என் மலர்
நீலகிரி
- மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஊட்டி,
குன்னூா் அருகே இந்திரா நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு போதிய கழிப்பறை வசதி கள் இல்லை. எனவே அங்கு வசிக்கும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்திரா நகரில் நடைபாதை வசதி இல்லை. தடுப்புச் சுவா் கட்டப்படவில்லை. எனவே பொது மக்கள் ஆபத்தான நிலை யில் குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் குன்னூர் இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி, குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில், காா்த்திக்,சிவா ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதனால் மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்கு வரத்த பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். எனவே இருத ரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்திருந்த வட்டாட்சியா் கனி சுந்தரம், நகராட்சி ஆணையா் ஏகராஜ் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினா். பின்னர் இந்திரா நகா் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை, 3 மாதங்களில் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
- ஒரசோலை பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
- தினமும் ஒரு கிராமம் என்ற அடிப்படையில் தொடர் போராட்டம்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அங்குள்ள விவசாயிகள் கடந்த 50 ஆண்டு காலமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என கோர்ட்டும் தீர்ப்பளித்து உள்ளது. ஆனாலும் தேயிலை வாரியம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை.
இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமுல்படுத்த கோரியும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பொரங்காடு சீமை படுகர் நலச்சங்கம் உள் ளிட்ட பல்வேறு அமைப்புகளின் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு பார்பத்தி ஹால கவுடர், 19 ஊர் தலைவர் ராமா கவுடர், கைகாரு சீமை தலைவர் நஞ்சாகவுடர் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். தொடர் உண்ணாவிரத போராட்டம் என்பதால் 120 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஊரும் தனித்தனியாக பங்கேற்க உள்ளனர்.
முதல்நாள் போராட்டத்தில் ஒரசோலை பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற் பட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். இதுதவிர ஊட்டி பகுதியில் நஞ்சுநாடு, இத்தலர் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரியில் உண்ணாவிரத போராட்டம் காரணமாக அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் விவசாயிகள் தேயிலை பறிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
- 2 குழந்தைகளும் பெற்றோரை தேடி காட்டுக்குள் சென்று இருக்கலாம் என்பது தெரியவந்தது.
- கூடலூர் தனிப்படை போலீசார் மாயமான குழந்தைகளை தேடி கண்டுபிடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள ஓடக்கொல்லி பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 5 வயதில் மகன், 10 வயதில் மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த 29-ந்தேதி தேன் எடுப்பதற்காக காட்டுக்கு சென்றனர். அப்போது அவர்கள் பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டு பத்திரமாக இருக்கும்படி அறிவுரை கூறினர்.
அதன்பிறகு பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடமும் குழந்தைகளை பார்த்து கொள்ளும்படி கூறினர். தொடர்ந்து கணவனும், மனைவியும் காட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
அங்கு தேன் எடுத்துவிட்டு அடுத்த நாள் காலை திரும்பி வந்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்த 2 குழந்தைகளையும் காணவில்லை. அவர்கள் மாயமாகி இருந்தனர்.
எனவே அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனாலும் பலனில்லை.
இதுதொடர்பாக கூடலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது 2 குழந்தைகளும் பெற்றோரை தேடி காட்டுக்குள் சென்று இருக்கலாம் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கூடலூர் போலீஸ் டி.எஸ்.பி செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் முதுமலை வனத்துறை ஊழியர்களுடன் இணைந்து நான்கு அணிகளாக பிரிந்து, அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்று மாயமான 2 குழந்தைகளையும் வலைவீசி தேடி வருகின்றனர். மொத்தம் 54 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனாலும் அவர்கள் காட்டுக்குள் சென்றதற்கான தடயங்கள் எதுவும் சிக்கவில்லை. இருந்தபோதிலும் கூடலூர் தனிப்படை போலீசார் மாயமான குழந்தைகளை தேடி கண்டுபிடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
- சிசிடிவி காமிராவில் உணவு தேடி திரியும் காட்சிகள் பதிவாகி உள்ளது
- கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது கரடி, சிறுத்தை, காட்டுமாடு ,யானை, பன்றி, குரங்கு ,போன்ற வனவி லங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவை உணவு மற்றும் தண்ணீரை தேடி அருகி லுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன.
இந்த நிலையில் ரோஸ் காட்டேஜ் பகுதிக்கு நேற்று இரவு ஒற்றை கரடி வந்தது. அங்கு அங்கு உள்ள பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றி திரிந்தது. இந்த காட்சிகள் அங்கு உள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது. கோத்தகிரி குடியிருப்புக்குள் கரடி நுழையும் பதிவு வெளியாகி இருப்பதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையே நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த உள்ள அணைஹட்டி கிராமத்தில் பகல் நேரத்தி லும் ஒரு கரடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அணைஹட்டி கிரா மத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது அங்கு வனவிலங்குகளின் தொல்லை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அனைஹட்டி கிராமத்துக்கு ஒரு கரடி பட்டப்பகலில் வந்தது. இதுவும் அங்கு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.
