என் மலர்
நீலகிரி
- மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது
- கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளா் ரா.மது அறிவிப்பு
ஊட்டி,
ஊட்டி ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மைக் கிளையில் நடப்பு ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப் பதிவாளா் ரா.மது கலந்து கொண்டு பேசியதாவது:
கூட்டுறவு பயிற்சியை ஆா்வம், முழு ஈடுபாட்டுடன் பயில வேண்டும். கூட்டுறவு சங்கத்தின் இருப்பு நிலை குறிப்பு தயாரிப்பதற்கான பயிற்சி, கணக்கு பதிவியல் மற்றும் கூட்டுறவு தணிக்கை பாடங்களின் மூலம் கற்றுத்தரப்படும்.
நடப்பு ஆண்டுக்கான முழுநேர பட்டயப்பயிற்சி மாணவா் சோ்க்கைக்காண கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அத்தாட்சி செய்த நகல்களுடன் பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் நேரடியாக வந்திருந்து பயிற்சி நிலைய முதல்வரை அணுகலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் ராமலிங்க கூட்டுறவு சங்க துணைப்பதிவாளா் கே.ஆா்.விஜயகணேஷ், விரிவுரையாளா்கள் ஜெ. மணி, சந்திரசேகா் மற்றும் பயிற்சி மாணவ, மாணவியா் ஆகியோா் பங்கேற்றனா்.
- எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை
- 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள். வியாபாரிகள் பங்கேற்பு
குன்னூர்,
தமிழக வருவாய்த்துறை சார்பில தகவல் உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, குன்னூர் பஸ் நிலையத்தில் நடந்தது. கோட்டாட்சியர் புஷ்ண குமார் தலைமை தாங்கினார். குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள். வியாபாரிகள். டிரைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு தகவல் உரிமை சட்டத்துக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பித்தால் 30 நாளில் சம்பந்தப்பட்ட துறைகள் பதில் அளிக்க வேண்டும் என்பவை தொடர்பாக வருவாய்துறை ஊழியர்கள் விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர்.
- கலெக்டர் அருணா, முதியோர்களுடன் அமர்ந்து ஒன்றாக உணவு சாப்பிட்டார்.
- கலெக்டர் கண் கலங்கியதை பார்த்ததும், அங்கிருந்த சக அதிகாரிகள் மற்றும் மூதாட்டிகள் அவரை தேற்றி சமாதானப்படுத்தினர்.
ஊட்டி:
கூடலூர் நகராட்சிக்குட்பட்ட மேல் கூடலூரியில் ராமகிருஷ்ணா முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது.
இந்த முதியோர் இல்லத்தில், சமூக நலத்துறை சார்பில் உலக முதியோர் தினவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலெக்டர் அருணா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அங்கிருந்த முதியவர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களை கவுரவப்படுத்தினார். மேலும் முதியோர் ஓய்வூதியம் பெறும் 100 வயதினை அடைந்த ஆண் மற்றும் 2 பெண் என மொத்தம் 3 முதியவர்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான சட்டை, வேட்டி மற்றும் துணிகளையும், பெண்களுக்கு ரூ.1000 மதிப்பிலான புடவையும், பெட்ஷீட்டுகளையும் வழங்கினார்.
பின்னர் கலெக்டர் அருணா, முதியோர்களுடன் அமர்ந்து ஒன்றாக உணவு சாப்பிட்டார். முன்னதாக முதியோர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அப்போது மூதாட்டிகள் சிலர், தாயின் பெருமை பற்றிய பாடலை இசைக்கவிட்டு அதற்கு ஏற்ப நடனமாடினர். 'ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா... நீயும் அம்மாவ வாங்க முடியுமா...' என்ற சினிமா பாடலும் ஒலிபரப்பப்பட்டு மூதாட்டிகள் நடனம் ஆடினார்கள். அந்த பாடல் வரிகளை கேட்டதும் கலெக்டர் அருணா திடீரென உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி விட்டார்.
சிறிது நேரம் கண் கலங்கியபடியே மூதாட்டிகளின் நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். கலெக்டர் கண் கலங்கியதை பார்த்ததும், அங்கிருந்த சக அதிகாரிகள் மற்றும் மூதாட்டிகள் அவரை தேற்றி சமாதானப்படுத்தினர். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.
இதைத்தொடர்ந்து சிறப்பாக நடனம், பாட்டு பாடிய முதியோர்களின் திறமையை கலெக்டர் அருணா பாராட்டினார். இதில் கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா தேவி, நாவா சங்க செயலாளர் ஆல்வாஸ், ஸ்ரீராமகிருஷ்ணா முதியோர் இல்ல நிர்வாகி வசந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாலை அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
- தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அருவங்காடு,
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் குன்னூரில் 61 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இதில் அவர்களுக்கு மாலை அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மகப்பேறு உதவி திட்டங்கள், கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் குன்னூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் மூலம் ரூ.18 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் ரூபாய மதிப்பிலான ஊட்டசத்து பெட்டகம் ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.
