என் மலர்tooltip icon

    நீலகிரி

    • ஒரு செடி 5000 விதைகளை காற்றின் மூலம் பரப்பும் என்பது குறிப்பிடத்தக்கது
    • 100 நாள் வேலை திட்டத்தில் இந்த செடிகளை அழிக்கலாம் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் எதிரியாக உருவெடுத்திருக்கும் பார்த்தீனியம் விஷசெடி அதிகமாக பரவி படர்ந்து இருப்பதாக சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இது வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது.

    இந்தியாவுக்கு கடந்த 1953-ம் ஆண்டு கோதுமை இறக்குமதி செய்யப்பட்ட போது, இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கோதுமையோடு வளர ஆரம்பித்தது. அதன்பிறகு படிப்படியாக இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு பரவியது.

    தமிழகத்தில் நீலகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் பார்த்தீனியம் செடிகள் வளர்ந்து வருகின்றன. இது எல்லா காலநிலையிலும் வளரும் தன்மை உடையது. ஒரு செடி 5000 விதைகளை காற்றின் மூலம் பரப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் 42 மில்லியன் ஹெக்டர் பரப்பில் பார்த்தீனியம் செடிகள் தற்போது வளர துவங்கி உள்ளது. இதில் ஆட்ரோசின் நச்சு பொருள் உள்ளது. இது நிற்கும் இடத்தில் வேறு எந்த செடிகளையும் வளர விடாது.

    பார்த்தீனியம் செடிகளை ஆடு-மாடுகள் தின்றால், அவற்றின் பால் நஞ்சாகி மனிதர்களுக்கு தொற்று நோய்களை உருவாக்கும். காற்றின் மூலம் பரவுவதால் ஆஸ்துமா, அலர்ஜி, படர்தாமரை போன்ற வியாதிகளும் ஏற்படும்.

    நீலகிரி மாவட்டத்தில் பார்த்தீனிய விஷச்செடி வேகமாக விரவி படர்வது, விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. விவசாய நிலமும் கெட்டித்தன்மை அடைவதால், அங்கு உள்ள புழு பூச்சிகள் அழிந்து விடுகின்றன.

    கோத்தகிரி, கூக்கல்துறை, குன்னூர், குந்தா, ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் அடர்ந்து வளர்ந்து நிற்கிறது.முது மலை வனவிலங்கு சரணா லயத்திலும் படர்ந்து நிற்ப தால் வனவிலங்குகளுக்கும் உணவு பற்றாகுறை ஏற்படுகிறது.

    பார்த்தீனியம் செடியை தீ வைத்து அழிக்கக் கூடாது. ஏனென்றால் அதன்மூலம் பரவும் புகை, மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்ப டுத்தும். எனவே இந்த செடிகளை வேருடன் பிடுங்கி மக்க செய்து விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தலாம்.

    நீலகிரி மாவட்டத்தில் விரவிப்படரும் பார்த்தீனியம் விஷ செடிகளை ஒழிப்பதற்காக வேளாண்மை துறை மூலம் தனி நிதி ஒதுக்கி, அதன்மூலம் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் இந்த செடிகளை அழிக்கலாம் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தொழில் அதிபா் பால்வண்ணன் திறந்துவைத்தாா்
    • நிகழ்ச்சியில் சங்கத் தலைவா் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    ஊட்டி,

    கூடலூா் பழைய நீதிமன்ற சாலையில் நீலகிரி மாவட்ட தமிழ்ச் சங்க அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை தொழில் அதிபா் பால்வண்ணன் திறந்துவைத்தாா். நிா்வாகி பாக்கியநாதன் குத்துவிளக்கேற்றி அரங்கை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கத் தலைவா் மணிவண்ணன் தலைமை தாங்கினார். புளியம்பாறை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்கா், மணிவாசகம், சக்திவேல் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

    துணைத் தலைவா் ஆனந்தராஜ், சட்ட ஆலோசகா் கிருஷ்ணகுமாா், ராயல் மருத்துவமனை தலைவா் விவேக், நிா்வாக இயக்குநா் பிரகாஷ், ரஞ்சித் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனா். துணைச் செயலாளா் கலைச்செல்வன் வரவேற்றாா். இணைச் செயலாளா் கணேசன் நன்றி கூறினாா்.

    • சாரல் மழையில் நனைந்தபடி இயற்கை காட்சிகளை ரசித்தனர்.
    • ஊட்டியில் கனமழை காரணமாக படகு இல்லத்தில் தற்காலிகமாக சவாரி நிறுத்தப்பட்டது

    ஊட்டி,

    ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நேற்று அதிகரித்து இருந்தது. பொதுவாக கேரளா, கர்நாடக மாநிலங்களில் பண்டிகை விடுமுறை வந்தால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் திரண்டு வருவர்.

    கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகைக்காக 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது. அதேபோல கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை விடுமுறையின் போதும் எண்ணற்றோர் ஊட்டிக்கு வந்து செல்வர்.

    கேரளாவில் நேற்று ஓணம் பண்டிகை என்பதால் அங்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. அவர்கள் நேற்று கூட்டம்-கூட்டமாக ஊட்டிக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

    எனவே ஊட்டியில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. முன்னதாக பெரும்பாலான லாட்ஜ் மற்றும் காட்டேஜ் பகுதி களில் பயணிகள் நிரம்பி வழிந்தனர். கேரள மாநில சுற்றுலா பயணிகள் வருகை யால் பெரும்பாலான ஓட்டல்களில் ஓணம் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    கேரள மாநிலத்தில் இருந்து இன்றும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊட்டியில் தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், அங்குஉள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதலே வானில் கரும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குறிப்பாக உதகை, குன்னூா் ஆகிய பகுதிகளில் உள்ள தாவரவியல் பூங்கா, டால்பின்னோஸ், லேம்ஸ் ராக் உள்ளிட்ட காட்சி முனை ஆகிய பகுதியில் மதிய நேரத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு குளிா்ந்த கால நிலை நிலவியது.

    எனவே சுற்றுலா பயணிகள் சாரல் மழையில் நனைந்தபடியும் குடையை பிடித்தவாறும் குடும்பத்துடன் சென்று அங்கு உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனா். மேலும் சாலைகளில் அவ்வப்போது மூடுபனி காணப்பட்டதால் வாகனங்கள் பகல் நேரத்திலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு சென்றன.

    ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 11 மணி முதல் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவி வரு கிறது. ஊட்டியில் கனமழை காரணமாக ஊட்டி படகு இல்லத்தில் தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு படகு சவாரி செய்வதற்காக திரண்டு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • சக்திமலை முருகன் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் காலை10 மணிக்கு யாக பூஜை நடைபெற்றது.
    • சோம வார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு லிங்கேஸ்வரரைத் தரிசனம் செய்தனர்.

    அரவேணு,

    கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் சிறப்பு பிரதோஷ பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் சிவன் கோவில்களில் பிரதோஷ நாட்களில் யாக பூஜை, அபிஷேக பூஜை நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    இதில் சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விதமான அஷ்ட விரதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது பிரதோஷ விரதமாகும். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம், சோமவார பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் உயர்வான பலனை தரும்.

    இதையொட்டி சக்திமலை முருகன் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் காலை10 மணிக்கு யாக பூஜை நடைபெற்றது. மாலை 3 மணிக்கு சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மேலும் நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த சோம வார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு லிங்கேஸ்வரரைத் தரிசனம் செய்தனர்.

    • நிகழ்ச்சியை பள்ளி தாளாளா் பாரூக் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா்.
    • கேரள பாரம்பரிய நடனமான திருவாதிரை நடனம் இடம்பெற்றது.

    ஊட்டி,

    ஊட்டியில் உள்ள கிரசண்ட் பள்ளியில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற கொண்டாட்டத்தில் சந்திராயன் 3 மற்றும் உலக செஸ் சாம்பியன் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது குறித்து பூக்களால் அத்தப்பூ கோலத்தில் மாணவ, மாணவிகள் அலங்கரித்தனா்.

    நிகழ்ச்சியை பள்ளி தாளாளா் பாரூக் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா். கேரள பாரம்பரிய நடனமான திருவாதிரை நடனம் இடம்பெற்றது. மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது.

    ஓணத்தின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்கள் விளக்க உரையாற்றினர். மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கதகளி மற்றும் பாரம்பரிய உடை அணிந்த மாணவிகளின் கண்கவர் நடனம் ஓணம் பண்டிகையை மேலும் அழகுறச்செய்தது.  

    • ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க குதிரை சவாரியும் உள்ளது.
    • குதிரைகளின் காலை கயிறுகளால் கட்டி வைப்பது சட்ட விரோதம் என விலங்கின அமைப்பினா் தெரிவித்தனா்.

    ஊட்டி,

    ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க குதிரை சவாரியும் உள்ளது. இந்தநிலையில் குதிரை வெகுதூரம் சென்றுவிடக் கூடாது என்று கருதி அதன் காலில் கயிறுகளை கட்டி சிலா் சாலையில் அவிழ்த்து விட்டுள்ளனா்.

