என் மலர்
நீலகிரி
- கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் தொடங்கிய தேயிலை விவசாயிகளின் போராட்டம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
- இத்தலார், கடநாடு, கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் ஏராளமான தேயிலை விவசாயிகள் பங்கேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.33 நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே கோர்ட்டும் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.33 நிர்ணயிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. ஆனாலும் தேயிலை விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.எனவே நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.33 நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அங்கு உள்ள விவசாயிகள் கடந்த 1-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள்.
கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் தொடங்கிய தேயிலை விவசாயிகளின் போராட்டம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. நாக்குபெட்டா சீமை படுகர் நலச்சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. நேற்றைய போராட்டத்தில் பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். அவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டபடி அமர்ந்து இருந்தனர்.
இன்று 4-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நீடித்தது. இத்தலார், கடநாடு, கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் ஏராளமான தேயிலை விவசாயிகள் பங்கேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
- இரவு நேரம் என்பதால் காட்டு யானைகளை விரட்ட முடியாமல் தவிப்பு
- வாழைகள் சேதத்திற்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
ஊட்டி,
கூடலூர் அருகே வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின. காட்டு யானைகள் கூடலூர், முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. யானைகள் உணவு தேடி ஊருக்குள் அடிக்கடி புகுந்து வருகிறது. இந்த சமயத்தில் பொதுமக்களின் வீடுகளையும், பயிர்களையும் சேதப்படுத்துகிறது. கூடலூர் அருகே அள்ளூர் வயல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் உள்ளனர். இவர்கள் வாழை உள்பட பல்வேறு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் அடிக்கடி அந்த பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்து அதிகாலை வரை முகாமிட்டு வாழை உள்ளிட்ட பயிர்களை சாய்த்து போட்டு நாசம் செய்தது.
இதில் வேணு உள்பட சில விவசாயிகள் பராமரித்து வந்த 200-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தது. இதனால் பொருளாதார ரீதியாக மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
காட்டு யானைகள் அடிக்கடி பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தற்போது கூட்டமாக ஊருக்குள் வந்து வாழைகளை நாசம் செய்துள்ளது. இரவு நேரம் என்பதால் காட்டு யானைகளை விரட்ட முடியாமல் போனது.
இவ்வாறு பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்துவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வனத்துறையினர் வாழைகள் சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க கோரிக்கை
- தோட்டத்துக்கு செல்லாததால் தேயிலைத்தூள் உற்பத்தி பாதிப்பு
ஊட்டி,
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 நிர்ணயம் செய்ய கோரி 3-வது நாளாக விவசாயிகள் குழந்தைகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி கோத்தகிரி பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 நிர்ணயம் செய்ய கோரி 3-வது நாளாக விவசாயிகள் குழந்தைகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.33 நிர்ணயம் செய்ய கோரியும்,சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தியும் நாக்குபெட்டா சீமை படுகர் நலச்சங்கம் சார்பில், கடந்த 1-ந் தேதி முதல் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டத்தின் 3-வது நாளான நேற்று குண்டாடா மக்கள், தங்களது கிராமத்தில் இருந்து கையில் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக நட்டக்கல் கிராமத்துக்கு வந்தனர். அங்கு உண்ணாவிரத போராட்டத்தை குண்டாடா ஊர் தலைவர் சந்திரன், நிர்வாகிகள் குமார், தருமன், நஞ்சன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் விவசாயிகள் தங்களது குழந்தைகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது நீலகிரி சிறு விவசாயிகளின் தேயிலை விவசாயத்தை காப்பாற்ற வேண்டும், பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பதாகைளை கையில் ஏந்தி இருந்தனர்.
இதேபோல் தும்மனட்டியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாக்குபெட்டா படுகர் நலச்சங்க தலைவர் பாபு தலைமை தாங்கினார். போராட்டத்தில் 11 கிராம மக்கள், குழந்தைகள், பெண்கள் கலந்துகொண்டனர். தொடர் போராட்டம் காரணமாக விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்கும் பணியை நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் தேயிலைத்தூள் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோல் இத்தலார் கிராமத்திலும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தல்
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை
அரவேணு,
கோத்தகிரி தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 8 மையங்களில் வாகன பிரசாரம் நடத்தப்பட்து.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இந்த பிரசாரம் நடத்தப்பட்டது.
இடைக்குழு செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ், தாலுகா குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், ரஞ்சித், சிவகுமார், ஜெயகாந்தன், டி.ஒய்.எப்.ஐ. இடைக்குழு செயலாளர் பகத்சிங், எஸ்.எப்.ஐ. தாலுகா தலைர் சுகுந்தன், டி.ஒய்.எப்.ஐ. நகர கிளை அமைப்பாளர் தனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குன்னூர்-டால்பின்ஹவுஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல்
- கேத்தரின் நீர்வீழ்ச்சி, அரிய வகை வனவிலங்குகளை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் ஆரம்பமாக உள்ளது. இதனால் ஊட்டி மற்றும் குன்னூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் குன்னூரில் இருந்து டால்பின் ஹவுஸ் செல்லும் சாலையில் தற்போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ஊட்டியில் தற்போது குவிந்து வருகின்றனர். அங்கு அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் மகிழ்ச்சியாக பொழுதுபோக்கி வருகின்றனர்.
