என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழநாற்று தொகுப்புகளை வழங்கினார்.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் நடமாடும் மருத்துவக்குழு முகாமை பார்வையிட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    குன்னூார் தாலுகாவில் உள்ள இளித்தொரையில் தோட்டக்கலைத்துறை மூலம் உருவான பசுமைக்குடில்களை பார்வையிட்டு, அங்கு உள்ள விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழநாற்று தொகுப்புகளை வழங்கினார்.

    பின்னர் தேனலை ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் ரூ.31.20 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் 2 கூடுதல் வகுப்பறை கள், உபதலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள பெண் கள் கழிவறை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின்கீழ் நடக்கும் வகுப்புகள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் நடமாடும் மருத்துவக்குழு முகாமை பார்வையிட்டார்.

    அப்போது அங்கு உள்ள 8 பேருக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கிய அதிகாரி வெங்கடேஷ், முகாமில் நோயாளிக்கு பிசியோதெரபி வழங்கப்படு வதையும் நேரில் பார்வையிட்டார்.தொடர்ந்து குன்னூர் பழத்தோட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், முதல்-அமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் குப்பைக்குளி முதல் சோகத்தொரை வரை ரூ.176 லட்சம் மதிப் பில் சாலை மேம்பாட்டு பணிகள், வசந்தம் நகரில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத் தின்கீழ் குடிநீர் ஆதார பணிகள், பிருந்தாவன் பள்ளி அருகில் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் விடுதி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், செயற்பொ றியாளர் செல்வகுமார், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி, குன்னூர் தாசில்தார் கனி சுந்தரம், வட்டார வளர்ச்சி அதிகாரி மோகன் குமார மங்கலம் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.
    • அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    அரவேணு,

    கோத்தகிரி பேரூராட்சியில் ரூ.44 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டார்.

    திம்பட்டி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்ததுடன், அங்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையலறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கடக்கோடு கிராமத்தைச் சேர்ந்த 35 விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழ நாற்றங்கால் தொகுப்புகளையும் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியில் 2022-2023 அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.42.69 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீர் பணிகள் மற்றும் 2022-2023 நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.96.20 லட்சம் மதிப்பீட்டில் கார்சிலி முதல் குண்டடா ஜங்ஷன் சாலை வரையிலான தார் சாலை பணிகளையும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் மேல் அணையட்டி பகுதி யில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம், எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாந்தநாடு, ஒசஹட்டி பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்ட ப்பட்டு வரும் பல்நோக்கு கட்டிட பணிகள் உள்பட மொத்தம் ரூ.44 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    அப்போது மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் கட்டி முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். இதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன.குறிப்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை, காலணி, விலை இல்லா மடிக்கணினி, புத்தகம், இலவச மிதிவண்டி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழக அரசு மூலம் நடைபெறும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் ஆய்வு செய்து, விரைவில் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது குன்னூர் கோட்டாட்சியர் பூஷ்னக்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹிம் ஷா, கோத்தகிரி செயல் அலுவலர் சதாசிவம், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித்,,கோத்தகிரி வட்டார தாசில்தார் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் அனிதா. கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, கோத்தகிரி ஒன்றிய செயலர் நெல்லை கண்ணன், தலைமை செயற் குழு உறுப்பினர் எக்ஸ்போ செந்தில், மாவட்ட பிரதிநிதி போஜன், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன் ராஜு மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • வாரயிறுதி நாட்களில் சுமார் 5000 வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
    • 1500-க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பதால் 3 கட்டங்களாக இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது

     ஊட்டி,

    ஊட்டி மார்க்கெட்டில் பழைய கடைகளை இடித்து புதிதாக கட்ட மேலும் ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

    ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் சிறு, குறு விவசாயிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர்.

    இங்கு 1500 நிரந்தர கடைகளும் மற்றும் 500 தற்காலிக கடைகளும் உள்ளன. இந்த சந்தைக்கு தினமும் 3,500 முதல் 4000 வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வாரயிறுதி நாட்களில் சுமார் 5000 வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

    ஆனாலும் கடந்த சில வருடங்களாக அடிப்படை வசதிகள் மேம்படுத்தாததால் மழை பெய்தால் மார்க்கெட்டில் ஆறு போல் வெள்ளம் ஓடுகிறது. மேலும் வாகன நிறுத்தம் இல்லாதது, சுகாதாரமின்மை என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் மார்க்கெட்டில் 80 கடைகள் வரை சேதம் அடைந்தன. இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விரிவாக படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி புதிய கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. 1500-க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பதால் 3 கட்டங்களாக இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மார்க்கெட்டை புனரமைக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் கூறியதாவது:-

