search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து நிறுத்தம்"

    • வாகன ஓட்டிகள் பொன்னேரி-மீஞ்சூர் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருகிறார்கள்.
    • 95 சதவீதம் மணல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில் இன்று முழுவதும் அகற்றப்படும் என்று தெரிகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை வழியாக அதானி துறைமுகம் மற்றும் காட்டுப் பள்ளி கப்பல் கட்டும் தளம், எண்ணூர் துறைமுகம் , நிலக்கரி சேமிப்பு கிடங்கு வடசென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் திருவொற்றியூர் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பழவேற்காடு வாகனங்கள் சென்று வருகின்றன. அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சுற்று வட்டார பகுதி மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும்.

    கடந்த வாரத்தில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடலில் இருந்து மணல் முழுவதும் பழவேற்காடு-காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் படர்ந்தது. சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சாலையே தெரியாத அளவுக்கு மணல் திட்டுக்களாக காட்சி அளிக்கிறது.

    இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து கடந்த ஒரு வாரமாக முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன. வாகன ஓட்டிகள் பொன்னேரி-மீஞ்சூர் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருகிறார்கள்.

    மணலால் மூடப்பட்ட சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து தாங்கல் பெரும்புலம் ஊராட்சி தலைவர் ஞானவேல் தலைமையில் 2 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சாலையை மூடிய மணல் திட்டுக்கள் அகற்றப்பட்டு வருகிறது.

    இதனை மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 95 சதவீதம் மணல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில் இன்று முழுவதும் அகற்றப்படும் என்று தெரிகிறது. நாளைக்குள் பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலையில் வழக்கம்போல் வாகன போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கோவிலின் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக நடந்து கோவிலுக்கு சென்றனர்.
    • மலைப் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. வரலாறு காணாத மழையால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.

    கடந்த 4-ந்தேதி பலத்த மழை கொட்டியபோது திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

    பின்னர் அதனை தற்காலிகமாக மணல் மூட்டைகளைக் கொண்டு சரி செய்து போக்குவரத்துக்கு அனுமதித்தனர்.

    இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ள அந்த இடத்தில் மீண்டும் அதிக அளவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதை வழியாக போ க்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன. மலைப்பாதையை முற்றிலும் ஆய்வு செய்து மண்சரிவை சரிசெய்த பின்னரே போக்குவரத்துக்கு அனுமதிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மலைக் கோவிலுக்கு செல்லும் பஸ், லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நுழைவுவாயில் பகுதியிலேயே தடுப்புகள் அமைத்து நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதியில் இருந்து பஸ், கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனத்தில் வந்த பக்தர்கள் வாகனத்தில் மலை கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அவர்கள் கோவிலின் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக நடந்து கோவிலுக்கு சென்றனர். இதன்காரணமாக முதியோர் மற்றும் குழந்தைகள் அவதி அடைந்தனர். மலைப் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுரங்கப் பாதையின் வழியாக இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் பஸ் போக்குவரத்து எதுவும் நடைபெறவில்லை.
    • சூழ்ந்துள்ள தண்ணீரை மோட்டார் பம்ப் செட் மூலம் வெளியேற்றும் பணியை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி சுரங்கப் பாதையில் மழைநீர் இந்த முறை தேங்கவில்லை என்றாலும் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் திடீரென மழை வெள்ளம் சூழ்ந்தது.

    காலை 8 மணி வரை அந்த பாலம் வழியாக போக்குவரத்து நடைபெற்றது. தொடர்ந்து பெய்த மழையால் அப்பகுதியை ஒட்டிய இடங்களில் இருந்து மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சுரங்கப்பாதையில் தேங்கியது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டன.

    சுரங்கப் பாதையின் வழியாக இரு சக்கர வாகனங்கள், கார், லாரி, ஆட்டோ மற்றும் பஸ் போக்குவரத்து எதுவும் நடைபெறவில்லை. அங்கு சூழ்ந்துள்ள தண்ணீரை மோட்டார் பம்ப் செட் மூலம் வெளியேற்றும் பணியை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. வியாசர்பாடி சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பெரம்பூர், பேசின்பாலம் வழியாக மக்கள் சென்றார்கள்.

    • சென்னை அசோக்நகர் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்று வீசியது.
    • போலீசார் சாலையில் கிடந்த மரத்தை எந்திரங்கள் கொண்டு வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    போரூர்:

    சென்னை அசோக்நகர் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளி காற்றின் வேகம் காரணமாக 7-வது அவென்யூ பகுதியில் சாலையோரம் இருந்த ராட்சத மரம் இரவு 9 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்தபடி மரம் விழுந்ததால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்து அசோக்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போக்குவரத்து போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். போலீசார் சாலையில் கிடந்த மரத்தை எந்திரங்கள் கொண்டு வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மரம் முழுவதுமாக வெட்டி அப்புறப்படுத்தபட்டது இதையடுத்து ஒரு மணி நேரம் கழித்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. மரம் விழுந்தபோது அவ்வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    • சுற்றுலாபயணிகள் யானைகளை பார்த்து ரசித்தனர்
    • யானைகள் மற்றும் வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்வதை காண முடிகிறது.

