என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூரில் குடும்ப தகராறு காரணமாக என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர், ஜமாலியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் இவரது மகன் நிர்மல் குமார் (வயது 33). இவர் சென்னையில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் பத்மஸ்ரீ (செவிலியர்) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் ஆகி சமீரா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளார்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிர்மல் குமார் பெரம்பலூருக்கு வந்தார்.

அப்போது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி பத்மஸ்ரீ கோவித்துக் கொண்டு வீட்டு வாசலில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் நிர்மல் குமார் மது போதையில் தனது வீட்டில் இருக்கும் துண்டை எடுத்து மின்விசிறியில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதைக் கண்ட மனைவி சத்தம் போட மேல் வீட்டில் இருந்த நிர்மல் குமாரின் தாயார் சாந்தி என்பவர் கீழே வந்து பார்த்து கத்தியால் துண்டை அறுத்து மகனை கீழே இறக்கி உள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. வீட்டிற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மல் குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com