என் மலர்
நீலகிரி
ஊட்டியில் தொடர் கனமழையால் நிவாரண முகாம்களில் 900 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஊட்டி:
இந்திய வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்தில்கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது. குறிப்பாக நாளை(சனிக்கிழமை) கனமழை பெய்யும் என்று தெரிவித்து இருக்கிறது. கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு வெள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டது. நடப்பாண்டில் மரங்கள் விழுந்து மின் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு மற்றும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மழைநீர் செல்லக்கூடிய மிகவும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அப்பகுதிகளில் 25 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. முக்கியமாக உயிர்ச்சேதம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எமரால்டு மின்வாரிய குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், இந்திரா நகர், சத்யா நகர், வினோபாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 100 பேர் எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு அறைக்கும் குறிப்பிட்ட நபர்கள் சமூக இடைவெளி விட்டு தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு தேவையான உணவு உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால், தடுப்பு நடவடிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் மழையால் உடல்நிலை பாதிக்கப்படாமல் இருக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் மருத்துவ குழுவினர் தினமும் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்படுகிறது. ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா, சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்களா என்று கண்காணித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை நிவாரண முகாம்களில் 900 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இரும்பு கேட்டில் தலை சிக்கி தவித்த குட்டியை மீட்க தாய் கரடி பாச போராட்டம் நடத்தியது. இதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று குட்டியை பத்திரமாக மீட்டனர்.
கோத்தகிரி:
கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் வார்விக் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த பகுதியில் எஸ்டேட் மேலாளர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் நுழைவு வாயில் கேட் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 6 மணி அளவில் கரடியொன்று 2 குட்டிகளுடன் தனியார் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியே வந்தது. அப்போது ஒரு குட்டி கரடி அங்கு பூட்டி வைக்கப்பட்டிருந்த கேட்டின் நுழைவு வாயில் கேட்டின் கம்பிகளின் இடுக்குகள் வழியாக வெளியே உள்ளே செல்ல முயற்சித்ததாக தெரிகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக குட்டி கரடியின் தலை அங்கிருந்த கேட் கம்பிகளுக்கு இடையே சிக்கியது. இதனால் அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த குட்டி ஆக்ரோஷமாக கத்தியது. இதைக்கண்ட தாய் கரடி மற்றொரு குட்டியை தன் முதுகில் சுமந்தவாறு கத்தியபடி தனது குட்டியை மீட்கும் முயற்சியில் பாசப்போராட்டம் நடத்தியது
கரடிகளின் சத்தம் கேட்டு தனியார் எஸ்டேட் மேலாளர் வெளியே வந்து பார்த்தார். குட்டி கரடியின் தலை கேட்டில் சிக்கியதையும், அதன் அருகில் 2 கரடிகள் நிற்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் கோத்தகிரி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு குட்டியுடன் நின்றிருந்த கரடியை அங்கிருந்து துரத்தினார்கள். பிறகு அவர்கள் கேட்டின் இரும்பு கம்பிக்கு இடையில் தலை சிக்கி தவித்த குட்டி கரடியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கேட்டில் உள்ள இரும்பு கம்பிகள் வலுவாக இருந்தாலும், குட்டி கரடி ஆக்ரோஷத்துடன் கத்தியதாலும் அதை உடனடியாக மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து இரும்பு கம்பிகளை வெட்டுவதற்கான மின் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, கேட்டின் இரும்பு கம்பிகளை வெட்டி எடுத்து கரடியின் தலையை வெளியே எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கம்பியில் இருந்து விடுபட்ட கரடி குட்டி அங்கிருந்து ஓடிச்சென்று அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. சுமார் 1½ மணிநேர போராட்டத்திற்குப் பின் வனத்துறையினர் குட்டி கரடியை பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கேட்டில் சிக்கிய குட்டி கரடிக்கு 1½ வயது இருக்கும். முன்னதாக கம்பிக்கு இடையில் சிக்கி தவித்த தனது குட்டியை மீட்க தாய் கரடி பாச போராட்டம் நடத்தியதை அப்பகுதியில் அந்த வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

4-வது நாளாக வெளுத்து வாங்கிய மழையால் அவலாஞ்சியில் 58 செ.மீ. மழை பொழிந்தது. இதனால் நீலகிரியில் 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பலத்த காற்றால் மரங்கள் முறிந்து விழுந்தன.
ஊட்டி:
மலை மாவட்டமான நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
குறிப்பாக ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா, எமரால்டு, அப்பர் பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி பகுதியில் பலத்த காற்று வீசியது. பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஊட்டி புதுமந்து, மார்லிமந்து, ரோஸ்மவுண்ட், ராஜ்பவன் ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடங்களுக்கு சென்று கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மின்வாள்கள் மூலம் மரங்களை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். ஊட்டி-எமரால்டு சாலை இத்தலார் பகுதியில் ஒரே இடத்தில் 2 மரங்கள் வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து
தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் மரங்கள் சாலையில் இருந்து அகற்றப்பட்டது. விவசாய விளைநிலங்களில் இருந்து மண் அடித்து வரப்பட்டு சாலையில் படிந்தது. அதனால் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் மண் அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அவலாஞ்சி, எமரால்டு, அப்பர்பவானியில் அதிக மழை பெய்து உள்ளது. குறிப்பாக அவலாஞ்சியில் 58 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால், அதையொட்டி உள்ள அபாயகரமான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு இருக்கின்றனர்.
