என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினர்  வாகன பிரசாரம்
    X

    கோத்தகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினர் வாகன பிரசாரம்

    • வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தல்
    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை

    அரவேணு,

    கோத்தகிரி தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 8 மையங்களில் வாகன பிரசாரம் நடத்தப்பட்து.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இந்த பிரசாரம் நடத்தப்பட்டது.

    இடைக்குழு செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ், தாலுகா குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், ரஞ்சித், சிவகுமார், ஜெயகாந்தன், டி.ஒய்.எப்.ஐ. இடைக்குழு செயலாளர் பகத்சிங், எஸ்.எப்.ஐ. தாலுகா தலைர் சுகுந்தன், டி.ஒய்.எப்.ஐ. நகர கிளை அமைப்பாளர் தனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×