என் மலர்tooltip icon

    நீலகிரி

    • இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்சேர்க்கை, பாக முகவர்கள்மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து விவாதம்
    • சேலம் இளைஞரணி 2-வது மாநில மாநாட்டிற்கு வருவோர் பெயர் பட்டியல் படிவம் வழங்கப்பட்டது

    ஊட்டி,

    இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்சேர்க்கைக்கு பாக முகவர்கள்மற்றும் பொறுப்பாளர்களை நியமனம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது நீலகிரி மாவட்ட செயலாளர்பா.மு. முபாரக்கிடம்இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்சேர்க்கைக்கு பாக முகவர்கள்மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்தும், சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டிற்கு கலந்து கொள்ேவார் பெயர் பட்டியல் படிவங்களை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், துணை அமைப்பாளர்கள் நாகராஜ் பத்மநாபன் ஆகியோர் வழங்கினர்.

    நிகழ்ச்சியில்குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாவட்ட சிறுபான்மை அமைப்பின் தலைவர் மு.முபாரக், குன்னூர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்நாதன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் செல்லின்ராஜ், கோத்தகிரி இளைஞரணி மீன்ராஜ் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் விருப்பப்பட்ட வேட்பாளருக்கு வாக்களித்தனர்
    • பிரதமருடன் கல்வி, மருத்துவம், கலை, உணவு, பாதுகாப்பு அமைச்சர்களும் பதவியேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் சிறுவர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

    இதில் பிரதமர் வேட்பாளராக மாணவர்கள் அ.அபிஷேக், கி.மைதிலி ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் அதிகாரிகள் விஜயலட்சுமி, தர்ஷிகா, மணிகா முன்னிலையில் தேர்தல் நடந்தது.

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது அனைத்து மாணவர்களின் அடையாள அட்டைகளும் சரிபார்க்கப்பட்டு, ஓட்டுச் சீட்டில் பெயருக்கு அருகில் கையொப்பம் இட்டனர்.

    பின்னர் அவர்களிடம் வேட்பாளர்கள் அடங்கிய தாள் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் விருப்பப்பட்ட வேட்பா ளருக்கு வாக்களித்தனர்.

    அதன்பிறகு தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீஜெயந்தி, ரீட்டா சகாயமேரி, மாலதி ஆகியோர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மாணவன் அபிஷேக் அதிக ஓட்டுகள் பெற்று குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வு செய்யப் பட்டான்.

    சிறுவர் பாராளுமன்றத்தின் புதிய பிரதமரான அபிஷேக்குக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வே.வசந்தா பதவி பிரமா ணம் செய்து வைத்தார். அதன்பிறகு கல்வி அமைச்ச ராக பா.மணிகா, மருத்துவ அமைச்சராக கி.மைதிலி, கலைத்துறை அமைச்சராக லோ.தர்ஷிகா, உணவுத் துறை அமைச்சராக பே.லிபிகா, பாதுகாப்பு துறை அமைச்சராக ரா.விஜய லட்சுமி ஆகியோர் பதவி யேற்று கொண்டனர். அப்போது அவர்கள் பள்ளி யின் மேம்பாட்டுக்காக பாடுபடுவதாக உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள், முதியோர் பயணிக்க ஏற்பாடு
    • பேட்டரி காரில் சென்று அங்கு உள்ள பச்சை புல்வெளிகளை கண்டு மகிழ்ந்தனர்

    ஊட்டி,

    சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி விளங்கு கிறது.

    இங்கு ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடக்கும். செப்டம்பர், அக்டோபரில் 2-வது சீசன் களைகட்டும். ஊட்டியில் தற்போது, 2-வது சீசன் தொடங்கி உள்ளதால் அங்கு சுற்றுலா பயணி களின் வருகை கணிசமாக அதிகரித்து உள்ளது.

    நீலகிரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் அரிதாக காணப்படும் தாவரங்கள் நடப்பட்டு பராம ரிக்கப்பட்டு வரு கின்றன.

    அதிலும் குறிப்பாக இத்தாலியன் பூங்கா, கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், பெரிய புல்வெளி மைதானம் ஆகி யவை, சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக உள்ளது. ஊட்டி தாவர வியல் பூங்காவுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், கைக்குழந்தை களுடன் வரும் பெண்கள் ஆகியோர் மேடான பகுதி யில் உள்ள இத்தாலி யன்பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு பூத்திருக்கும் மலர்களை கண்டு ரசிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

    இதனை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனா ளிகள், முதியவர்களின் வசதிக்காக பேட்டரி வாக னத்தை அறிமுகப்படுத்து வது என பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது.

    அதன்படி ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார் சேவை தற்போது அமலுக்கு வந்து உள்ளது.

    இதில் சுமார் 6 பேர் அமர்ந்து பூங்காவை சுற்றிப்பார்க்க இயலும்.

    எனவே சுற்றுலா பயணி கள் தற்போது பேட்டரி காரில் பயணித்து, தாவிர வியல் பூங்காவை சுற்றி வந்து, அங்கு உள்ள மலர்கள் மற்றும் பச்சை புல்வெளிகளை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

    • ஊட்டியில் வழக்கமாக நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் உறைபனி தாக்கமும், மாத கடைசியில் பனிப்பொழிவும் அதிகரித்து காணப்படும்.
    • வடகிழக்கு பருவமழையே இன்னும் தொடங்காத நிலையில் தற்போது முன்கூட்டியே நீர் பனிப்பொழிவு ஆரம்பித்து உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை பனிக்காலம் நிலவுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சீதோஷ்ண காலநிலை மாறுபாடு காரணமாக நீலகிரியில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்குகிறது. இதற்கிடையே இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழையும் பெய்யவில்லை.

    மேலும் இந்த மாதம் தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழையும் இதுவரை தொடங்கவில்லை.

    ஊட்டியில் வழக்கமாக நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் உறைபனி தாக்கமும், மாத கடைசியில் பனிப்பொழிவும் அதிகரித்து காணப்படும். ஆனால் வடகிழக்கு பருவமழையே இன்னும் தொடங்காத நிலையில் தற்போது முன்கூட்டியே நீர் பனிப்பொழிவு ஆரம்பித்து உள்ளது.

    இந்த நிலையில் நேற்று ஊட்டி நகரில் பெரும்பாலான இடங்களில் நீர் பனிப்பொழிவு காணப்பட்டது. நீர் நிலைகள் அருகே உள்ள புல் மைதானங்கள், தாவரவியல் பூங்கா, மார்க்கெட் பகுதி, குதிரை பந்தயம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் நீர் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.

    அதேபோல் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது நீர் பனி அதிகளவில் காணப்பட்டது.

    தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளிகளில் வழக்கத்தைவிட அதிகளவில் நீர்த்துளிகள் அதிகமாக படர்ந்து இருந்தன. நடைபயிற்சிக்கு சென்றவர்களின் காலணிகள், பனியில் நனைந்து காணப்படுகிறது.

    ஊட்டியில் நீர் பனிப்பொழிவு காரணமாக கடும் குளிர் நிலவுகிறது. எனவே பொதுமக்கள் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    இரவு, அதிகாலை வேளையில் நீர் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் கடும் வெயிலும் அதிகரித்து உள்ளது. இதனால் வருகிற நாட்களில் ஊட்டியில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    ஊட்டியில் கடும் நீர் பனிப்பொழிவு கொட்டுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    • ஆதிவாசிகள் நலச்சங்கம், ஊட்டி லவ்டேல் பள்ளி நிா்வாகம் இணைந்து கட்டிக் கொடுத்தது
    • எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன் கட்டிடத்தை திறந்து வைத்தாா்

    ஊட்டி

    கூடலூா் நகராட்சியில் உள்ள கோடமூலா பழங்குடி கிராமத்துக்கு ஆதிவாசிகள் நலச்சங்கம், ஊட்டி லவ்டேல் லாரன்ஸ் பள்ளி நிா்வாகம் ஆகியவை இணைந்து அங்கன்வாடி மையம் கட்டிக் கொடுத்து உள்ளன. இந்த கட்டடத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    கூடலூா் எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, டி.எஸ்.பி செல்வராஜ், லாரன்ஸ் பள்ளி நிா்வாகி டேவிட் மற்றும் பழங்குடி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா். 

    • பால்யவயது நண்பர்களுடன் கலந்துரையாடி, ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்தனர்
    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்த வேண்டுகோள்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள புனித அந்தோணியார் உயர்நிலை பள்ளி மிகவும் பழமைவாய்ந்தது. இங்கு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் 2003 முதல் 2008-வது ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பால்ய வயது நண்பர்களுடன் கலந்துரையாடி, ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்தனர்.

    அப்போது முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    • மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் தவமணி நிகழ்ச்சியில் பங்கேற்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கினாா்
    • பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    ஊட்டி,

    கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவா் சித்ராதேவி தலைமை வகித்தாா். செயல்அலுவலா் ஹரிதாஸ் முன்னிலை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் தவமணி நிகழ்ச்சியில் பங்கேற்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கினாா். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவா் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மனித உயிர் பலி போவதற்குள் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராமத்தினர் கோரிக்கை
    • கூடுதலாக தானியங்கி கேமராக்கள் பொருத்தி, வனவிலங்குகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிப்பதாக வனத்துறை தகவல்

    ஊட்டி,

    கூடலூர் அடுத்த தேவர்சோலை எஸ்டேட் பகுதியில் புலி தாக்கி மாடு இறந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் எம்.எல்.ஏ பொன்ஜெயசீலன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்திருந்து ஆய்வு மேற்கொண்டார்,

    அப்போது அங்கு வசிக்கும் கிராமத்தினர், மனித உயிர் பலி போவதற்க்குள் அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், பசுவின் உரிமையாளருக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கூடலூர் தாலுக்கா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன்- 1 எஸ்டேட் பகுதியில் மாமிசஉண்ணி தாக்கி கால்நடை உயிரிழந்து இருப்பதால் அந்த பகுதிகளில் கூடுதலாக தானியங்கி கேமராக்கள் பொருத்தி, வனவிலங்குகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என தெரிவித்து உள்ளனர்.