அணைஹட்டி கிராமத்தில் கரடிகள் இரவு நேரத்தில் சுற்றி திரிவது வழக்கம். ஆனால் பட்டப்பகல் நேரத்திலும் கரடிகளின் நடமாட்டம் தென்படுவது, அங்கு வசிக்கும் பொது மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் அவர்கள் பகல் நேரத்திலும் குழந்தைகளை வெளியில் சென்று விளையாட அனுமதிப்பது இல்லை. மேலும் வெளியே சென்று வரும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளும் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வனத்துறையினர் காடுகளின் பரப்பளவை அதிகப்படுத்தி விலங்குகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் தற்போது சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும் என கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
- வேளாங்கண்ணி ஆலயத்தில் தினமும் நவநாள் திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது.
- பிரான்சிஸ் ஆரோக்கியராஜ் மற்றும் ஏராளமானோர் பங்கு பெற்ற திருப்பலி நடைபெற்றது.
குன்னூர்,
நீலகிரியின் வேளாங்கண்ணி என அழைக்கப்படும் குன்னூர் வெலிங்டன் பாய்ஸ் கம்பெனி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் புனித ஆரோக்கிய அன்னை பிறந்த நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதன் ஒருபகுதியாக கேட்டில்பவுன்ட் பகுதியில் இருந்து ஆலயக்கொடி பவனியாக எடுத்துவரப்பட்டு, மாலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது ஊட்டி மறை மாவட்ட முதன்மைகுரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் கொடியேற்றி திருப்பலி நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். மேலும் வேளாங்கண்ணி ஆலயத்தில் தினமும் நவநாள் திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக அருவங்காடு அன்னாள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பேண்ட் வாத்தியம் இசைக்க பவனி ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் பிரான்சிஸ் ஆரோக்கியராஜ் மற்றும் ஏராளமானோர் பங்கு பெற்ற திருப்பலி நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- மணிப்பூர் இனப்படுகொலை, அரியானா கலவரம் ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் மக்கள் அதிகாரம் மற்றும் முற்போக்கு மக்கள் மேடை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் அந்த அமைப்புகளின் நிர்வாகிகள் வெங்கட், ரவி, ரத்ததான நண்பர்கள் குழுவின் செல்வம், இந்திய பொதுவுடமை கட்சி (மார்க்சிஸ்ட்) மணி, தந்தை பெரியார் திராவிட கழகம் ஜெயக்குமார், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் மற்றும் ராஜா உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோத்தகிரியில் மழை கொட்டியபோதும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மணிப்பூர் இனப்படுகொலை, அரியானா கலவரம் ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
- வானில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.
- மலைப் பயிா்களை அதிக பரப்பளவில் பயிரிட்டு உள்ளனர்.
ஊட்டி:
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று மதியம் வரை வெயில் வாட்டி வதைத்தது. அதன்பிறகு வானில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இது சுமார் 3 மணி நேரம் வரை நீடித்தது.
ஊட்டியில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் அவதிக்கு உள்ளாகினர்.
கோத்தகிரி, குந்தா, கெத்தை, பாலகொலா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை காரணமாக ஓடை வாய்க்கால்களில் வெள்ளம் கரைபுரண்டது. அப்போது அங்கு திடீர் அடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மழை வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்தது. அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சிஅளிக்கிறது.
ஊட்டி, கோத்தகிரி, குந்தா, கெத்தை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் உள்ளிட்ட மலைப் பயிா்களை அதிக பரப்பளவில் பயிரிட்டு உள்ளனர். அங்கு உள்ள விளைநிலங்களை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. இதனால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த நகராட்சி, ஊராட்சி ஊழியா்கள், நீர்வரத்து கால்வாய் ஓடையில் ஏற்பட்டு உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றி தூா்வாரும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை
- மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரும் சிக்கினார்
ஊட்டி,
கூடலூர் போலீசார் சம்பவத்தன்று அத்திபாலி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தன்ர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (வயது 22) என்பதும், கஞ்சா விற்க நின்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மசினக்குடி போலீசார் சம்பவத்தன்று கக்கநல்லா சோதனைசாவடி அருகே ஒரு வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் 9 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் விசாரணையில் அவர் பெங்களூரு, ஜே.பி. நகரை சேர்ந்த ராஜேஷ் (44) என்பதும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. ராஜேசை போலீசார் கைது செய்தனர்.
- தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்த கோரிக்கை
- சாலையில் கால்நடைகள் திரிவதாகவும் குற்றச்சாட்டு
ஊட்டி,
ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகா் மன்றத் தலைவா் வாணீஸ்வரி தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் ஏகராஜ் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் உறுப்பினா் முஸ்தபா பேசும்போது, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. அனைத்து நடைப்பாதை பகுதிகளிலும் செடிகள் ஆக்கிரமித்து பாதை தெரியாத அளவுக்கு உள்ளன. நகராட்சி வாா்டுகளில் தெரு விளக்கு, பாதாள சாக்கடை அடைப்பு, நடைபாதைகள் ஆகியவை முற்றிலும் சேதம் அடைந்து உள்ளன. மேலும் கழிவுநீா், குடிநீா் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என்று குற்றம்சாட்டி னார்.
