என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூா மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை அலுவலக செயல்பாடுகள் - இயக்குநர் நேரில் ஆய்வு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் நேற்று துறைரீதியான ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, தமிழ் வளர்ச்சித்துறையில் பராமரிக்கப்படும் வருகைப் பதிவேடு, கொடுபடா பதிவேடு, பணப்பதிவேடு, சுத்தநகல் பதிவேடு, பயணக்குறிப்பு பதிவேடு, சில்லரைச் செலவினம், ஆட்சிமொழித் திட்டம் முன்னேற்ற விழுக்காடு பதிவேடு, துறைவாரிப் பதிவேடு, கருவூல ஒத்திசைவுப் பதிவேடு, வங்கிக்கணக்குப் புத்தகம், அஞ்சல் வில்லைப் பதிவேடுகள், கருவூலப் பதிவேடு உள்ளிட்ட பல பதிவேடுகளை இயக்குநர் அருள் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பெரம்பலூர் மாவட்ட செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா, சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சுகன்யா உடனிருந்தனர்.






