என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டி மேலாண்மை நிறுவனத்தில் கூட்டுறவு படிப்பு பயிற்சி தொடக்கம்
- மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது
- கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளா் ரா.மது அறிவிப்பு
ஊட்டி,
ஊட்டி ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மைக் கிளையில் நடப்பு ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப் பதிவாளா் ரா.மது கலந்து கொண்டு பேசியதாவது:
கூட்டுறவு பயிற்சியை ஆா்வம், முழு ஈடுபாட்டுடன் பயில வேண்டும். கூட்டுறவு சங்கத்தின் இருப்பு நிலை குறிப்பு தயாரிப்பதற்கான பயிற்சி, கணக்கு பதிவியல் மற்றும் கூட்டுறவு தணிக்கை பாடங்களின் மூலம் கற்றுத்தரப்படும்.
நடப்பு ஆண்டுக்கான முழுநேர பட்டயப்பயிற்சி மாணவா் சோ்க்கைக்காண கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அத்தாட்சி செய்த நகல்களுடன் பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் நேரடியாக வந்திருந்து பயிற்சி நிலைய முதல்வரை அணுகலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் ராமலிங்க கூட்டுறவு சங்க துணைப்பதிவாளா் கே.ஆா்.விஜயகணேஷ், விரிவுரையாளா்கள் ஜெ. மணி, சந்திரசேகா் மற்றும் பயிற்சி மாணவ, மாணவியா் ஆகியோா் பங்கேற்றனா்.






