என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டம்:"

    • தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்த கோரிக்கை
    • சாலையில் கால்நடைகள் திரிவதாகவும் குற்றச்சாட்டு

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகா் மன்றத் தலைவா் வாணீஸ்வரி தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் ஏகராஜ் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் உறுப்பினா் முஸ்தபா பேசும்போது, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. அனைத்து நடைப்பாதை பகுதிகளிலும் செடிகள் ஆக்கிரமித்து பாதை தெரியாத அளவுக்கு உள்ளன. நகராட்சி வாா்டுகளில் தெரு விளக்கு, பாதாள சாக்கடை அடைப்பு, நடைபாதைகள் ஆகியவை முற்றிலும் சேதம் அடைந்து உள்ளன. மேலும் கழிவுநீா், குடிநீா் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என்று குற்றம்சாட்டி னார்.

    உறுப்பினர் ஜார்ஜ் பேசும்போது சாலையில் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகினறனர். சமீபத்தில் ஆம்புலன்ஸ் சென்ற போது சாலையில் கால்நடைகள் படுத்து இருந்தன. எனவே ஆம்புலன்ஸ் டிரைவர் வண்டியில் இருந்து கீழே இறங்கி கல்நடைகளை ஓரமாக விரட்டி விட்டு சென்றதாக வேதனை தெரிவித்தார்.

    ஊட்டி 200 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி பல்வேறு வளா்ச்சி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நகரின் முக்கிய பகுதியான ஏடிசி காந்தி திடல் முன்பு உள்ள பொதுக்கூட்ட மேடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 7-வது வாா்டு உறுப்பினா் விசாலாட்சி விஜயகுமாா் கோரிக்கை வைத்தாா். அப்போது நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகள் உடனடியாக பரிசீலித்து பணிகளை மேற்கொள்வதாக நகா்மன்றத் தலைவா் மற்றும் நகராட்சி ஆணையா் உறுதியளித்தனா்.

    ×