என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூர் வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- வேளாங்கண்ணி ஆலயத்தில் தினமும் நவநாள் திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது.
- பிரான்சிஸ் ஆரோக்கியராஜ் மற்றும் ஏராளமானோர் பங்கு பெற்ற திருப்பலி நடைபெற்றது.
குன்னூர்,
நீலகிரியின் வேளாங்கண்ணி என அழைக்கப்படும் குன்னூர் வெலிங்டன் பாய்ஸ் கம்பெனி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் புனித ஆரோக்கிய அன்னை பிறந்த நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதன் ஒருபகுதியாக கேட்டில்பவுன்ட் பகுதியில் இருந்து ஆலயக்கொடி பவனியாக எடுத்துவரப்பட்டு, மாலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது ஊட்டி மறை மாவட்ட முதன்மைகுரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் கொடியேற்றி திருப்பலி நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். மேலும் வேளாங்கண்ணி ஆலயத்தில் தினமும் நவநாள் திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக அருவங்காடு அன்னாள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பேண்ட் வாத்தியம் இசைக்க பவனி ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் பிரான்சிஸ் ஆரோக்கியராஜ் மற்றும் ஏராளமானோர் பங்கு பெற்ற திருப்பலி நடைபெற்றது.
Next Story