    ஊட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டில் பழுதடைந்துள்ள மீன்கடை முதல் காய்கறி கடைகள் வரை உள்ள கடைகளை முழுவதுமாக இடித்து விட்டு, புதிதாக நவீன வசதியுடன்கூடிய கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டு பார்க்கிங் தளத்துடன் மீண்டும் கடைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டு தற்காலிக கடைகள் ஊட்டி ஏடிசி தளத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது 2-ம் கட்டமாக மார்க்கெட்டில் கடைகளை இடித்து புதிதாக கட்டுவதற்கு ரூ.18 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முறை 300-க்கும் மேற்பட்ட கடைகள் இடித்து புதிதாக கடைகள் கட்டப்பட உள்ளது. நிதி அறிவிப்பு வந்து விட்டதால் உடனடியாக டெண்டர் அறிவித்து பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு ஆரம்பப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் ஜக்கனாரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரவேணு மூன்றோடு கேசலடா பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    அவர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி மற்றும் வார்டு உறுப்பினர் மனோகரன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுகளை வழங்கினர்.

    • நீலகிரியில் பனி பெய்து வருவதால் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குளிரும் சற்று அதிகரித்து உள்ளது.
    • நீலகிரியில் நடப்பாண்டு எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு பருவ மழை பெய்யவில்லை.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. சூரிய வெப்பமும் அதிகரித்து வந்தது.

    இந்த நிலையில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான காந்தல், தலை குந்தா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனி பெய்ய தொடங்கி உள்ளது. அங்கு தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    பொதுவாக நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்டு மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். ஆனால் ஊட்டியில் தற்போது பனி பெய்து வருகிறது.

    இதனால் தேயிலை மற்றும் மலை காய்கறிகளை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். மேலும் நீலகிரியில் பனி பெய்து வருவதால் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குளிரும் சற்று அதிகரித்து உள்ளது.

    இதனால் அதிகாலை நேரங்களில் தேயிலை மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    நீலகிரியில் நடப்பாண்டு எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு பருவ மழை பெய்யவில்லை. கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது லேசான மழை பெய்தாலும் கனமழை பெய்யவில்லை. இதனால், நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் மிகவும் குறைவாக காணப்படுகிறது.

    • காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
    • வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில வருடங்களாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் பலர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.

    இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து பேரூராட்சி முழுவதும் வனத்தையொட்டி உள்ள பகுதிகளில் 5 இடங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அறிய கண்காணிப்பு கோபுரம் மற்றும் முகாம் அமைக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

    இதையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் வருவாய் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

    இதில் காந்திநகர் கிராமத்தையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த காலங்களில் பணி தொடங்க உள்ள சூழலில் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை கோபுரம் அமைப்பதற்காக நிலத்தை சமப்படுத்தும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் தொடங்கப்பட்டது.

    இதனை அறிந்த கிராம மக்கள் வனத்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாசில்தார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் விவசாய நிலத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திநகர் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும். அதனை விடுத்து மக்கள் விவசாயம் செய்து வரக்கூடிய நிலங்களில் அமைக்க கூடாது. இதனால் விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே இங்கு அமைக்க கூடாது. மேலும் மக்கள் வசிக்கும் பகுதிகள், வனப்பகுதிகள் அளவீடு செய்து அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
    • கரடி கூடலூர் தாசில்தார் அலுவலகம் வழியாக கூடலூா் நகரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்துக்குள் புகுந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அதிகமான வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த விலங்குகள் அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து வருகிறது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவதுடன், அங்குள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. அதோடு, சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கூடலூர் பகுதியை யொட்டிவனத் தில் இருந்து சம்பவத்தன்று இரவு கரடி ஒன்று வனத்தை விட்டு வெளியேறியது.

    அந்த கரடி கூடலூர் தாசில்தார் அலுவலகம் வழியாக கூடலூா் நகரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்துக்குள் புகுந்தது.

    அங்கு அந்த கரடி வெகு நேரமாக சுற்றித் திரிந்துள்ளது. பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    நகரின் மையப்பகுதியிலுள்ள போலீஸ் நிலைய வளாகத்துக்குள் கரடி நுழைந்திருப்பது அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    • காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர்.
    • காளை மாட்டை புலி அடித்துக் கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் புலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் உள்ளது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் ஊருக்குள் வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகளை அடித்து கொன்று வருகிறது.

    இதையடுத்து அந்த பகுதிகளில் புலி நடமாட்டத்தை அறிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டது. அதன் மூலம் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். சில வாரங்களுக்கு முன்பு தேவன் பகுதியில் கால்நடைகளை புலி கடித்துக் கொன்றது.

    தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு மேபீல்டு எஸ்டேட்ைட சேர்ந்தவர் ராஜூ. இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்தார்.

