search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊட்டியில் நீர் பனிப்பொழிவு தொடங்கியது
    X

    ஊட்டியில் நீர் பனிப்பொழிவு தொடங்கியது

    • ஊட்டியில் வழக்கமாக நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் உறைபனி தாக்கமும், மாத கடைசியில் பனிப்பொழிவும் அதிகரித்து காணப்படும்.
    • வடகிழக்கு பருவமழையே இன்னும் தொடங்காத நிலையில் தற்போது முன்கூட்டியே நீர் பனிப்பொழிவு ஆரம்பித்து உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை பனிக்காலம் நிலவுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சீதோஷ்ண காலநிலை மாறுபாடு காரணமாக நீலகிரியில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்குகிறது. இதற்கிடையே இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழையும் பெய்யவில்லை.

    மேலும் இந்த மாதம் தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழையும் இதுவரை தொடங்கவில்லை.

    ஊட்டியில் வழக்கமாக நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் உறைபனி தாக்கமும், மாத கடைசியில் பனிப்பொழிவும் அதிகரித்து காணப்படும். ஆனால் வடகிழக்கு பருவமழையே இன்னும் தொடங்காத நிலையில் தற்போது முன்கூட்டியே நீர் பனிப்பொழிவு ஆரம்பித்து உள்ளது.

    இந்த நிலையில் நேற்று ஊட்டி நகரில் பெரும்பாலான இடங்களில் நீர் பனிப்பொழிவு காணப்பட்டது. நீர் நிலைகள் அருகே உள்ள புல் மைதானங்கள், தாவரவியல் பூங்கா, மார்க்கெட் பகுதி, குதிரை பந்தயம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் நீர் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.

    அதேபோல் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது நீர் பனி அதிகளவில் காணப்பட்டது.

    தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளிகளில் வழக்கத்தைவிட அதிகளவில் நீர்த்துளிகள் அதிகமாக படர்ந்து இருந்தன. நடைபயிற்சிக்கு சென்றவர்களின் காலணிகள், பனியில் நனைந்து காணப்படுகிறது.

    ஊட்டியில் நீர் பனிப்பொழிவு காரணமாக கடும் குளிர் நிலவுகிறது. எனவே பொதுமக்கள் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    இரவு, அதிகாலை வேளையில் நீர் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் கடும் வெயிலும் அதிகரித்து உள்ளது. இதனால் வருகிற நாட்களில் ஊட்டியில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    ஊட்டியில் கடும் நீர் பனிப்பொழிவு கொட்டுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×