கூடலூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி தலைமை தாங்கினார்.
கூடலூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
Published on

ஊட்டி,

கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கீா்த்தனா, ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவா் சுனில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் கங்காதரன், மேலாண்மை குழுத் தலைவா் மஞ்சு, துணைத் தலைவா் ரசாக் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழக அரசின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com