search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nilgris"

    • 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை
    • கால்நடை உரிமையாளர்களுக்கு தாது உப்புக்கலவை தொகுப்புகள் வழங்கப்பட்டது

    ஊட்டி,

    ஊட்டியில் கூட்டுறவு சங்கத்தின் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு சங்க வார விழா நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாள் நிகழ்ச்சி ஊட்டி அடுத்த கோக்கால் ஆதிவாசி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.

    அப்போது நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சாா் பதிவாளா் மற்றும் செயலாட்சியா் சி.அய்யனாா் முன்னிலையில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் கால்நடை டாக்டர்கள் சிவசங்கா், டேவிட் மோகன், விஜயபிரபாகரன் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு மருத்துவம் பார்த்தனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பூச்சி மருந்து வழங்குதல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்குதல் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் கால்நடை உரிமையாளர்களுக்கு தாது உப்புக்கலவை தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு (பால்வளம்) சாா் பதிவாளா் ஒ.கே.பிரேமன், முதுநிலை ஆய்வாளா்கள் சுந்தரநடராஜன், சிவராஜ், கோக்கால் ஆதிவாசி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க செயலாளா் மகாலிங்கம் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    • மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர்
    • 7-ம் வார்டு நகர்மன்ற உறுப்பினர் விசாலாட்சி பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பெத்தலகம் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வெளியூருக்கு செல்கின்றனர்.

    முன்னதாக அவர்கள் நீலகிரி எம்.பி ஆ.ராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், 7-ம் வார்டு நகர்மன்ற உறுப்பிருமான விசாலாட்சி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

    • ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா தலைமையில் நடைபெற்றது
    • பள்ளி இடைநிற்றல், போக்சோ வழக்குகள் குறித்து விவாதம்

    ஊட்டி,

    கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் ஒன்றிய தலைவர் கீர்த்தனா தலைமையில் நடைபெற்றது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு), வட்டார மருத்துவ அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் , கல்வி, காவல், வருவாய்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்ட ஊழியர்கள், தாய்மை, நாவா அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகள், பள்ளி இடைநிற்றலை குறைக்க நடவடிக்கை எடுப்பது, போக்சோ வழக்குகள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.

    • அவ்வப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் தென்படுவது வழக்கம்.
    • மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் மரநாய் வனபகுதிக்குள் சென்று மறைந்தது

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, கடமான், மரநாய், குரங்குகள் என அரியவகை விலங்குகள் அதிகமாக உள்ளன. இவை அவ்வப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் தென்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் குன்னூர் தீயணைப்பு அலுவலக பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மரநாய் தென்பட்டது. இதனை உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்தனர். மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் மரநாய் வனபகுதிக்குள் சென்று மறைந்தது

    • 32 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
    • சம்பந்தப்பட்ட 5 கடைகளுக்கு உணவுத்துறை அதிகாரிகள் நோட்டீஸ்

    ஊட்டி,

    நாமக்கல் மாவட்டத்தில் கெட்டுப்போன இறைச்சி உணவு (சவர்மா) சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அசைவ உணவகங்களில் உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் நந்தகுமார், சிவராஜ் அடங்கிய குழுவினர், ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து கமர்சியல் சாலை, பாரதியார் காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு கெட்டுப்போன 32 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் பல்வேறு அசைவ உணவகங்களில் விதிமுறை மீறல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட 5 கடைகளுக்கு உணவுத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் கூறுகையில், பழைய கெட்டுப்போன இறைச்சிகளை உணவகங்களில் பயன்படுத்துவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    ×