என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோலூர் காட்சிமுனையில் மலையின் விளிம்பில் நின்று செல்பி எடுக்கும் பயணிகள்
    X

    சோலூர் காட்சிமுனையில் மலையின் விளிம்பில் நின்று செல்பி எடுக்கும் பயணிகள்

    • மது குடித்துவிட்டு, பாட்டில்களை உடைத்து வீசுவதால் விலங்குகளுக்கு பாதிப்பு
    • மலை உச்சியில் தடுப்பு வேலி அமைத்து காட்சி முனையை சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த அழகான பள்ளதாக்குகள் உடைய சோலூர் தட்டனேரி காட்சிமுனையம் உள்ளது. இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்து, அங்கு உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

    சோலுார் தட்டனேரி காட்சிமுனையம் பகுதியி ல்விடுமுறை தினங்களில் கூட்டம் அலைமோதும். ஆனால் இங்கு பாதுகாப்பு தடுப்பு இல்லை.

    எனவே சுற்றுலா பயணி கள் மற்றும் பொதுமக்கள் காட்சிமுனையின் ஆபத் தான பகுதியான மலையின் விளிம்பில் நின்று 'செல்பி' மற்றும் புகைபடம் எடுக் கின்றனர்.மேலும்ஒருசில இளை ஞர்கள், காட்சி முனை பகுதியில் அமர்ந்து மது குடித்துவிட்டு, பாட்டி ல்களை உடை த்து வீசு கின்றனர். இதனா ல்அங்கு வரும் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.

    தட்டனேரி பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து சிறிது தூரம் நடந்தால் காடுகள், பைசன் பள்ளத்தாக்கு மலைகள், வளைந்து நெளிந்து செல் லும் மலைப்பாதை மற்றும் மசினகுடி வாழ்விடங்களின் அற்புத அழகிய காட்சியை பார்க்க முடியும்.நீலகிரியின் காடுகள், தேயிலை வயல்கள் மற்றும் நீர்நிலைகள் வழி யாக சோலூருக்கு செல்வது மகிழ்ச்சியான அனுபவம்.

    எனவே சோலுார் தட்டனேரி காட்சி முனை பகுதியை சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். அங்கு போதிய பாதுகாப்பு தடுப்புகளை ஏற்படுத்தி, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×