குன்னூர் லயன்ஸ் கிளப் தலைவர் அஸ்வினி தன்வானி, பொருளாளர் நளினி லட்சுமணன், செயலாளர் ஸ்ரதா, உறுப்பினர்கள கோபால், முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொருளுதவி செய்த தி.மு.க நகரமன்ற துணை தலைவர் வாஸிம் ராஜாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர பூங்கொடி, மேற்பார்வையாளர் கண்ணம்மா, கணகாணிப்பாளர் தேவரம்மா, வட்டார ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
- பணிகளில் குளறுபடி காரணமாக தரக்குறைவு இருப்பதாக புகாா்கள் எழுந்து உள்ளன.
- புனரமைப்பு பணிகளின் தரமும் கேள்விக்குறியாக உள்ளன என தன்னாா்வலா்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆங்கிலேயா் காலத்தில் கட்டபட்டது. இன்றளவும் பழமை மாறாமல் வலிமையாகவும், கம்பீரமாகவும் மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலும் காட்சி தருகிறது.
நூற்றாண்டுகளை கடந்தும் கட்டிடங்கள் உறுதியாக உள்ளன. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. அந்த பணிகளில் குளறுபடி காரணமாக தரக்குறைவு இருப்பதாக புகாா்கள் எழுந்து உள்ளன.
ஊட்டி கலெக்டர் அலுவலக முகப்பில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பெயா்ப் பலகை சிதலமடைந்த நிலையில் உள்ளது. அதில் 'ஆா்' எழுத்து பதித்த சில நாட்களிலேயே கீழே விழுந்து விட்டது. எனவே ஒட்டுமொத்த புனரமைப்பு பணிகளின் தரமும் கேள்விக்குறியாக உள்ளன என தன்னாா்வலா்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
- முன்னாள் ராணுவ வீரா்கள், விதவைகள் உள்பட 869 பேர் கலந்து கொண்டனா்.
- நந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஊட்டி,
வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம், தக்ஷின்பாரத் ஆகியவை சாா்பில் நஞ்சன்புரம் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் ராணுவ வீரா்களுக்கான குறைதீா்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவ வீரா்கள், விதவைகள் உள்பட 869 பேர் கலந்து கொண்டனா்.
மேலும் முன்னாள் ராணுவத்தினரின் பங்களிப்பு நலத்திட்டம், ஜில்லா சைனிக் வாரியம் மற்றும் மீள்குடியேற்ற இயக்குநரகம் தொடர்பாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து நந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
பின்னர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவா்களின் கலாசார நிகழ்ச்சிகள், மெட்ராஸ் ரெஜிமென்டல் மையத்தின் பேண்ட் சிம்பொனியும் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தின் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அவ்வப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் தென்படுவது வழக்கம்.
- மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் மரநாய் வனபகுதிக்குள் சென்று மறைந்தது
அருவங்காடு,
குன்னூர் பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, கடமான், மரநாய், குரங்குகள் என அரியவகை விலங்குகள் அதிகமாக உள்ளன. இவை அவ்வப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் தென்படுவது வழக்கம்.
இந்த நிலையில் குன்னூர் தீயணைப்பு அலுவலக பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மரநாய் தென்பட்டது. இதனை உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்தனர். மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் மரநாய் வனபகுதிக்குள் சென்று மறைந்தது
- துர்காதேவி, சிவன் உள்ளிட்ட வேடங்களை தத்ரூபமாக அணிந்து நடனமாடி அசத்தல்
- பழங்கால ராணிகள் போல உடையணிந்து வந்து அணிவகுப்பும் நடத்தப்பட்டது
அருவங்காடு,
இந்தியாவில் நவராத்திரி விழா 9 நாட்கள் நடக்கும். அப்போது அம்மனின் 9 அவதாரங்களை நவதுர்காவிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி முதல் 24-ந்தேதிவரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இதனைமுன்னிட்டு குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரி மாணவிகள் கடவுள் வேடங்களான துர்காதேவி, சிவன், கர்நாடகாவின் கிராம கடவுள் காந்தாரா உள்ளிட்ட வேடங்களை தத்ரூபமாக அணிந்து நடனமாடி அசத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பழங்கால ராணிகள் போல உடையணிந்து வந்து அணிவகுப்பும் நடத்தப்பட்டது.
- சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ள பேட்டரிகாருக்கு கட்டணம் நிர்ணயம்
- 2 கி.மீ.வரை சுற்றிப்பாா்க்க நபா் ஒருவருக்கு தலா ரூ.30
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இங்கு வரும் முதியோா், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பூங்காவை சுற்றிப்பாா்க்க வசதியாக, சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் பேட்டரி காா் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பூங்காவை 2 கி.மீ.வரை சுற்றிப்பாா்க்க நபா் ஒருவருக்கு தலா ரூ.30 வீதம் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலை இணைஇயக்குநா் சிபிலாமேரி தெரிவித்து உள்ளாா்.
