search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டி விவசாயிகள் உண்ணாவிரதம்
    X

    தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டி விவசாயிகள் உண்ணாவிரதம்

    • ஒரசோலை பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
    • தினமும் ஒரு கிராமம் என்ற அடிப்படையில் தொடர் போராட்டம்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அங்குள்ள விவசாயிகள் கடந்த 50 ஆண்டு காலமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என கோர்ட்டும் தீர்ப்பளித்து உள்ளது. ஆனாலும் தேயிலை வாரியம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை.

    இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமுல்படுத்த கோரியும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பொரங்காடு சீமை படுகர் நலச்சங்கம் உள் ளிட்ட பல்வேறு அமைப்புகளின் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரத போராட்டத்துக்கு பார்பத்தி ஹால கவுடர், 19 ஊர் தலைவர் ராமா கவுடர், கைகாரு சீமை தலைவர் நஞ்சாகவுடர் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். தொடர் உண்ணாவிரத போராட்டம் என்பதால் 120 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஊரும் தனித்தனியாக பங்கேற்க உள்ளனர்.

    முதல்நாள் போராட்டத்தில் ஒரசோலை பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற் பட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். இதுதவிர ஊட்டி பகுதியில் நஞ்சுநாடு, இத்தலர் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் உண்ணாவிரத போராட்டம் காரணமாக அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் விவசாயிகள் தேயிலை பறிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    Next Story
    ×