என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பி. எஸ். ஐஸ்வர்யா வரவேற்றார்.
    • நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

    அரவேணு,

    கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் வளர்ந்து வரும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ் நடுஹட்டி கிராமத்தில் உழவர் பெருவிழா நடைபெற்றது.

    மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலாமேரி தலைமை தாங்கினார். நடுஹட்டி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் இ. ராம்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மூலிகை நாற்று தொகுப்புகளை வழங்கினார்.

    உழவர் பெருவிழாவில் பிரதம மந்திரி கௌரவ ஊக்க தொகை பெற விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    முன்னதாக கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பி. எஸ். ஐஸ்வர்யா வரவேற்றார்.

    இறுதியில் துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

    • முறையாக சம்பளம் வழங்காமல் காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு
    • அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம்

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பழமை வாய்ந்த அரசு லாலி மருத்துவமனை நவீனப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே அங்கு நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். எனவே நோயாளிகளை பராமரிக்க ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதனிடையே ஊட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 18 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால் குன்னூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதனைகூட முறையாக வழங்காமல் காலதாமதம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இந்த நிலையில் குன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள்
    • 1.50 லட்சம் மலர்நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 2-ம்கட்ட சீசன் நடைபெறுவது வழக்கம். இதற்காக அங்கு கடந்த ஜூலை மாதமே 1.50 லட்சம் மலர்நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன.

    அவற்றை தோட்டக்கலை பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் இருந்து அரிய வகை மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டு உள்ளன. சிம்ஸ் பூங்காவில் தற்போது அனைத்து மலர் நாற்றுக்களும் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 3122 வரையாடுகள் உள்ளதாக தகவல்
    • வரையாடுகளின் வாழிடத்தை பாதுகாத்து மேம்படுத்த வனத்துறை நடவடிக்கை

    ஊட்டி,

    அருவங்காடு கிளை நூலகத்தில் தமிழக வரையாடு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிளைமாவட்ட வாசகர் வட்டம் செய்திருந்தது.

    நிகழ்ச்சியில் ஓங்கில் இயற்கை அறக்கட்டளை நிறுவனர் ஆசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,"தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டை பாதுகாக்கவும், வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு திட்டம் சுமார் 25.14 கோடி செலவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சுமார் 3122 வரையாடுகள் உள்ளன. அவை 1500 மீட்டர் உயரத்திற்கும் மேல் உள்ள மலைகளில் மட்டும்தான் வாழும். அந்நிய களைச்செடிகள் ஆக்கிரமிப்பு, காட்டுத்தீ ஆகியவை காரணமாக புல்வெளி பரப்புகள் மிகவும் குறைந்து உள்ளதால் வரையாடுகளின் வாழிடம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதை மேம்படுத்த வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். முடிவில்நூலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

    • தாசில்தார் கோமதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்
    • வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர்கள், தாசில்தார் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் கடந்த 5-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதிவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இதன்ஒருபகுதியாக கோத்தகிரி வருவாய்த்துறை சார்பில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாசில்தார் கோமதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், தாசில்தார் அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி பகுதியில் பூங்கா பராமரிப்பின்றி கிடப்பதாக செய்தி வெளியானது
    • பூங்காவை உடனடியாக சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் உத்தரவு

    ஊட்டி,

    ஊட்டி பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்கா பராமரிப்பின்றி கிடந்தது. இதனால் அங்கு நடைபயிற்சிக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதுதொடர்பாக மாலைமலர் பத்திரிகையில் செய்திகள் வெளியாயின. தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி அந்த பூங்காவில் தற்போது சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    • மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத் நேரடியாக வந்திருந்து ஆய்வு
    • நாடாளுமன்ற தேர்தலில் நிர்வாகிகளின் பணிகள் குறித்து ஆலோசனை

    ஊட்டி,

    ஊட்டி சட்டமன்ற தொகுதியில் எப்பநாடு ஊராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை எப்பநாடு ஊராட்சி தலைவர் கண்ணன் என்ற சிவக்குமார் செய்திருந்தார்.

    தொடர்ந்து மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத் எப்பநாடு பகுதிக்கு நேரடியாக வந்திருந்து ஆய்வு செய்தார்.

    அப்போது பூத் கமிட்டி, மகளிர்குழு மற்றும் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை குழுக்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.

