என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் அருகே கார்-பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்
- பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் இவரது மகன் வேல்முருகன் (வயது 28). இவர் நேற்று மாலை நாமக்கல்லில் உள்ள நண்பரை பார்த்து விட்டு பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.
அப்போது பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் உள்ள மட்ட பாறை கிராமத்தில் ஒரு டீக்கடை முன்பு வந்த போது பெரம்பலூரில் இருந்து துறையூர் சென்ற அரசு பேருந்து எதிர்பாரா விதமாக வேல்முருகன் ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வேல்முருகன் உயிரிழந்தார். இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த யாருக்கும் காயம் இல்லை. நடத்துனருக்கு காயம் ஏற்பட்டது.
அரசு பேருந்து ஓட்டுநர் செல்வராஜ் கைது செய்யப்பட்டார். பலியான வேல்முருகன் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூரில் குடும்ப தகராறு காரணமாக என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர், ஜமாலியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் இவரது மகன் நிர்மல் குமார் (வயது 33). இவர் சென்னையில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் பத்மஸ்ரீ (செவிலியர்) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் ஆகி சமீரா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிர்மல் குமார் பெரம்பலூருக்கு வந்தார்.
அப்போது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி பத்மஸ்ரீ கோவித்துக் கொண்டு வீட்டு வாசலில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் நிர்மல் குமார் மது போதையில் தனது வீட்டில் இருக்கும் துண்டை எடுத்து மின்விசிறியில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதைக் கண்ட மனைவி சத்தம் போட மேல் வீட்டில் இருந்த நிர்மல் குமாரின் தாயார் சாந்தி என்பவர் கீழே வந்து பார்த்து கத்தியால் துண்டை அறுத்து மகனை கீழே இறக்கி உள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. வீட்டிற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மல் குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- பெரம்பலூர் பி.ஜே.பி. முன்னாள் மாவட்ட செயலாளரின் 2 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது
- மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால்(வயது 50). இவர் பி.ஜே.பி. கட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். அதன் பின்னர் தற்போது பி.ஜே.பி.யில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தனபால் வீட்டு முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்ட எதிரே குடியிருக்கும் வரதராஜ் என்பவர் கூச்சலிட்டு உள்ளார். அவரின் கூச்சலை கேட்டு தனபால் வெளியே வர எந்தனித்து உள்ளார். ஆனால் வீட்டின் கதவை திறக்க முடியவில்லை.
இதற்கு காரணம் வீட்டின் முன்பக்க கதவை வெளிப்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. பின்னர பொது மக்களுடன் உதவியுடன் கதவை திறந்து வெளியே வந்த தனபால், தீயை அணைத்துள்ளார். ஆனால் அதற்குள் 2 மோட்டார் சைக்கிள்களும் முழுவதுமாக எரிந்து கருகியது.
முன்விரோதம் காரணமாக அவரது2 மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் எரித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் அருகே உள்ள சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது
- தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆடுகள் விற்பனை
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். மற்ற நாட்களை விட, தீபாவளி, பொங்கல், பக்ரீத், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் ஆடு விற்பனை களைகட்டும்.அதன்படி நாளை தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சிக்காக 100க்கும் மேற்பட்ட ஆடுகள் திருச்சி, அரியலூர், கடலூர், தஞ்சாவூர் என பல் வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இச்சந்தைகளுக்கு கொண்டு வந்தனர்.இவற்றை வாங்கி செல்வதற்கு ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.அவர்கள் போட்டிப்போட்டு வாங்கிதாலும், ஆடுகளின் வரத்து குறைவாக இருந்ததாலும் ஆடுகளின் விலை அதிகரித்தது.ஒரு நாள் ஆடு விற்பனை ரூ.2 கோடி என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- போதைக்கு அடிமையாகி வெளிநாட்டில் வேலை இழந்து ஊர் திரும்பிய பெரம்பலூர் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
- போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ேவப்பந்தட்டை தாலுக்கா வெண்பாவூர் பிரிவு சாலை பகுதியை சேர்ந்தவர் ராம ராஜ் (வயது 33).இவரது மனைவி மல் லிகா. இவர்களுக்கு ராகவன் என்ற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர்.இந்த நிைலயில் ராமராஜ் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, இறந்தவரின் உறவினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.இச்சம்பவம் தொடர்பாக முதல் கட்ட விசாரணையில் போலீசார் கூறுகையில்,வேலைக்காக வெளிநாடு சென்றிருந்த ராமராஜ், அங்கு போதைக்கு அடிமை யான தோடு சரியாக வேலை க்கு செல்லாமல் இருந்து ள்ளார். இதனால் வேலை செய்த நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கியு ள்ளது.இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெர ம்பலூர் திரும்பிய அவர், மன விரக்தியில் வீட்டிற்கு செல்ல தயக்க த்தில் தற்கொலை செய்து கொண் டிருக்கலாம் என தெரிய வருகிறது. தற்கொலைக் கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்ற னர்.
