந்து எங்களிடமிருந்த ஒப்பந்த படிவத்தை பிடிங்கி கிழித்து எறிந்து சாதி பெயரை கூறி தகாத வார்த்தையால் திட்டி அரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கினர்.

    இதனால் நாங்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். மேலும் தி.மு.க.வினர் எங்களது வீட்டுகளுக்கு வந்து தேடி வருகின்றனர். இதனால் நாங்கள் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறோம். தி.மு.க.வினர் எங்களை கொலை செய்யும் நோக்குடன் தொடர்ந்து எங்களை தேடிவருகின்றனர்.

    எனவே எங்களை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து எங்களது உயிரும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெரம்பலூரில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
    • முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா நடத்திவைத்தார்

    பெரம்பலூர், 

    பெரம்பலூரில் சீர்திருத்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பிரபாகரன் எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆ.ராசா, நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த 25 ஜோடிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், திருநங்கைகள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலையில், ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு சமத்துவம் வர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டுவந்தார். தி.மு.க. ஆட்சியில் நரிக்குறவர் இன மக்களுக்கு வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வல்லபன், பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் அட்சயகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், மதியழகன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பழங்குடியினர் மாநில தலைவர் அதியமான் நன்றி கூறினார்.

    • கல்பாடி ஊராட்சி பகுதிகளில் கல்குவாரி அமைக்க அனுமதி கிடையாது
    • கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே கல்பாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். துணை தலைவர் கலைமகள் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் காமராஜ் ஊராட்சியின் செயல்பாடு கள் குறித்து அறிக்கை வாசித்தார். பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டார்.

    இதில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள, மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும், நிறை வேற்றப்படவேண்டிய திட்டப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அரசின் நலத்திட்டங்கள், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.கூட்டத்தில் கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதியதாக எந்தவொரு கல் குவாரி மற்றும் புதிய கிரஷர் மற்றும் தார் பிளான்ட் போன்ற வற்றிக்கு அனுமதி அளிக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என க.எறையூர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதனை ஏற்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

    • குன்னம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் பலி
    • மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஓதியம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை(வயது 60). கொத்தானார் வேலை செய்து வரும் இவர், தனது உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக எரையூர் கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    இறுதி சடங்கு முடிந்த பின்னர் இவர் ஊர் திரும்பி உள்ளார். பெரம்பலூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலை சித்தளி பிரிவு ரோட்டில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பிச்சை பிள்ளையை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது
    • சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒத்தி வைப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகில் சாலையோர வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்க மாவட்ட தலைவர் வரதராஜ் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட தலைவர் ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அகஸ்டின் பேசுகையில், சாலையோர வியாபாரி களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். சாலையோர வியாபாரி களின் வாழ்வாதார பாது காப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும், வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும்.நகராட்சி ஆணையரின் தள்ளு வண்டிகளை அப்பு றப்படுத்தப்படும், பறிமுதல் செய்யப்படும் என்ற அறி விப்பை திரும்ப பெறவேண் டும், சாலையோர வியாபாரி களின் கோரிக்கைகள் மீது தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என வலி யுறுத்தினார்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி பழனிசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த் தையில், தீபாவளி பண்டிகை வரை தள்ளுவண்டி பறி முதல் செய்யப்படாது, தீபா வளி பண்டிகைக்கு பிறகு தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    • பெரம்பலூரில் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்தில் 200 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், சுந்தரபாண்டியன், அருள்ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் கலியமூர்த்தி, ராமர், செந்தில்குமார், அக்ரி மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    தேர்தல் காலத்திலும், ஜாக்டோ-ஜியோ மாநாட்டிலும் முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 25-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும், வரும் டிசம்பர் 28-ந்தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டத்திலும் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 75 பெண்கள் உட்பட 200 கலந்துகொண்டனர்.

    • ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
    • சாத்தனூர் ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது

    குன்னம், 

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் காரை மற்றும் சாத்தனூர் ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் என். கே கர்ணன் தலைமை தாங்கினார் . முன்னதாக காரை மற்றும் சாத்தனூர் ஊராட்சிகளில் நடந்த பூத் கமிட்டி ஆய்வு கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பா. மோகன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளை ஆய்வு செய்தனர். மேலும் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சிதம்பரம் எம்.பி. சந்திரகாசி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் முத்துசாமி, பாசறை செயலாளர் இளஞ்செழியன் ,முன்னாள் ஆலத்தூர் சேர்மன் வெண்ணிலா, ஆலத்தூர் துணை சேர்மன் சுசீலா, காரை கலையரசன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு, மாவட்ட பிரதிநிதி கண்ணன், மாணவரணி ராஜா, இளைஞர் அணி நாகராஜ் ,தகவல் ஐ.டி. விங் கதிர்வேல், ஒன்றிய பேரவை தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய பேரவை செயலாளர் சண்முகம் ,பொறியாளர் பிரபாகரன், சாத்தனூர் தமிழ்ச்செல்வன், வக்கீல்கள் பெரியசாமி, சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பிலிமிசை பழனிமுத்து நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக கர்ணன் ஏற்பாடு செய்திருந்தார் .நிகழ்வில் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்திலேயே பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
    • எஸ்.பி. ஷ்யாமளாதேவி நேரடியாக விசாரணையில் ஈடுபட்டார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மற்றும் ஆலத்துார் யூனியனில் உள்ள, 31 கல் குவாரிகளை ஏலம் விடுவதாக, பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

    இந்த மறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட வேண்டும். இந்த பெட்டி, நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) திறக்கப்பட்டு ஏலம் எடுத்த நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. இதனால் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் தங்களது விண்ணப்பங்களை குவிந்தனர்.

    அப்போது பா.ஜ.க.வைச் சேர்ந்த, பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் (வயது 48), பா.ஜ.க தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசனுடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். விண்ணப்பத்தை பெட்டியில் போடுவதற்காக வந்தபோது, அங்கிருந்த சிலர் அவர்களை வழிமறித்து விண்ணப்பத்தை போடவேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

    ஆனாலும், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் அதை கேட்காமல் உள்ளே சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து முகத்தில் துண்டு அணிந்து மறைத்து கொண்டு அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்திலேயே பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    இதில் கலைச்செல்வன் கட்டையால் தாக்கப்பட்டார். விண்ணப்பங்கள் கிழித்தெறியப்பட்டது. டெண்டர் செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மரத்தடுப்புகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.

    இந்த தாக்குதலை தடுக்க வந்த கனிம வளத்துறை அதிகாரி, அரசு அலுவலர்கள், பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் தாக்கப்பட்டனர். அலுவலகம் சூறையாடப்பட்டதில் ஆவணங்கள், விண்ணப்பங்கள் கீழே சிதறி கிடந்தன.

    இதனால் கலெக்டர் அலுவலக முதல் தளம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் ஜெயபால் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உள்பட தி.மு.க.வை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 147, 148, 294, 323, 506(2), பொது சொத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவிக்கு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து எஸ்.பி. ஷ்யாமளாதேவி நேரடியாக விசாரணையில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர், ஒகளூர் ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒகளூர் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கலையரசியின் கணவர் கொடியரசன், பெரம்பலூர், கைப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்த அன்புச்செல்வன், பெரம்பலூர், அத்தியூர் கிராமத்தை சேர்ந்த லெனின், பெரம்பலூர், புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி, அரியலூர் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த தர்மராஜ், செந்துறை அருகே உள்ள சேடக்குடி க்காடு செல்வம், இளங்கண்ணன் செந்துறை அருகே உள்ள நொச்சிக்குளம் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி, செந்துறையை சேர்ந்த மாரிமுத்து உட்பட 13 பேரை பெரம்பலூர் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருவதால் கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது.

    ×