    மேலும் நாடாளுமன்ற தேர்தலில் நிர்வாகிகளின் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    அப்போது கிழக்கு ஒன்றிய செயலாளர் பெள்ளி, ஒன்றிய துணை செயலாளர் பீமன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ராமகிருஷ்ணா பள்ளி 9-ம் வகுப்பு மாணவி கீர்த்திகா சாதனை
    • 8-ம் வகுப்பு மாணவன் தியாசிக் வட்டெறிதல் போட்டியில் 4-வது இடம்

    அரவேணு,

    நீலகிரி மாவட்ட கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள், ஊட்டி மைதானத்தில் நடக்கிறது. இதில் நஞ்சநாடு கப்பத்தொரை ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி 9-ம் வகுப்பு மாணவி கீர்த்திகா குண்டெறிதல் போட்டியில் 2-வது இடமும், வட்டெறிதல் போட்டியில் 3-வது இடமும் பிடித்து மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வாகி உள்ளார். மேலும் 8-ம் வகுப்பு மாணவன் தியாசிக் வட்டெறிதல் போட்டியில் 4-வது இடம் பிடித்து உள்ளார்.

    போட்டிகளில் வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமைசேர்த்த மாணவ-மாணவியருக்கு பள்ளி தாளாளர்ஸ்ரீகவிதா கனகராஜ், பள்ளி முதல்வர்ரங்கநாதன் மற்றும் ஆசிரியர்கள் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    • பதறிபோன டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு, பஸ்சில் இருந்த மாணவர்கள் அனைவரையும் எழுப்பினர்.
    • சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி யில் தற்போது 2-வது சீசன் தொடங்கியுள்ளது.

    இதனையடுத்து, ஊட்டிக்கு பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது ஊட்டியில் இதமான காலநிலை நிலவி வருகிறது. வார விடுமுறை தினம் என்பதால், நேற்றும், இன்றும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அவர்கள் ஊட்டியில் நிலவும் சிதோஷ்ண நிலையை அனுபவித்தும் இயற்கை காட்சிகளையும் கண்டு ரசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீலகிரிக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு ஒரு சுற்றுலா பஸ்சில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், நாமக்கல் ராசிபுரத்தில் இருந்து நீலகிரிக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் இன்று அதிகாலை கோவை வந்து, மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரிக்கு மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் மாணவர்கள் அனைவரும் பஸ்சில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

    பஸ் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லார் தூரிப்பாலம் பகுதியில் வந்த போது திடீரென பஸ்சின் பின்பக்க சக்கரம் தீ பிடித்து எரிந்தது. இதனை பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் தங்கள் வாகனத்தை வேகமாக இயக்கி பஸ்சை முந்தி சென்று, டிரைவரிடம் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டதும் பதறிபோன டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு, பஸ்சில் இருந்த மாணவர்கள் அனைவரையும் எழுப்பினர்.

    மாணவர்கள் எழுந்து பார்த்த போது, பஸ்சின் பின் பகுதியில் தீ பிடித்து கொண்டிருந்தது. இதனால் மாணவர்கள் அனைவரும் எழுந்து, அவசர, அவசரமாக வெளியில் ஓடி வந்தனர். சற்று நேரத்தில் பஸ் முழுவதும் தீ பிடித்து எரிய தொடங்கியது.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, பஸ்சில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீ மள,மளவென எரிந்து கொண்டிருந்தால் சற்று சிரமம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

    இந்த தீவிபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. பஸ்சில் இருந்த பொருட்களும் எரிந்து விட்டதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் அனைவரும் உயிர் தப்பினர்.

    பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சரியான நேரத்தில் பார்த்து டிரைவரிடம் சொன்னதாலும், மாணவர்கள் உடனடியாக பஸ்சை விட்டு கீழே இறங்கியதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பஸ் எதனால் தீ பிடித்து எரிந்தது, தீபிடித்தற்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த வாரம் தென்காசியில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலையில் ஊட்டி மலைப்பாதையில் மீண்டும் சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்களின் சுற்றுலா பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகளையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • சீகூர் வனப்பகுதியில் 2 குட்டிகள் உடல்நலக்குறைவால் இறந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
    • ஊட்டி எமரால்டு பகுதியில் 2 புலிகளை விஷம் வைத்து கொன்றதாக ஒருவரை வனத்துறையினர் கைது செய்து உள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 புலிகள் திடீரென பலியாகின. அவை எப்படி இறந்தன என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இந்த நிலையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி ரமேஷ், இந்திய வனவிலங்கு நிறுவன மண்டல துணை இயக்குநர் கிபாசங்கர், சென்னை வனவிலங்கு ஆய்வர் டோக்கி ஆதில் லையா அடங்கிய குழுவினர், கடந்த மாதம் 25-ந்தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வந்தனர்.

