கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார்- ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்-நீலகிரி மண்டல அதிகாரி அறிக்கை

தங்களது விவரங்களை அளிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர், உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும். மேற்கண்ட வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விவரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பித்திட வேண்டும்.
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார்- ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்-நீலகிரி மண்டல அதிகாரி அறிக்கை
Published on

ஊட்டி,

நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சரக துணை பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களிடம் ஆதார் எண், குடும்ப அட்டை எண் கோரி கூட்டுறவுத்துறையின் மூலம் 18.4.2023 அறிவிப்பு வெளியிடப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் மூலம் பலமுறை நேரில் அணுகியும், இதுநாள் வரை தற்போதைய புகைப்படம், ஆதார் எண், குடும்ப அட்டை எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குள் மேற்கூறிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் சமர்ப்பித்திட வேண்டும்.

எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு சங்கத்தில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே உரிய காலத்திற்குள் தங்களது விவரங்களை அளிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர், உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும்.

அதன்பின் எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலில் தங்களால் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் அந்த தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்படும். எனவே மேற்கண்ட வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விவரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com