- பொதுத்தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு துறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது
- மதிப்பெண் விவரங்களின் பட்டியலை அனுப்பி வைக்க அழைப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்ந்த அனைத்து வகை அரசு அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களின் குழந்தைகள் கடந்த மார்ச் 2023-ம் ஆண்டு பொதுத்தேர்வில் 10-ம் வகுப்பில் 500க்கு 480 மதிப்பெண்களுக்கும், 12-ம் வகுப்பில் 600-க்கு 580 மதிப்பெண்களுக்கும் அதிகம் பெற்ற முதல் 3 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கூட்டுறவு வாரவிழாவில் அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
எனவே கூட்டுறவுத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுவோரின் மகன் மற்றும் மகள் ஆகியோரின் ஒப்புதல் செய்யப்பட்ட மதிப்பெண் விவரங்களின் பட்டியலை (அட்டெஸ்ட் காப்பி) வரும் 15-ந் தேதிக்குள் செயலாட்சியர் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிம், எண் 5, கே.ஆர்.காம்ப்லக்ஸ், துறைமங்கலம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
- தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- 6 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 30 -ந் தேதி கல் குவாரி உரிமம் கோரி ஏலம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அரசு அலுவலர்கள், காவல்துறையினரை தாக்கியும், அரசு அலுவலகங்களில் உள்ள தளவாடப் பொருள்களை அடித்து, உடைத்து சேதப்படுத்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போலீசாரிடம் உரிய அனுமதி பெறாமல், போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், கட்சியின் அமைப்புச் செயலாளர் அருணாசலம், எம்ஜிஆர் அணி மாவட்டச் செயலாளர் எம்.என். ராஜாராம், முன்னாள் அமைச்சர் மோகன், நகரச் செயலாளர் ராஜபூபதி உள்பட 16 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். மணிவண்ணன் தலைமை வகித்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக்) கலாராணி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக அலுவலர் (மேல்நிலை) சுரேஷ், இந்தியன் ரெட் கிராஸ் மாவட்ட கவுரவ செயலாளர் ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டி.ஆர்.ஓ. வடிவேல்பிரபு கொடியசைத்து பேரணியினை தொடங்கி வைத்து பேரணியில் கலந்துகொண்டார். இந்த பேரணி மாவட்ட தலைமை மருத்துவமனை, பழைய பஸ்ஸ்டாண்ட், காமராசர் வளைவு, சங்கு பேட்டை, கடைவீதி வழியாக வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் கவுன்சிலர்கள் மற்றும் ஜூனியர்கள் கோஷமிட்டும், பதாகைகள் ஏந்தியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மாவட்ட கன்வீனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மேல்நிலை, உயர்நிலை,மெட்ரிக், நடுநிலை ஆகிய 38 பள்ளிகளில் இருந்து 497 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இணை கன்வீனர் துரை, வேப்பூர் மாவட்ட பொருளாளர் ராஜா, மண்டல அலுவலர்கள் செய்திருந்தனர். முன்னதாக ஜே.ஆர்.சி. மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட கன்வீனர் ஜோதிவேல் நன்றி கூறினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு சுமை பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் , இறக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தலையிட்டு இறக்கு கூலி உயர்வு வழங்க அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும், மதுபான உற்பத்தி நிறுவனங்களும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் கோஷமிட்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில்வரும் 29-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கல்குவாரி டெண்டரில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை தாக்கிய தி.மு.க.வினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏ பூவைசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கட்சியின் அமைப்பு செயலாளாரும், முன்னாள் அமைச்சருமான மோகன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தி.மு.க. அமைச்சரின் உதவியாளர் அத்துமீறி கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்து அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும், உள்ளாட்சி பிரதிநிதிகளையும் அடித்து தாக்கியதோடு, அரசு அலுவலக பொருட்களை அடித்து சேதமாக்கியுள்ள சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு மாவட்ட செயலாளர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று விசாரணை கைதியை தன் பொறுப்பில் அழைத்து வந்தார். அதை கேள்விப்பட்ட முதல்வர் ஜெயலலிதா உடனடியாக அவரது மாவட்ட செயலாளர் பதவியை பறித்து விட்டார்.
