என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரம் முறிந்து கிடப்பதை காணலாம்
    X
    மரம் முறிந்து கிடப்பதை காணலாம்

    நீலகிரியில் கனமழை- சூறாவளி காற்றுக்கு 200 மரங்கள் முறிந்து விழுந்தன

    நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் 200 மரங்கள் முறிந்து விழுந்தன.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் மரங்கள் விழுந்து பல கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. தொடர் மழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    இதில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை 200-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூடலூர் பகுதிக்கு சென்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.
    Next Story
    ×