    ஊட்டி,

    வனப்பகுதியில் தற்போது கடும் வெயில் சுட்டெரிப்பதால் வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகின்றன.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளை யம் சாலையில் யானைகள் மற்றும் வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்வதை காண முடிகிறது. நேற்றும் இதேபோல யானைகள் கூட்டமாக ரோட்டை கடக்க முயன்றன.

    இதனால் இருபுறமும் வா கனங்கள் நிறுத்தப்பட்டன. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நின்றன. ஆனால் யானைகள் சாலையிலேயே நின்று கொண்டிருந்தன.

    அதனை கடப்பதாக தெரியவில்லை. இதுபற்றி அறிந்த வனச்சரகர் சசிக்குமார் தலைமையில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் யானை யை காட்டுப்ப குதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காட்டேரி பகுதி வழியாக யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பிறகே வாகனங்கள் அனு மதிக்கப்பட்டன. இதனால் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

    சமவெளி பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் நீலகிரி மாவட்டம் குன்னூரில் காட்டுயானைகள் முகா மிட்டுள்ளன. அவ்வப்போது உணவு, மற்றும் தண்ணீர் தேடி காட்டுயானைகள் சாலை கடந்து மலை ரயில் பாதையில் முகாமிடுகிறது. இந்த நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்ட தால் காட்டு யானைகள் காட்டேரி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது உடனடியாக குன்னூர் வனசரகர் சசிக்குமார் தலைமையில் வந்த வனத்துறையினர் காட்டுயானையை அருகேயுள்ள வனப்பகுதிக்கு விரட்டினர் இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அன்னங்காரம்பேட்டையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
    • தரைப்பாலம் மூழ்கியதால்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் சிந்தாமணி காட்டாற்று ஓடையில் இருந்தும் வரும் தண்ணீர் குறிச்சி கலிங்கு வழியாக பூவாய் மண்டபம் என்று அழைக்கப்படும் கோடாலி கருப்பூர் 7 கண் மதகு வழியாக கொள்ளிடம் ஆற்றில் கலப்பது வழக்கம். இந்த 7 கண் மதகில் முதல் மதகின் கதவு உடைந்தது. இதனால் நேற்று முன்தினம் காலை முதல் வடிகால் ஓடையில் தண்ணீர் புகுந்தது. சிறிது சிறிதாக வெள்ள நீர் கோடாலிகருப்பூர், அன்னங்காரம்பேட்டை, கீழக்குடி காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெல் வயல்களில் வெள்ள நீர் பாய்ந்து ஓட தொடங்கியது.

    இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் முற்றிலும் மூழ்கின. இதையடுத்து மதகை சரி செய்வதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல்வேறு வழிகளில் தீவிரமாக முயற்சி செய்தனர். ஆனால் அவை தோல்வியில் முடிந்தன.

    புதிதாக கதவு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் கதவு தயாரிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை பழுதடைந்த கதவை அகற்றிய பிறகு பொருத்த முடியும் என்பதால் பழைய உடைந்த கதவை அகற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. வெள்ள நீர் தா.பழூர் ஒன்றியத்தின் தாழ்வான பகுதியாக கருதப்படும் அன்னங்காரம்பேட்டை கிராமத்தை சூழ்ந்துள்ளது.

    தா.பழூரிலிருந்து அன்னங்காரம்பேட்டை செல்லும் சாலையில் உள்ள வட்டார வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் செல்ல தொடங்கி உள்ளது. இதனால் பெட்டாற்றில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் முற்றிலும் மூழ்கி விட்டது. இந்தப்பாலத்தின் வழியாக பஸ் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

    • குட்டிகளுடன் உலா வந்த கரடி
    • செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூா், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஹில்குரோவ், குரும்பாடி, பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான தோட்டங்களில் பலா மரங்களில் பலாப் பழங்கள் விளைந்துள்ளன.

    இவற்றை உண்பதற்காக குன்னூா், மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் வந்து செல்கின்றன.இந்தநிலையில் நேற்று குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பாா்க் பகுதியில் யானைகள் கூட்டம் சாலையைக் கடந்து ரன்னிமேடு வனப் பகுதிக்குள் சென்றது.

    யானைகள் சாலையை கடக்கும் வரை அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. யானைகள் வனப் பகுதிக்குள் சென்றபின் வாகனங்கள் சென்றன. கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. இநத்நிலையில் கோத்தகிரி அருகே பன்னீர் கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் இரண்டு குட்டியுடன் கரடி ஒன்று உலா வந்தது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். சற்று தொலைவிலேயே கிராம மக்கள் பாதுகாப்பாக நின்று கொண்டு தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் குட்டிகளுடன் உலா வரும் கரடிகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×