- மரப்பாலம் அருகே சென்றபோது பனிமூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
- அதிர்ஷ்டவசமாக கார் கவிழ்ந்தபோது கார்களின் 2 கதவுகளும் திறந்துள்ளது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 20 பேர் நாமக்கல் அருகே கொல்லிமலையில் உள்ள கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வேன் மற்றும் கார்களில் நேற்று இரவு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் சந்தோஷ்குமார் (வயது 51) மற்றும் அவரது உறவுப்பெண் சந்தியா (14) ஆகியோர் ஒரு காரில் வந்தனர். கார் அதிகாலை 3 மணி அளவில் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.
மரப்பாலம் அருகே சென்றபோது பனிமூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. சந்தோஷ்குமார் சிரமத்துடன் காரை ஓட்டிச் சென்றார். மரப்பாலம் என்ற இடத்தில் சென்றபோது கார் நிலைதடுமாறி ரோட்டோரம் இருந்த தடுப்பை தாண்டி பள்ளத்தில் பாய்ந்தது. 90 அடி ஆழ பள்ளத்தில் அந்த கார் கவிழ்ந்தது.
அதிர்ஷ்டவசமாக கார் கவிழ்ந்தபோது கார்களின் 2 கதவுகளும் திறந்துள்ளது. இதனால் சந்தோஷ்குமாரும், சந்தியாவும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். காரில் இருந்த அவர்கள் 2 பேரும் காயத்துடன் தப்பினர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து குன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பள்ளத்தில் விழுந்த காரை மீட்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தற்போது விபத்து நடந்த இடம் அருகே உள்ள வளைவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 9 பேர் பலியாகினர். அதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் சுற்றுலா பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்த மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்.
அடுத்தடுத்து அந்த பகுதியில் தொடர் விபத்துக்கள் நடந்து வருவதால் மலைப்பாதையில் வாகனங்களை மெதுவாக, பாதுகாப்புடன் இயக்குமாறு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
- படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக பாராளுமன்றத்தில் பேசியதாக கூறினார்.
- ‘இந்தியா’ கூட்டணி வலுவான நிலையில் இல்லை.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த மேல் அனையட்டி கிராமத்தில் மாநிலங்களவை உறுப்பினா் நிதியின் கீழ் சமுதாயக் கூடம் கட்டுவதற்காக ரூ. 20 லட்சம் நிதியை ஜி.கே.வாசன் எம்.பி. ஒதுக்கீடு செய்திருந்தாா். இதையடுத்து இங்கு சமுதாயக் கூடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக கோத்தகிரி வந்த ஜி.கே.வாசனுக்கு படுகா் இன மக்களின் பாரம்பரிய முறைப்படி மாவட்டத் தலைவா் மனோஜ் காணி, மாவட்ட நிா்வாகி பெள்ளன் ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல் அனையட்டி கிராமத்தில் சமுதாயக் கூடத்தை அவா் திறந்து வைத்தாா்.
பின்னா் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
படுகா் சமுதாயத்தை பழங்குடியின பட்டியலில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலங்களவையில் பேசியுள்ளேன். தொடா்ந்து இதற்காக முயற்சி செய்வேன். இந்த சமுதாய மக்களின் வளா்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சைத் தேயிலைக்கு உரிய விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'இந்தியா' கூட்டணி வலுவான நிலையில் இல்லை. இந்தக் கூட்டணியால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. மக்கள் நினைக்கும் வலுவான கூட்டணி தமிழகத்தில் அமையும். அதில் முக்கிய கட்சியாக த.மா.கா. இருக்கும்.
காவிரி நீா் விவகாரத்தில் கா்நாடக அரசு மனிதாபி மானமின்றி செயல்படு கிறது. இந்தப் பிரச்சினையில் கா்நாடக அரசு நடுநிலையு டன் செயல்பட வேண்டும். காவிரி நதிநீா் ஆணையம் நிா்ணயிக்கும் அளவு கூட வழங்க மாட்டோம் என்று சொல்வது ஏற்புடையதல்ல. எனவே, காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது குறித்து யோசிக்காமல் இதுகுறித்து தமிழக அரசு நேரடியாகப் பேசி முடிவெடுக்க வேண்டும்.
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூரில் டெல்டா மாவட்ட விவசாயிகள் சாா்பில் நடைபெற உள்ள ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வனஉயிரின வாரவிழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வனச்சரக செல்வராஜ், ராம்பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்றனர்.
கோத்தகிரி முக்கிய சாலைகள் வழியாக பேரணி எடுத்துச் சென்று கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
கோத்தகிரி லாங்வுட் சோலை பாதுகாப்போம் குழு கோத்தகிரி வனச்சராகம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் கோத்தகிரி அருகில் உள்ள பெண்கள் மேல் நிலையில் பள்ளியில் நடைபெற்றது
இதில் லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே ஜே ராஜு கலந்து கொண்டு காடுகள் மற்றும் வன விலங்குகள் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தரங்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது






