என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் சுமைப்பணிதொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு சுமை பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் , இறக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தலையிட்டு இறக்கு கூலி உயர்வு வழங்க அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும், மதுபான உற்பத்தி நிறுவனங்களும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் கோஷமிட்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில்வரும் 29-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
Next Story