    அப்போது அவர்கள் புலிகள் இறந்து கிடந்த பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரடியாக களஆய்வு நடத்தினர். பின்னர் இதுதொடர்பான இறுதிகட்ட அறிக்கை, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தலைமை வனஉயிரின காப்பாளர் சீனிவாராவ்ரெட்டி தற்போது அந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 2006-ம்ஆண்டு 56 புலிகள் மட்டுமே இருந்தன. ஆனால் இங்கு தற்போது 114 புலிகள் உள்ளன. முதுமலை புலிகள் அடர்ந்த பகுதியாக உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் விலங்குகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

    பொதுவாக வயது முதிர்ந்த பெண் புலிகள் ஒரு பிரசவத்தில் 5 குட்டிகள் வரை ஈனும்.

    இதில் 50 சதவீதம் குட்டிகள் நோய், பட்டினி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பலியாக வாய்ப்பு உள்ளது. மேலும் இளைய வயது பிரசவம் காரணமாகவும் பிறந்த குட்டிகள் பலி யாகக்கூடும். சீகூர் வனப்பகுதியில் 2 குட்டிகள் உடல்நலக்குறைவால் இறந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

    சின்னக்குன்னூர் பகுதியில் இறந்த 4 குட்டிகள் 2 மாதங்களே ஆனவை. அவைகளுக்கு உணவு தேடி தாய்ப்புலி வெகுதூரம் சென்றிருக்கலாம். இதனால் தான் அந்த புலிகள் பலியாக நேர்ந்து உள்ளது.

    மாமிச உண்ணிகளுக்கு இடையே உட்பூசல் என்பது ஒரு பொதுவான நிகழ்வு. இதன்காரணமாகவே நடுவட்டம், கார்குடி ஆகிய பகுதிகளில் புலிகள் பலியாகி உள்ளன. ஊட்டி எமரால்டு பகுதியில் 2 புலிகளை விஷம் வைத்து கொன்றதாக ஒருவரை வனத்துறையினர் கைது செய்து உள்ளனர்.

    சின்னக்குன்னூர், சீகூர் ஆகிய வனப்பகுதிகளில் வனத்துறை சார்பில் முறையே 40, 16 இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    சின்னக்குன்னூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் சிக்கிய 15-ல் 4 பெண் புலிகள். சீகூர் பகுதியில் தென்பட்ட 5-ல் 4 பெண் புலிகள் ஆகும். சின்னக்குன்னூர் பகுதியில் இறந்த 4 குட்டிகளை ஈன்ற தாய்ப்புலி இரைதேடி அடர்ந்த காட்டுக்குள் வெகு தூரம் வரை சென்று இருக்கக்கூடும். அதனை தேடி கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் தொட ர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • குடியிருப்பு பகுதியை நோக்கி வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • கும்கி யானைகள் தற்போது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூா் வட்டம், சேரம்பாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட சப்பந்தோடு பகுதியில் அண்மைக் காலங்களாக கட்டபொம்மன் என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளது.

    இந்த காட்டு யானை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. அவ்வாறு வரும் யானை விளைநிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

    தொடர்ந்து குடியிருப்பு பகுதியை நோக்கி வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதனை தொடர்ந்து வனத்துறையினர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வரும் காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த யானைகள் ஊருக்குள் நுழையும் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியைச் செய்து வருகின்றன.

    சேரம்பாடி மண்டாசாமி கோவில் பகுதி மற்றும் செவியோடு பகுதியில் இந்த கும்கி யானைகள் தற்போது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.

    • ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் நடந்தது
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது

    ஊட்டி,

    ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆதிஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி ராஜேந்திர மகாசுவாமிகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட பள்ளிகளுக்கு இடையே 2 நாள் இறகுப்பந்து போட்டி நடந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 100 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் போட்டியை தொடங்கி வைத்தார். துணைமுதல்வர் கே.பி.அருண், வடிவேலன், காளிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக க்ளென்மார்க் நிறுவன மண்டல விற்பனை மேலாளர் கிளாட்சன் பங்கேற்றார்.

    தொடர்ந்து ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் மற்றும் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போட்டியின் செயலாளர்கள் சிவராமகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், கல்லூரி விளையாட்டு அலுவலர் சிவபிரசாத் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×