search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயிகள் உண்ணாவிரத  போராட்டத்திற்கு அ.தி.மு.க ஆதரவு
    X

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அ.தி.மு.க ஆதரவு

    • மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத், உண்ணாவிரத பந்தலுக்கு நேரில் சென்று வாழ்த்து
    • நஞ்ச நாடு தொதநாடு, இத்தலார் மேக்குநாடு நலசங்கத்தினர் உள்பட திரளானோர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் நாக்கு பெட்டா படுகர் நலசங்கம் சார்பில் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்சமாக 35 ரூபாய் விலை நிர்ணயிக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.இதில்நஞ்ச நாட்டை சேர்ந்த தொதநாடு நலச்சங்கத்தினர், இத்தலாரை சேர்ந்த மேக்குநாடு நல சங்கத்தினர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் நீலகிரி தேயிலை விவசாயிகளின் தொடர் உண்ணாவிரத போராட்டத்துக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்து உள்ளது. அந்த கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத், உண்ணா விரத பந்தலுக்கு வந்தார்.

    அப்போது அவரு டன் அமைப்பு செய லாளர் கே.ஆர்.அர்ஜூ னன், ஒன்றிய கழக செயலாளர்கள் சக்ஸஸ் சந்திரன், கடநாடு குமார் மற்றும்கழக நிர்வாகிகள் சென்றிருந்தனர்.நீலகிரி விவசாயிகள் உண்ணா விரத போராட்டத் தில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் கலந்து கொண்டு பேசும் போது, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி மாவட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பார். மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியும் நமக்கு உறுதுணையாக இருப்பார். நீலகிரி விவசாயி களின்உண்ணாவிரத போ ராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

    Next Story
    ×