எமரால்டு சத்யா நகரில் மின்வாரிய குடியிருப்புகள் உள்ளன. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட ஒரு குடியிருப்பில் ஊழியர்கள் தங்காமல் இருந்தனர். இதற்கிடையே நேற்று காலை அந்த குடியிருப்பு பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பையொட்டி கட்டப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் அடித்து செல்லப்பட்டது. குடியிருப்பின் ஒரு பகுதியும் சேதம் அடைந்தது. இந்த நிலச்சரிவால் மண் 400 மீட்டர் தூரம் வரை அடித்து சென்றது.
அதே பகுதியில் மற்றொரு இடத்தில் தடுப்புச்சுவர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் அங்கு வசித்து வருபவர்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து 15 வீடுகளில் வசித்த வந்த மக்கள் உடனடியாக காலி செய்யுமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் பொருட்களை எடுத்து சரக்கு வாகனங்களில் ஏற்றி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். சூறாவளி காற்றால் எமரால்டில் உள்ள விநாயகர் கோவில் பக்கவாட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்ணாடி உடைந்தது.நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் வந்து உள்ளனர்.
அவர்கள் நேற்று காட்டுக்குப்பை, கிண்ணக்கொரை, தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் 2 குழுவாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:- ஊட்டி-42.1, நடுவட்டம்-226, கிளன்மார்கன்-212, குந்தா-58, அவலாஞ்சி-581, எமரால்டு-175, அப்பர்பவானி-319, பாலகொலா-58, கூடலூர்-335, தேவாலா-220, அப்பர்கூடலூர்-305, ஓவேலி-74, பாடாந்தொரை-75, பந்தலூர்-181, சேரங்கோடு-179 உள்பட மொத்தம் 3223.4 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 111.15 ஆகும். நடப்பாண்டில் நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் சராசரியாக 11 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 58 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. அவலாஞ்சி வனப்பகுதி என்பதால் பல மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா, எமரால்டு ஆகிய அணைகளின் நீர்மட்டம் வெகமாக உயர்ந்து வருகிறது.
நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா, எமரால்டு ஆகிய அணைகளின் நீர்மட்டம் வெகமாக உயர்ந்து வருகிறது.
89 அடி கொள்ளவை கொண்ட குந்தா அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 122 அடியை எட்டியது.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. உத்தமபாளையத்தில் உள்ள முல்லைப்பெரியாற்று தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
தொடர் மழையால் கடந்த 3 தினங்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து, தற்போது 122 அடியை எட்டியுள்ளது. நேற்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.60 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 6,585 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 933 கன அடியாகவும் இருக்கிறது. மேலும் அணையில் நீர் இருப்பு 2,747 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது.
இதேபோல் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 30.32 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 203 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 72 கன அடியாகவும் உள்ளது. இந்த அணையில் 381 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மற்றொரு பிரதான அணையான மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.70 அடியாக உள்ளது. ஆனால் இந்த அணைக்கு நீர்வரத்து, வெளியேற்றம் இல்லை. 126 அடி உயரமுள்ள சோத்துபாறை அணையின் நீர் மட்டம் 75.76 அடியாக உள்ளது. இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக போடி மேற்கு மலைப்பகுதிகளான குரங்கணி, சென்டிரல், முட்டம், முதுவாக்குடி, கொட்டக்குடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த 2 தினங்களாக பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டக் குடி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் போடி அருகே முந்தல் சாலை பிரிவில் உள்ள பிள்ளையார் அணை நிரம்பி மழைநீர் அருவியாய் கொட்டுகிறது.

இந்தாண்டு இந்திய அளவில் அவலாஞ்சியில்தான் அதிகபட்சமாக 58 செ.மீ. மழை பெய்துள்ளது.
நீலகிரி:
நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான அவலாஞ்சியில் 58 செ.மீ. அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது.

கூடலூர் ஜிபஜாரில் 33, மேல் பவானியில் 32, நடுவட்டத்தில் 23, தேவாலாவில் 22 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கிளன்மோர்கனில் 21, சின்னகல்லார், சோலையாறில் தலா 11, சின்கோனாவில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் 200 மரங்கள் முறிந்து விழுந்தன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் மரங்கள் விழுந்து பல கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. தொடர் மழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இதில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை 200-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூடலூர் பகுதிக்கு சென்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை எதிரொலியாக உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி:
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக மழையின் அளவு மேலும் அதிகரித்துள்ளது. இதனால், நீலகிரி மாவட்ட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பலபகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வனச்சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதோடு, மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை எதிரொலியாக உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (05.08.2020) மாலை 7 மணி முதல் நாளை(06.08.2020) காலை 6 மணி வரை வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
மேலும் காற்று, மழை அதிகமாக உள்ளதால் வரும் 8 ஆம் தேதி வரை தேவையின்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக தீயணப்பு மீட்பு படைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்புகளை சமாளிக்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. ஆபத்தான மரங்கள் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு வர அறிவுறுத்தியுள்ளார்.

