என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் சந்தன மரம் வெட்டிய 3 பேர் கைது
- சோலூர்மட்டம், வாகப்பனை சரிவு பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
- 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி வனசரகத்திற்கு உட்பட்ட சோலூர்மட்டம், வாகப்பனை சரிவு பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு சந்தன மரம் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இது தொடர்பாக வனத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் அரக்கோடு கிராமம், குமரமுடியை சேர்ந்த ஆல்துறை (வயது34), சோலரை ரவி(32), மற்றும் குமரமுடி ரங்கசாமி (59) ஆகிய 3 பேர் சந்தன மரத்தை வெட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் கோத்தகிரியில் இருந்த ஆல்துறை, ரவியை கைது செய்தனர். தலைமைறைவான ரங்கசாமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரங்கசாமி ஊட்டியில் பதுங்கி இருப்பதாக தகவல் வரவே போலீசார் விரைந்து சென்று, ரங்கசாமியை கைது செய்தனர்.
பின்னர் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Next Story