உறுப்பினர் ஜார்ஜ் பேசும்போது சாலையில் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகினறனர். சமீபத்தில் ஆம்புலன்ஸ் சென்ற போது சாலையில் கால்நடைகள் படுத்து இருந்தன. எனவே ஆம்புலன்ஸ் டிரைவர் வண்டியில் இருந்து கீழே இறங்கி கல்நடைகளை ஓரமாக விரட்டி விட்டு சென்றதாக வேதனை தெரிவித்தார்.
ஊட்டி 200 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி பல்வேறு வளா்ச்சி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நகரின் முக்கிய பகுதியான ஏடிசி காந்தி திடல் முன்பு உள்ள பொதுக்கூட்ட மேடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 7-வது வாா்டு உறுப்பினா் விசாலாட்சி விஜயகுமாா் கோரிக்கை வைத்தாா். அப்போது நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகள் உடனடியாக பரிசீலித்து பணிகளை மேற்கொள்வதாக நகா்மன்றத் தலைவா் மற்றும் நகராட்சி ஆணையா் உறுதியளித்தனா்.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்தாா்
- வனத்துறை அதிகாரிகள் ரூ.4.50 லட்சம் நிவாரணத் தொகை வழங்கினர்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, தேவா்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பக்கொல்லி கிராமத்தைச் சோ்ந்த குட்டன் என்பவா், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்தாா்.
அவரது குடும்பத்துக்கு வனத்துறை சாா்பில் ஏற்கெனவே ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படது. தற்போது மீதமுள்ள ரூ.4.50 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை தரப்பட்டு உள்ளது.
இதனை வனத்துறை அதிகாரிகள் யானை தாக்கி பலியான குட்டன் குடும்பத்தினரிடம் வழங்கினா். அப்போது பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு, வனச் சரக அலுவலா் ராதாகிருஷ்ணன், வனவா் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி
- வீடியோ கால் செய்து தேவையான ஆர்டர் பெறுவதால் வருமானம் அதிகரிப்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல துறையின் மூலம் கடந்த 07.05.2021 முதல் 24.08.2023 வரை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1,676 பயனாளிகளுக்கு ரூ9.38 கோடி மதிப்பிலும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 990 பயனாளிகளுக்கு ரூ.5.54 கோடி மதிப்பிலும், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 45 பயனாளிகளுக்கு ரூ.25.20 லட்சம் மதிப்பு உள்பட மொத்தம் 3,225 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்று பயனடைந்த மாற்றுத்திறனாளி பயனாளி ராஜேஸ்பகதூர் கூறிய தாவது:-
நான் நீடில் இண்டர்டீரிஸ்சில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த 6 மாதத்திற்கு முன் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். கடந்த மாதம் நடைபெற்ற நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட எனக்கு கலெக்டரால், ரூ.99,999 மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
இதனால் நான் தினந்தோ றும் பணியிடத்திற்கும் வீட்டிற்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல மிகவும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக இருக்கிறது. இதற்கு முதல்- அமைச்சருக்கு நன்றி.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திறன்பேசி பெற்று பயனடைந்த மாற்று த்திறனாளி பயனாளி ராணி கூறும்போது, நான் ஊட்ட வண்டிச்சோலை பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த ஆண்டுகளாக திறன்பேசி வேண்டி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.
என்னை நேர்காணலுக்கு அழைத்து அதில் என்னை தேர்வு செய்து, மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கலெக் டரால் ரூ.13,950 மதிப்பில் திறன்பேசி வழங்கப்பட்டது. இதன் மூலம் வீடியோ கால் செய்து, தையல் தொழிலுக்கு தேவையான ஆர்டர்களை பெற்று தையல் தொழில் செய்து வருவதால், எனது வருமானம் அதிகரித்துள்ளது.
மேலும், இந்த வருமானம் எனது குடும்பத்திற்கு பயனுள்ளதாக உள்ளது. இது போன்று மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
- வட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சியை ரசித்து பார்த்த அமைச்சர் மதிவேந்தன்
- தோடர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டார்
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தோடர் ஆதிவாசி மலைவாழ் பழங்குடியின மக்களின் பாரம்பரிய தேக்கிஸ் அம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அந்த கோவிலுக்கு வந்திருந்தார்.
அப்போது அவருக்கு நீலகிரி மாவட்ட திட்டகுழு தலைவரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான பொன்தோஸ் தலைமையில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கோவிலில் வழிபாடு செய்த அமைச்சர் அங்கு தோடர் இனமக்களின் கலாச்சார நடனத்தை பார்த்து ரசித்தார். இதன் ஒரு பகுதியாக வட்டக்கல் தூக்கும் நிகழ்வு நடந்தது.
இதனை ஆர்வத்துடன் பார்வையிட்ட அமைச்சர், தோடர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டார். அவர்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்று கொண்டார்.
அப்போது முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் கவுதம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.