    இதனால் காலில் காயங்கள் ஏற்பட்டு கடந்த சில நாட்களாக குட்டியுடன் உணவின்றி தவித்து வந்த குதிரை குறித்து விலங்கின அமைப்புத் தலைவா் நைசிலுக்கு புகாா்கள் வந்தன. இதனைத் தொடா்ந்து, ஹில்பங்க் பகுதியில் நடக்க முடியாமல் நின்றிருந்த குதிரையின் காலில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை விலங்கின ஆா்வலா்கள் அவிழ்த்துவிட்டனா்.

    குதிரைகளின் காலை கயிறுகளால் கட்டி வைப்பது சட்ட விரோதம் என விலங்கின அமைப்பினா் தெரிவித்தனா். 

    • சாலைகளில் சுற்றி திரியும் யானைகள் வாகனங்களை வழிமறிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
    • பஸ்சை வழிமறித்த காட்டு யானை சிறிது நேரத்தில் பஸ்சை நோக்கி வேகமாக முன்னேறி வந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூரையொட்டி வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதி, தேயிலை தோட்டங்கள் என மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் அதிகளவில் நடமாடி வருகிறது.

    அவ்வாறு வரும் யானைகள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சேதப்படுத்தியும், அதனையொட்டிய விளைநிலங்களை சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இதுதவிர சாலைகளில் சுற்றி திரியும் யானைகள் வாகனங்களை வழிமறிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

    கூடலூரில் இருந்து ஊட்டிக்கு நேற்று மாலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். பஸ் 27-வது மைல் பகுதியில் சென்ற போது, அப்பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென சாலையின் குறுக்கே வந்தது. தொடர்ந்து பஸ்சை வழிமறித்தபடி நின்றது.

    யானை வந்ததை பார்த்த பஸ் டிரைவர் உடனே பஸ்சை நிறுத்திவிட்டார். யானை மறித்ததால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.

    பஸ்சை வழிமறித்த காட்டு யானை சிறிது நேரத்தில் பஸ்சை நோக்கி வேகமாக முன்னேறி வந்தது. இதனால் டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை பின்னோக்கி இயக்கினார்.

    ஆனாலும் யானையும் பஸ்சை நோக்கி முன்னேறி கொண்டே வந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் மிகவும் அச்சம் அடைந்து கூச்சலிட்டனர்.

    தொடர்ந்து முன்னேறி வந்த யானை பஸ்சின் அருகே வந்து நின்று கொண்டு பிளிறியது.

    இதனால் யானை பஸ்சை தாக்கிவிடும் என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் காட்டு யானை பஸ்சின் இடதுபுறமாக சென்றவாறு வழிவிட்டது.

    இதனால் பயணிகள் பயத்தில் மீண்டும் சத்தம் போட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக காட்டு யானை ஒதுங்கி சென்றது. உடனே டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டி ஊட்டியை நோக்கி புறப்பட்டார்.

    அதன்பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டபுள் ரோடு அருகே ஒற்றை யானை 2 முறை சாலையைக் கடந்து வனத்துறைக்கு போக்கு காட்டியது. இதன் காரணமாக அவ்வப்போது போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

    யானை நடமாட்டத்தால் குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினா் அறிவுறுத்தினா்.

    • மக்கள் அதிகாரம் நிர்வாகி ஆனந்தராஜ், ராஜா, மாவட்ட இணை செயலாளர் வெங்கட் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    • தனியார்மய போக்கின் ஒரு பகுதியாக நீட் தேர்வு உள்ளதால், ஜல்லிக்கட்டு போல மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடல் பகுதியில் நீட் தேர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அந்த அமைப்பின் நிர்வாகி ஆனந்தராஜ், ராஜா, மாவட்ட இணை செயலாளர் வெங்கட், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளர் மன்னரசன், பெண்கள் இணைப்பு குழுவின் சாரா உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது நிர்வாகிகள் பேசுகையில், இந்திய மருத்துவத்தை தனியார்மயமாக்கும் போக்கின் ஒரு பகுதியாக நீட் தேர்வு உள்ளதால், ஜல்லிக்கட்டு போல மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

    • 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பேசினார்
    • மாணவ-மாணவிகள் உறுதியேற்றனர்

    ஊட்டி,

    பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கவியல் கல்லூரியில் மாணவர்கள் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். துணை முதல்வர் அருண், செயலர்கள் கவுசல்யா, முருகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தனபால் பேசுகையில், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது ஜனநாயக கடமை. பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என பேசினார். தொடர்ந்து நூறு சதவீதம் வாக்களிப்போம், எங்கள் வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்று மாணவ-மாணவிகள் உறுதிமொழியேற்றனர்.