குறிப்பாக குன்னூர் சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அங்கு அவர்கள் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
டால்பின்நோஸ் பகுதியில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் காட்சியளிக்கும் கேத்தரின் நீர்வீழ்ச்சி, பழங்குடியினர் குடியிருப்பு, அரிய வகை வனவிலங்குகள் ஆகியவற்றை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.
குன்னூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் ஹோம் மேட் சாக்லேட்டுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு கடை நடத்தி வரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஊட்டி,
கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கீா்த்தனா, ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவா் சுனில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் கங்காதரன், மேலாண்மை குழுத் தலைவா் மஞ்சு, துணைத் தலைவா் ரசாக் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழக அரசின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
- விவசாயிகளின் கோரிக்கையை தேயிலை வாரியம் நிறைவேற்ற வில்லை.
- 2-ம் நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு விவசாயிகள் தேயிலைச்செடிகளுடன் வந்திருந்தனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு விலை வேண்டி கடந்த 50 ஆண்டு காலமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். தேயிலைக்கு உரிய விலை வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்று நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. ஆனாலும் விவசாயிகளின் கோரிக்கையை தேயிலை வாரியம் நிறைவேற்ற வில்லை. இதனால் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் பச்சை தேயிலைக்கு உரிய விலை வேண்டியும் ,சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரியும் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நாக்கு பெட்டா படுகர் நல சங்கம் சார்பில் தொடர் உண்ணா விரதப் போராட்டம் நடந்து வருகிறது.
2-ம்நாள் போராட்டத்தில் சுண்டட்டி , கொட்டநள்ளி பகுதி சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்ட னர். பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். சுண்டட்டி ஊர் தலைவர் ரவி, கொட்டநள்ளி ஊர் தலைவர் போஜகவுடர், கும்ம நஞ்சன் பூசாரி, ரங்கசாமி பூசாரி, நஞ்சன் பூசாரி ஆகியோர் உண்ணா விரத போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.
2-ம் நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு விவசாயிகள் தேயிலைச்செடிகளுடன் வந்திருந்தனர்.
இதேபோல ஊட்டி பகுதியில் உள்ள கக்குச்சி, இத்தலர் பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் தேயிலை பறிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சொத்துக்களை சகோதரர் அபகரித்து கொண்டதாக கூறி ரோட்டில் இருந்து எழ மறுத்தார்
- மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டல்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்த கிரி பகுதியில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், தினசரி மார்க்கெட், அரசு பள்ளிகள் மற்றும் எல்.ஐ.சி அலுவலகம் மற்றும் யூனியன் அலுவலகம் ஆகியவை உள்ளன. இந்த நிலையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் தாசில்தார் அலுவலகம் முன்பாக வந்திருந்தார்.
அப்போது அவர் திடீ ரென நடுரோட்டில் படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் முதியவரிடம் விசாரித்தனர்.
அப்போது எனக்கு சொந்தமான சொத்துக்களை என் சகோ தரர் அபகரித்து கொண்டார். எனவே அவர் மீது போலீ சார் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ரோட்டில் இருந்து எழ மறுத்தார்.
கோத்தகிரி ரோட்டில் முதியவர் படுத்த கிடந்ததால் அந்த வழியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாக னங்கள் செல்ல முடிய வில்லை. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வேடிக்கை பார்ப்பதற்காக பொது மக்களும் குவிந்ததால், கோத்தகிரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் ரகுமான்கான், எதுவாக இருப்பினும் பேசி தீர்த்து கொள்ளலாம். எழுந்து வாருங்கள் என்று கூறினார். அதற்கு அவர், என் தாத்தாவிற்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை எனது சகோதரன் ஏமாற்றி எடுத்துக் கொண்டார். அதை மீட்டு தரவேண்டும். இல்லையெனில் தரையில் முட்டி மோதிக் கொண்டு காயப்படுத்தி கொள்வேன். அல்லது வருவாய் வட் டாட்சியர் அலுவலகத்தின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள் வேன் என்று மிரட்டினார். கலெக்டர் நேரடியாக வரவேண்டும் எனவும் கூறி, தலையை நிலத்தில் மோதிக் கொண்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நீடித்தது. உடனே போலீசார் அவரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
போலீசாரின் விசார ணையில் அவர் கடை க்கம்பட்டி கிரா மத்தைச் சேர்ந்தவர் என்ப தும், குடிபோதையில் நிலத் தில் படுத்து போராட்டம் நடத்தியதும், சொத்து அபகரிப்பு தொடர்பாக எந்த அதிகாரிகளிடமும் மனு அளிக்கவில்லை, நீதி மன்றத்தில் வழக்கும் போடவில்லை என்பதும் தெரியவந்தது. எனவே முதியவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
- மது குடித்துவிட்டு, பாட்டில்களை உடைத்து வீசுவதால் விலங்குகளுக்கு பாதிப்பு
- மலை உச்சியில் தடுப்பு வேலி அமைத்து காட்சி முனையை சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த அழகான பள்ளதாக்குகள் உடைய சோலூர் தட்டனேரி காட்சிமுனையம் உள்ளது. இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்து, அங்கு உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
சோலுார் தட்டனேரி காட்சிமுனையம் பகுதியி ல்விடுமுறை தினங்களில் கூட்டம் அலைமோதும். ஆனால் இங்கு பாதுகாப்பு தடுப்பு இல்லை.