    சம்பவத்தன்று காலை வழக்கம் போல் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். பின்னர் அந்த மாடுகள் அனைத்தும் வீட்டிற்கு திரும்பி வந்தன. ஆனால் ஒரு காளை மாடு மட்டும் வீடு திரும்ப வில்லை. இதனால் அவர் பல இடங்களில் தேடினார். அப் போது தேவன் எஸ்டேட் பகுதியில் புலி தாக்கி காளை மாடு பலியாகி கிடந்தது.

    தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், மனோகர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நேரில் வந்து இறந்து கிடந்த மாட்டை பார்வை யிட்டனர்.

    இந்த மாட்டை புலி அடித்துக் கொன்றது தெரிய வந்தது.இதையடுத்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு காளை மாட்டின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தொடர்ந்து அந்த பகுதிகளில் காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட ராஜூவுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே காளை மாட்டை புலி அடித்துக் கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருவதோடு கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பொதுமக்கள் நடைபாதையை விட்டு இறங்கி ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய சிரமமும் உள்ளது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு,

    கோத்தகிரி, சுற்றுவட்டாரங்களில் உள்ள சுமார் 300 மேற்பட்ட குக்கிராமங்களுக்கு மையப்பகுதியாக அமைந்துள்ளது.

    இங்கு தாசில்தார் அலுவலகம், கோர்ட்டு, அரசு கருவூலம், போலீஸ் நிலையம், பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள், பத்திரப் பதிவு அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ளதால் கோத்தகிரி நகர் பகுதி போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

    மேலும் கோத்தகிரி பகுதியில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகன நிறுத்துமிடமும் ஏற்படுத்தப்படவில்லை.

    எனவே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் நடைபாதையை விட்டு இறங்கி ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய சிரமமும் உள்ளது.

    எனவே நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

    • பக்கத்து ஊரை சேர்ந்த செயலர் பொறுப்பு செயலராக பணியாற்றுகிறார்.
    • பல வேலைகள் நிலுவையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கூக்கல்தொரை ஊராட்சி. இந்த ஊராட்சியில் உயில்ஹட்டி, கூக்கல், கூக்கல்தொரை ஹட்டி, ஜீவா நகர், மசக்கல், தீனட்டி, பாரதி நகர் மற்றும் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன.

    கூக்கல்தொரை ஊராட்சிக்கு என்று தனியாக செயலர் இல்லை. பக்கத்து ஊரை சேர்ந்த செயலர் பொறுப்பு செயலராக பணியாற்றுகிறார். அவர் 2 ஊராட்சிகளையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் தங்கள் பகுதியில் அனைத்தும் வேலைகளும் தடைபடுவதாகவும், பல வேலைகள் நிலுவையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே கூக்கல்தொரை ஊராட்சி அலுவலகத்திற்கு தனியாக செயலர் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சுமார் 3 கோடி மதிப்பிற்கு புதிய வளர்ச்சி பணிகள் செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ஊட்டி,

    கூடலூர் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் வனத்துறை, மின்சாரதுறை போன்ற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், உலக சாதனை நிகழ்வான சந்திராயன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தபட்டதற்கு இஸ்ரோவிற்கும், விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கபட்டது. ஊரக பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் சுமார் 3 கோடி மதிப்பிற்கு புதிய வளர்ச்சி பணிகள் செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
    • அணையை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில், குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

    அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் இந்த மின் நிலையங்களில் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்நிலையில், குந்தா நீர் மின்திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி மின்சார நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் நீர், மின்சார உற்பத்திக்கு பின் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது.

    பின்னர், ராட்சத குழாய்கள் மூலம் இந்த நீர் குந்தா மின் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படுவதுடன் அணையில் அமைந்துள்ள சுரங்கபாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கெத்தை மின் நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் மீண்டும் சுரங்க பாதை வழியாக பரளி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 180 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இதனால், குந்தா, கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு முக்கிய நீர் ஆதாரமாக குந்தா மற்றும் கெத்தை அணைகள் உள்ளன.

    இந்நிலையில், குந்தா, கெத்தை அணைகளை தூர் வராததால் சேறு மற்றும் சகதிகள் நிறைந்துள்ளது.மேலும் மழைக்காலங்களில் நீர் வரத்து அதிகரிப்பால் கரையோரங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் செடி, கொடிகள் மரங்கள் அடித்து செல்லப்பட்டு அணைகளில் கலக்கிறது. இதனால், மேற்படி அணைகளில் 50 சதவீதத்திற்கும் மேல் சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கியுள்ளது.

    இதனால், குறைந்தபட்ச மழை பெய்தாலே அணைகள் நிரம்பி விடுகிறது. மேலும், சேறு, சகதிகளால் குந்தா அணையில் அமைந்துள்ள சுரங்க பாதையில் அடைப்பு ஏற்படுவதால் கெத்தை மின் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே, குந்தா அணையில் தேங்கியுள்ள சேறு, சகதிகளை அகற்றி அணையை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் வாரிய ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×