search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "GK Vasan interview"

  • படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக பாராளுமன்றத்தில் பேசியதாக கூறினார்.
  • ‘இந்தியா’ கூட்டணி வலுவான நிலையில் இல்லை.

   ஊட்டி,

  நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த மேல் அனையட்டி கிராமத்தில் மாநிலங்களவை உறுப்பினா் நிதியின் கீழ் சமுதாயக் கூடம் கட்டுவதற்காக ரூ. 20 லட்சம் நிதியை ஜி.கே.வாசன் எம்.பி. ஒதுக்கீடு செய்திருந்தாா். இதையடுத்து இங்கு சமுதாயக் கூடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதன் திறப்பு விழா நடைபெற்றது.

  இதில் பங்கேற்பதற்காக கோத்தகிரி வந்த ஜி.கே.வாசனுக்கு படுகா் இன மக்களின் பாரம்பரிய முறைப்படி மாவட்டத் தலைவா் மனோஜ் காணி, மாவட்ட நிா்வாகி பெள்ளன் ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல் அனையட்டி கிராமத்தில் சமுதாயக் கூடத்தை அவா் திறந்து வைத்தாா்.

  பின்னா் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  படுகா் சமுதாயத்தை பழங்குடியின பட்டியலில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலங்களவையில் பேசியுள்ளேன். தொடா்ந்து இதற்காக முயற்சி செய்வேன். இந்த சமுதாய மக்களின் வளா்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சைத் தேயிலைக்கு உரிய விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'இந்தியா' கூட்டணி வலுவான நிலையில் இல்லை. இந்தக் கூட்டணியால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. மக்கள் நினைக்கும் வலுவான கூட்டணி தமிழகத்தில் அமையும். அதில் முக்கிய கட்சியாக த.மா.கா. இருக்கும்.

  காவிரி நீா் விவகாரத்தில் கா்நாடக அரசு மனிதாபி மானமின்றி செயல்படு கிறது. இந்தப் பிரச்சினையில் கா்நாடக அரசு நடுநிலையு டன் செயல்பட வேண்டும். காவிரி நதிநீா் ஆணையம் நிா்ணயிக்கும் அளவு கூட வழங்க மாட்டோம் என்று சொல்வது ஏற்புடையதல்ல. எனவே, காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது குறித்து யோசிக்காமல் இதுகுறித்து தமிழக அரசு நேரடியாகப் பேசி முடிவெடுக்க வேண்டும்.

  தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூரில் டெல்டா மாவட்ட விவசாயிகள் சாா்பில் நடைபெற உள்ள ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

  • எதிர்க்கட்சிகளின் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவம் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
  • தமிழக ஆளுநர் தனது சட்டத்திற்கு உட்பட்டு பணிகளை செய்து வருகிறார்.

  மதுரை

  தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மதுரையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  பாரதீய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஆசையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளன. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவமாகும். பா.ஜ.க.வுடன் தனியாக மோதினால் வெல்ல முடியாது என்பதால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தேர்தலை த.மா.கா. சந்திக்கும். விரைவில் எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய உள்ளன.

  டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடினால் தான் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை காக்க முடியும். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது அமலாக்கத் துறை சோதனையை சரி என்கிறது. ஆனால் ஆளுங் கட்சியாக மாறிய பின் தவறு என்கிறது.

  தி.மு.க. மக்களுக்கு அதிக வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியுள்ளது. தமிழக ஆளுநர் தனது சட்டத்திற்கு உட்பட்டு பணிகளை செய்து வருகிறார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத் தலை வர் ராஜாங்கம், நிர்வாகிகள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், சித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • கோவையில் நடந்த சிலிண்டர் விபத்து குறித்து பல கோணங்களில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  • பொதுமக்கள் அச்சத்தில் இருக்கும்போது உண்மையை வெளிக்கொண்டு வந்து தவறானவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

  கோவை,

  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

  அப்போது அவர் கூறியதாவது:-

  கோவையில் நடந்த சிலிண்டர் விபத்து குறித்து பல கோணங்களில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் சந்தேகமும் வலுத்து கொண்டே போகிறது. எனவே என்.ஐ.ஏ. விசாரணை இதன் உண்மை நிலையை வெளிப்படுத்தும் என நம்புகிறேன்.

  இது போன்ற தவறான நிகழ்வுகளுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

  மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்னென்ன தொடர்பு இருக்கிறது. அவர்களின் பின்னணி நோக்கம் என்ன? ஏன் இது போன்ற தேசிய விரோத செயல்களில் ஈடுபட துணிந்தார்கள் என்பதெற்கெல்லாம் இன்னும் பதில் இல்லை.

  பொதுமக்கள் அச்சத்தில் இருக்கும்போது உண்மையை வெளிக்கொண்டு வந்து தவறானவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

  மக்களுடைய அச்சத்தை போக்கக்கூடிய நிலையை அரசு உறுதியுடன் எடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். மேலும் 31-ந் தேதி பந்த் என்று அறிவித்துள்ள பா.ஜ.க அறிவிப்பானது கோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மட்டும் தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ×