search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் தேயிலை, மலை காய்கறிகளை நோய் தாக்கும் அபாயம்
    X

    ஊட்டியில் தேயிலை, மலை காய்கறிகளை நோய் தாக்கும் அபாயம்

    • நீலகிரியில் பனி பெய்து வருவதால் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குளிரும் சற்று அதிகரித்து உள்ளது.
    • நீலகிரியில் நடப்பாண்டு எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு பருவ மழை பெய்யவில்லை.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. சூரிய வெப்பமும் அதிகரித்து வந்தது.

    இந்த நிலையில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான காந்தல், தலை குந்தா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனி பெய்ய தொடங்கி உள்ளது. அங்கு தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    பொதுவாக நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்டு மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். ஆனால் ஊட்டியில் தற்போது பனி பெய்து வருகிறது.

    இதனால் தேயிலை மற்றும் மலை காய்கறிகளை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். மேலும் நீலகிரியில் பனி பெய்து வருவதால் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குளிரும் சற்று அதிகரித்து உள்ளது.

    இதனால் அதிகாலை நேரங்களில் தேயிலை மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    நீலகிரியில் நடப்பாண்டு எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு பருவ மழை பெய்யவில்லை. கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது லேசான மழை பெய்தாலும் கனமழை பெய்யவில்லை. இதனால், நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் மிகவும் குறைவாக காணப்படுகிறது.

    Next Story
    ×