ஆனால் தி.மு.க .ஆட்சியில் அரசு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் ஒரு அமைச்சரின் உதவியாளர் தலைமையில் தாக்கிய தி.மு.க. வினர் மீது முதல்வர் ஸ்டாலின் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. கருணாநிதி ஆட்சியில் மணல் கொள்ளை அடித்த வர்களை தடுக்க போன தாசில்தாரை லாரியை விட்டு ஏத்தி கொலை செய்து விட்டனர்.
இது போல் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. இதை பின்பற்றியே தி.மு.க .ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடர்ந்து நடக்கிறது. தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் பேசியபோது:-
பெரம்பலூர் மாவட்டத்திற்குள் நடக்கும் கல்குவாரி டெண்டர்களில் அரியலூர் மாவட்டத்திலிருந்து அடி ஆட்களை அழைத்து வந்து அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் அலுவலகத்தையும் தி.மு.க.வினர் அடித்து நொறுக்கினார்கள். கவர்னர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியபோதே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. அரசியலமைப்பு சட்டம் 356 சரத்தை பயன்படுத்தி இந்த தி.மு.க. ஆட்சியை கலைக்கவேண்டும் என தெரிவித்தார். பின்னர் தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் குன்னம் குணசீலன், ராஜாராம், ராணி, வீரபாண்டியன், எ.கே.ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், வக்கீல் கே.என். ராமசாமி, துறைமங்கலம் சந்திரமோகன், ஏகேஎன் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர் கல்குவாரி சம்பவத்தில்கைதானவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்
- மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல் குவாரிகளுக்கான ஏலத்துக்கு விண்ணப்பிக்க வந்த பா.ஜ.க. தொழில் துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவரும், கவுள்பா ளையம் ஊராட்சித் தலைவருமான செ.கலைச் செல்வன், அவரது சகோ தரர் முருகே சன், பா.ஜ.க. தொழில் துறை பிரிவு மாவட்டத்தலைவர் பி.முரு கேசன் ஆகியோரை தி.மு.க. வினர் தாக்கினர்.
மேலும், டி.எஸ்.பி. பழனி சாமி உள்ளிட்ட போலீஸார், உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் அலுவலர் குமரிஅனந்தன் உள்ளிட்டோரையும் தாக்கியதுடன், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி னர்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட புவியியல் - சுரங் கத் துறை துணை இயக்குநர் ஜெயபால் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத் தார்.
புகாரின் பேரில், போலீ சார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பெரம்பலூர் மாவட்டம், ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவரான கே.அன்பழகன், வேப்பூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பா ளரான ஆர்.அன்புச்செல் வன் உள்பட தி.மு.க. நிர்வா கிகள் 13 பேரை கடந்த 1-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான 13 பேர் மற்றும் இதே வழக்கில் கைதாகாமல் தலைமறைவாக இருந்த மகேந்திரன், தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு, மாவட்ட செயலாளர் ரமேஷ், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் உள்பட 6 பேர் இவர்கள் அனைவரும் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
ஜாமீன் மனுக்களை விசாரணை செய்த மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.பல்கீஸ் இவர்கள் அனைவரும் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் எண்-1 நீதிமன்றத்தில் தினமும் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி கையெ ழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தர விட்டார்.
இதே சம்பவம் தொடர் பாக மேலப்புலியூர் கிரா மத்தை சேர்ந்த தி.மு.க. தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பா ளர் ஆர்.ரமேஷ் என்பவர் தான் டெண்டர் போட வரும் போது தகாத வார்த் தையால் திட்டி, கைகளால் தாக்கி, கொலை செய்வோம் என மிரட்டியதாக அளித்த புகாரின் பேரில் பா.ஜ.க. தொழில் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் செ.கலை செல்வன், பா.ஜ.க. தொழில் பிரிவு மாவட்டத்தலைவர் பி.முருகேசன், செ.முருகே சன் ஆகியோர் மீது பெரம்ப லூர் போலீஸார் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவு களில் வழக்கு பதிவு செய் துள்ளனர்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாரம், அகரம்சீகூர் அடுத்துள்ள லப்பைக்குடிகாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலர் சேசு தலைமையில் வட்டார சுதாதார மேற்பார்வை யா ளர்கள் லெப்பைக்குடிக்காடு கடைவீதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போ து 2 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையி லைப் பொருட்கள் மறைமு கமாக விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது.
அதையடுத்து விற்ப னைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.5000 ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்பொ ருட்கள் சுகாதார முறையில் குழி அமைத்து புதைக்கப்பட் டது. மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உரிய ஆதாரங்களுடன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.