எனவே சுற்றுலா பயணி கள் மற்றும் பொதுமக்கள் காட்சிமுனையின் ஆபத் தான பகுதியான மலையின் விளிம்பில் நின்று 'செல்பி' மற்றும் புகைபடம் எடுக் கின்றனர்.மேலும்ஒருசில இளை ஞர்கள், காட்சி முனை பகுதியில் அமர்ந்து மது குடித்துவிட்டு, பாட்டி ல்களை உடை த்து வீசு கின்றனர். இதனா ல்அங்கு வரும் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.
தட்டனேரி பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து சிறிது தூரம் நடந்தால் காடுகள், பைசன் பள்ளத்தாக்கு மலைகள், வளைந்து நெளிந்து செல் லும் மலைப்பாதை மற்றும் மசினகுடி வாழ்விடங்களின் அற்புத அழகிய காட்சியை பார்க்க முடியும்.நீலகிரியின் காடுகள், தேயிலை வயல்கள் மற்றும் நீர்நிலைகள் வழி யாக சோலூருக்கு செல்வது மகிழ்ச்சியான அனுபவம்.
எனவே சோலுார் தட்டனேரி காட்சி முனை பகுதியை சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். அங்கு போதிய பாதுகாப்பு தடுப்புகளை ஏற்படுத்தி, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத், உண்ணாவிரத பந்தலுக்கு நேரில் சென்று வாழ்த்து
- நஞ்ச நாடு தொதநாடு, இத்தலார் மேக்குநாடு நலசங்கத்தினர் உள்பட திரளானோர் பங்கேற்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் நாக்கு பெட்டா படுகர் நலசங்கம் சார்பில் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்சமாக 35 ரூபாய் விலை நிர்ணயிக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.இதில்நஞ்ச நாட்டை சேர்ந்த தொதநாடு நலச்சங்கத்தினர், இத்தலாரை சேர்ந்த மேக்குநாடு நல சங்கத்தினர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நீலகிரி தேயிலை விவசாயிகளின் தொடர் உண்ணாவிரத போராட்டத்துக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்து உள்ளது. அந்த கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத், உண்ணா விரத பந்தலுக்கு வந்தார்.
அப்போது அவரு டன் அமைப்பு செய லாளர் கே.ஆர்.அர்ஜூ னன், ஒன்றிய கழக செயலாளர்கள் சக்ஸஸ் சந்திரன், கடநாடு குமார் மற்றும்கழக நிர்வாகிகள் சென்றிருந்தனர்.நீலகிரி விவசாயிகள் உண்ணா விரத போராட்டத் தில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் கலந்து கொண்டு பேசும் போது, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி மாவட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பார். மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியும் நமக்கு உறுதுணையாக இருப்பார். நீலகிரி விவசாயி களின்உண்ணாவிரத போ ராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
- பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்
- விதிமீறல் கட்டிடங்களை கணக்கெடுத்து ‘சீல்’ வைக்க நடவடிக்கை
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட மட்டகண்டி பகுதியில் ஒருவர் அரசு அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி பிரமாண்டமாக நான்கு அடுக்குமாடி கட்டடம் கட்டி வருதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன,
இதைத் தொடா்ந்து கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலா் ரவிகுமாா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் அந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்படுவது உறுதியானது. இதைதொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகள், மஞ்சூா் போலீசார் உதவியுடன் அந்தக் கட்டடத்துக்கு 'சீல்' வைத்தனா்.
கீழ்குந்தா பேரூராட்சியில் விதிமீறி கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு 'சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
- அருட்தந்தை ஜெயகுமார் தலைமையில் மாலை 6.15 மணிக்கு திருத்தேர்பவனி
- தேவாலய வளாகம் வண்ண -வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எழிலுடன் காட்சியளிக்கிறது
அரவேணு,
கோத்தகிரியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.
கோத்தகிரி ஆலய பங்கு தந்தை அமிர்தராஜ், எம ரால்டு ஆலய பங்குத்தந்தை ஞானதாஸ் ஆகியோர் தலைமையேற்று கொடியேற்றத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் மாலை 5.30 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் திருப்பலிகள் நடக்க உள்ளது.
திருவிழாவின் முக்கிய நாளான 11-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ், ஆங்கிலத்தில் திருப்பலியும், 8 மணிக்கு கூட்டுபாடல் திருப்பலியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அருட்தந்தை ஜெயகுமார் தலைமையில் மாலை 6.15 மணிக்கு திருத்தேர்பவனி நடக்க உள்ளது.
அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன்னை வீற்றிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.
தொடர்ந்து ஆலயத்தில் தேவ நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தேவாலய வளாகம் வண்ண -வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எழிலுடன் காட்சியளிக்கிறது.