கூடலூரில் ஒரே நாளில் 20 செ.மீ. மழை பெய்தது. இதனால் ஆதிவாசி கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் வெள்ளத்தில் சிக்கிய 25 பேரை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. இதில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அப்பர்பவானியில் 308 மி.மீட்டரும், அவலாஞ்சியில் 220 மி.மீட்டரும் மழை பெய்தது. ஆனால் மக்கள் வசிக்கும் பகுதியான கூடலூரில் ஒரே நாளில் 201 மி.மீட்டர் (20 செ.மீ) மழை பெய்தது. இதனால் பாண்டியாறு, மாயார் உள்பட அனைத்து ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
நேற்று காலை 5 மணிக்கு கூடலூர் புரமணவயல் ஆதிவாசி கிராமம் வழியாக செல்லும் ஆற்றுவாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அப்போது திடீரென வாய்க்கால் கரை உடைந்து ஆதிவாசி கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இதை கண்ட ஆதிவாசி மக்கள் தங்களது குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். ஆனால் ஆற்றின் மறுபக்கம் வசித்து வந்த ஆதிவாசி மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் நீரின் வரத்து அதிகமாகி கொண்டிருந்தது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. ராஜகுமார், தாசில்தார் தினேஷ், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கத்துரை தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படை வீரர்கள் கயிறு கட்டி ஆற்றில் மறுபக்கத்தில் வெள்ளத்தில் சிக்கிய ஆதிவாசி குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 25 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 103 ஆதிவாசி மக்கள் அத்திப்பாளி அரசு பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல் கூடலூர் புத்தூர்வயல் அருகே தேன்வயல் ஆதிவாசி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ஆதிவாசி மக்கள் பலர் வெளியேறி புத்தூர்வயல் அரசு பள்ளிக்கூடத்தில் வந்து தங்கினர். மொத்தம் 175 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
அலைவரிசை சேவையை சீராக வழங்கக்கோரி கூடலூர் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்:
கூடலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல். உள்பட செல்போன் அலைவரிசை சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓவேலி பேரூராட்சி பகுதியில் சட்டப் பிரிவு - 17 ன் கீழ் கொண்டு வரப்பட்ட நிலம் உள்ளது. இங்கு பட்டா நிலம் கிடையாது. இதனால் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிளன் வன்ஸ் என்ற இடத்தில் உள்ள சந்தன மலையில் உச்சியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சிறிய கோபுரம் அமைக்கப்பட்டு பேரூராட்சி மக்களுக்கு சேவை வழங்கப்பட்டு வந்தது. தனியார் அலை வரிசை சேவைக்கு அனுமதி இல்லை. இந்த நிலையில் கடந்த 1 ஆண்டுகளாக பேரூராட்சி பகுதியில் செல்போன் அலைவரிசை சேவையில் குறைபாடு இருந்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். கடந்த 2 மாதங்களாக செல்போன் கோபுரம் செயல் இழந்து கிடக்கிறது. இதனால் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். முக்கிய காரணங்களுக்காக கூடலூருக்கு வந்து செல்போன் பேச வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே பி.எஸ்.என்.எல். அலைவரிசை சேவை சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓவேலி பேரூராட்சி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தொலைத் தொடர்பு வசதி இன்றி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பி.எஸ்.என்.எல். அலைவரிசை சேவை சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஓவேலி மக்கள் சார்பில் இப்னு என்பவர் கூடலூர் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு நேற்று பகல் 11 மணிக்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது கையில் பல்வேறு வாசகங்களை கொண்ட அட்டைகளை ஏந்தியவாறு நின்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்பட வில்லை.
இதையொட்டி அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக இப்னுவை போலீசார் கைது செய்தனர்.
குன்னூர் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர்:
குன்னூர் அருகே கோடமலை பகுதியில் தனியார் தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இங்குள்ள தொழிலாளர்கள் நேற்று எஸ்டேட் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பல காலமாக பணியாற்றும் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். தொழிலாளர்களின் குடியிருப்புகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் மழை காலங்களில் சேதம் ஏற்படும் நிலை உள்ளது. என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.இது குறித்து தகவல் அறிந்ததும் வண்டி சோலை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சதிஷ் குமார் தொழிலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிர்வாகத்திடம் பேசி சுமூக தீர்வு காணுவதாக கூறினார். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
வார விடுமுறை நாட்களில் ரேசன் கடைகள் இயங்கும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழக முதலமைச்சர் அறிக்கையில் ஆகஸ்டு மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2,9,16,23,30-ந் தேதிகள்) எவ்வித தளர்வுகள் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகள் மற்றும் வட்ட செயல்முறை கிடங்குகள் மேற்கண்ட நாட்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படாது. அதற்கு பதிலாக வார விடுமுறை நாட்களான வருகிற 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.