    • சமூகவலைதளத்தில் வீடியோ வைரல்
    • வனத்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் கரடி, காட்டு எருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகமாக உள்ளன. இவை சமீபகாலமாக குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து, அங்கு உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இதற்கிடையே வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு காட்டுஎருமை, நேற்று கோத்தகிரி குடியிருப்பு பகுதி அருகில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வசிக்கும் ஒரு பெண், அகன்ற பாத்திரத்தில் குடிநீர் வைத்து தாகம் தணித்து உள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆபத்து நிறைந்த வன விலங்குகளுக்கு தண்ணீர் வைப்பதும், உணவளித்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும் தொடர்கதயாகி விட்டது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய வாலிபால் பரிசு கோப்பை வழங்கி பாராட்டு

    அரவேணு,

    கோத்தகிரி ரூட் பள்ளியில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் சார்பில் ஆங்கில பள்ளிகளுக்கான தேசிய மகளிர் கைப்பந்து போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு, மராட்டியம், உ.பி, மேற்குவங்காளம், கேரளா, குஜராத், பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சார்ந்த அணிகள் பங்கேற்றன.

    ஆண்களுக்கான கைப்பந்து இறுதிப் போட்டியில் ஏற்கனவே பஞ்சாப், பீகார் அணிகள் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் பெண்கள் கைப்பந்து இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதலாவதாக 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடி மராட்டிய அணியை வீழ்த்தியது

    17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதின. இதில் கர்நாடகா அணி 25-23, 25 -13 என்ற புள்ளிக் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது.

    19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தமிழ்நாடு, மேற்கு வங்காள அணிகள் பங்கு பெற்றன. இதில் தமிழ்நாடு அணி 25 -18 25க்கு 17 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய வாலிபால் வீராங்கனை பவுலினபிரிஷா, மேற்குவங்காள கவுன்சில் மேற்பார்வையாளர் சைலேஷ்பாண்டே, ஜூட்ஷ் பள்ளி நிர்வாகிகள் தன்ராஜன், சாம்ஜத், சரோ ஆகியோர் பரிசு கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    • எதிரே வரும் வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், ஒலி எழுப்ப வேண்டும் என டிரைவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறினர்.
    • சுற்றுலா வாகன டிரைவர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறாா்களா? என்பது குறித்து, பிரீத் அனலைசர் கருவி மூலமும் போலீசார் சோதனை செய்து பார்த்தனர்.

    ஊட்டி:

    தென்காசியில் இருந்து கடந்த வாரம் நீலகிரிக்கு வந்த ஒரு சுற்றுலா பஸ் குன்னூா் மலைப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பயணிகள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வரும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவிட்டார். இதன்படி குன்னூா் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ரவி, உதவி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அடங்கிய குழுவினர், நேற்று அங்கு உள்ள பஸ் நிலையம், ஆம்னி பஸ்-டாக்சி நிறுத்தம் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்றனர்.

    அப்போது அவர்கள் மலைப்பாதைக்கு வந்திருந்த சுற்றுலா வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதிவேகமாக வாகனங்களை இயக்கக்கூடாது, பிரேக் டிரம் சூடாகி இருந்தால் சற்று நேரம் வாகனத்தை நிறுத்தி ஓய்வு எடுத்து செல்லவேண்டும்.

    மலைப்பாதையில் உள்ள கொண்டைஊசி வளைவுகளில் மிகவும் மெதுவாக வாகனங்கள் செல்ல வேண்டும். எதிரே வரும் வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், ஒலி எழுப்ப வேண்டும் என டிரைவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறினர்.

    மேலும் சுற்றுலா வாகன டிரைவர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறாா்களா? என்பது குறித்து, பிரீத் அனலைசர் கருவி மூலமும் போலீசார் சோதனை செய்து பார்த்தனர்.

    இதுதவிர மோட்டார் சைக்கிளில் வேகமாக வருபவா்களை தடுத்து நிறுத்தி, மெதுவாக. கவனத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினா். சுற்றுலா வாகனங்களுக்கான விழிப்புணா்வு பணிகள் தொடா்ந்து நடைபெறும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • தங்களது விவரங்களை அளிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர், உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும்.
    • மேற்கண்ட வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விவரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பித்திட வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சரக துணை பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களிடம் ஆதார் எண், குடும்ப அட்டை எண் கோரி கூட்டுறவுத்துறையின் மூலம் 18.4.2023 அறிவிப்பு வெளியிடப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் மூலம் பலமுறை நேரில் அணுகியும், இதுநாள் வரை தற்போதைய புகைப்படம், ஆதார் எண், குடும்ப அட்டை எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குள் மேற்கூறிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் சமர்ப்பித்திட வேண்டும்.

    எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு சங்கத்தில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே உரிய காலத்திற்குள் தங்களது விவரங்களை அளிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர், உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும்.

    அதன்பின் எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலில் தங்களால் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் அந்த தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்படும். எனவே மேற்கண்ட வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விவரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பித்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×