என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி பகுதியில் தேயிலை செடிகளுடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற விவசாயிகள்
- விவசாயிகளின் கோரிக்கையை தேயிலை வாரியம் நிறைவேற்ற வில்லை.
- 2-ம் நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு விவசாயிகள் தேயிலைச்செடிகளுடன் வந்திருந்தனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு விலை வேண்டி கடந்த 50 ஆண்டு காலமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். தேயிலைக்கு உரிய விலை வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்று நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. ஆனாலும் விவசாயிகளின் கோரிக்கையை தேயிலை வாரியம் நிறைவேற்ற வில்லை. இதனால் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் பச்சை தேயிலைக்கு உரிய விலை வேண்டியும் ,சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரியும் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நாக்கு பெட்டா படுகர் நல சங்கம் சார்பில் தொடர் உண்ணா விரதப் போராட்டம் நடந்து வருகிறது.
2-ம்நாள் போராட்டத்தில் சுண்டட்டி , கொட்டநள்ளி பகுதி சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்ட னர். பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். சுண்டட்டி ஊர் தலைவர் ரவி, கொட்டநள்ளி ஊர் தலைவர் போஜகவுடர், கும்ம நஞ்சன் பூசாரி, ரங்கசாமி பூசாரி, நஞ்சன் பூசாரி ஆகியோர் உண்ணா விரத போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.
2-ம் நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு விவசாயிகள் தேயிலைச்செடிகளுடன் வந்திருந்தனர்.
இதேபோல ஊட்டி பகுதியில் உள்ள கக்குச்சி, இத்தலர் பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் தேயிலை பறிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.