    • குன்னூா் பகுதியில் இருந்து போலீஸ் நிலையம் வரை 700 மீட்டா் தாா் சாலை போடப்பட்டது.
    • பொதுமக்கள் வெறும் கைகளால் தார்ச்சாலையை பெயா்த்தெடுத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினா்,

    ஊட்டி,

    குன்னூா் நகராட்சிக்கு உட்பட்ட மேல் குன்னூா் பகுதியில் இருந்து போலீஸ் நிலையம் வரை உள்ள 700 மீட்டா் தாா் சாலை லேம்ஸ்ராக், டால்பினோஸ் சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் சாலையாக உள்ளது. இந்த சாலை புனரமைப்புப் பணி நகராட்சி சாா்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் இந்த சாலை தரம் இல்லாமல், தாருடன் ஜல்லிக் கற்கள் பெயா்ந்து வரும் நிலையில் உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் கடந்த மூன்று நாட்களாக தங்களது எதிா்ப்பைத் தெரிவித்து வந்தனா். இருப்பினும் சாலை அமைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வந்தது. தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் வெறும் கைகளால் சாலையை பெயா்த்தெடுத்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படு த்தினா்.தரமில்லாத சாலைப் பணி குறித்து குன்னூா் நகரமன்றத் தலைவா் ஷீலா கேத்தரின் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது அவா்கள் கூறியதாவது:-

    தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக புகாா் வந்ததை அடுத்து அப்பகுதி யில் ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது. அதில் குற்றச்சா ட்டில் உண்மை இருப்பது தெரிந்ததால் சாலைப் பணியை உடனடியாக நிறுத்தவும், ஏற்கெனவே போட்ட சாலையை அகற்றிவிட்டு மீண்டும் புதிய தாா் சாலையை தரத்துடன் அமைத்துக் கொடுக்கவும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றனா்.

    • சம்பள உயர்வு, போனஸ் குறித்த தொழிலாளர்கள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
    • ரோடு அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொ ண்டார்.

    அரவேணு -

    தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நீலகிரி மாவட்டத்தில் சுற்று ப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒருபகுதியாக அவர்

    கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் குயின்சோலை பகுதியில் உள்ள டேன் டீ தொழிற்சாலைக்கு சென்ற அமைச்சர், அங்கு தயாராகும் தேயிலை தூளின் தரம், தொழிற்சாலை உபகரணங்கள் குறித்து ஆய்வு செய்தார். அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, பணியில் ஏதேனும் இடர்பாடுகள் உள்ளதா, குடியிருப்புகளில் போதிய அடிப்படை வசதிகளும் உள்ளதா? என கேட்டறி ந்தார்.

    அப்போது சம்பள உயர்வு, போனஸ் குறித்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்ட அமைச்சர், உங்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

    பின்னர் கொடநாடு பகுதியில் வனத்துறை கட்டு ப்பாட்டில் உள்ள கோடு தேன்மந்து, நேர்தேன்மந்து ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்கு ரோடு அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொ ண்டார்.

    நிகழ்ச்சியில் முதுமலை கள இயக்குநர் வெங்கடேஷ், மாவட்ட வனஅலுவலர் கவுதம், நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பொன்தோஷ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், கோத்தகிரி வட்டார வட்டாட்சியர் கோமதி, கோத்தகிரி டவுன் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல், கீழ்க்கோத்தகிரி வனசரக அலுவலர் ராம்குமார் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோலூர்மட்டம், வாகப்பனை சரிவு பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
    • 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி வனசரகத்திற்கு உட்பட்ட சோலூர்மட்டம், வாகப்பனை சரிவு பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு ஒரு சந்தன மரம் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இது தொடர்பாக வனத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் அரக்கோடு கிராமம், குமரமுடியை சேர்ந்த ஆல்துறை (வயது34), சோலரை ரவி(32), மற்றும் குமரமுடி ரங்கசாமி (59) ஆகிய 3 பேர் சந்தன மரத்தை வெட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் கோத்தகிரியில் இருந்த ஆல்துறை, ரவியை கைது செய்தனர். தலைமைறைவான ரங்கசாமியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ரங்கசாமி ஊட்டியில் பதுங்கி இருப்பதாக தகவல் வரவே போலீசார் விரைந்து சென்று, ரங்கசாமியை கைது செய்தனர்.

    பின்னர் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×