என் மலர்
நீலகிரி
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
குன்னூர்:
குன்னூர் நகராட்சியின் 30-வது வார்டிற்கு உட்பட்டது காட்டேரி பால்காரர் லைன் குடியிருப்பு. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் வீடுகளுக்கு முன்புறம் இருந்த இடத்தை பொதுமக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காட்டேரி பால்காரர் லைனில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பிரதான நடை பாதை மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதனால் வீடுகள் மற்றும் மின் கம்பங்கள் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளன. இனிவரும் நாட்களில் தொடர் மழை பெய்யும் போது வீடுகள் இடிந்து விடும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட துறையினர் அந்தரத்தில் தொங்கும் வீடுகளை பாதுகாக்க நடைபாதையுடன் கூடிய தடுப்பு சுவர் அமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூர் பகுதியில் மீண்டும் கனமழை பெய்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூர் பகுதியில் மீண்டும் கனமழை பெய்ததால் புளியம்பாறையில் கோழிக்கொல்லி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டதால் 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தேவாலா பகுதியில் சாலையில் மரம் விழுந்ததுடன் மண் சரிவும் ஏற்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தனியாக சுற்றித்திரியும் குட்டியானையை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
குன்னூர்:
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. இங்கு பலாப்பழ சீசன் நிலவுவதால், சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் வந்து செல்கின்றன. தற்போது 12 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு உள்ளது. அதிலிருந்து குட்டியானை ஒன்று பிரிந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் தனியாக சுற்றித்திரிகிறது. சில நேரங்களில் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துகிறது. குட்டியானையை வனப்பகுதிக்குள் விரட்டினாலும், மீண்டும் சாலைக்கு வந்து விடுகிறது. தற்போது கே.என்.ஆர். நகர், மரப்பாலம் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிகிறது. சில நாட்களில் கூட்டத்துடன் சேர்ந்துவிடும் என்பதால், அந்த குட்டியானையை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர்அறிவுறுத்தி உள்ளனர்.
ஊட்டியில் வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அரசு ஆஸ்பத்திரி சாலையில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தீவிரமடைந்து பெய்தது. இதனால் ஊட்டி-கூடலூர் சாலை உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால், மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே தொடர் மழையால் சாலையோரத்தில் உள்ள மண் எப்போதும் ஈரப்பதமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டியில் சூறாவளி காற்று வீசியது. இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இந்த ராட்சத மரம் பெரியதாக இருந்ததால் அருகே இருந்த கேரட் தோட்டத்தில் மரக்கிளைகளும் விழுந்து கிடந்தன. நள்ளிரவில் விழுந்த மரம் அருகே உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் தனியார் காட்டேஜ் மீது விழவில்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஊட்டி மருத்துவமனை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் இம்மானுவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து ராட்சத மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரக்கிளைகள் மின்வாள் மூலம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் அடிப்பகுதி பெரிய அளவில் இருந்ததால் மின்வாள் மூலம் வெட்டுவதில் சிரமம் ஏற்பட்டது.
தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு அதன் கொக்கியில் தீயணைப்பு வீரர் ஒருவர் அந்தரத்தில் தொங்கியபடி மின் வாள் மூலம் மரத்தை வெட்டினார். சரிவான பகுதியில் உடலில் கயிறு கட்டி பின்னால் வீரர்கள் பிடித்துக்கொண்டனர். பின்னர் படிப்படியாக மரம் துண்டு, துண்டாக வெட்டி அகற்றப்பட்டது. அதனால் மதியத்திற்குப் பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் நோயாளிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளாகத்தில் உள்ள அபாயகரமான 8 மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:- ஊட்டி-3.1, நடுவட்டம்-17, அவலாஞ்சி-35, அப்பர்பவானி-25, பர்லியார்-35, எடப்பள்ளி-62, கூடலூர்-13, தேவாலா-121, பந்தலூர்-72, சேரங்கோடு-58 உள்பட மொத்தம் 526.6 பதிவாகி உள்ளது. இதன் சராசரி 18.1 ஆகும். அதிகபட்சமாக தேவாலாவில் 12 சென்டி மீட்டர் மழை கொட்டி இருக்கிறது. மழை குறைந்ததால் மின்கம்பங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 948 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுடன் மூன்றாம் நிலை தொடர்பில் இருந்த தேனாடு கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள், 2 சிறுவர்கள், 3 பெண்கள், ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த ஊட்டி செவிலியர் குடியிருப்பை சேர்ந்த ஒரு பெண், காந்தல் கீழ் போகி தெருவை சேர்ந்த ஒரு ஆண், கோவை சென்று திரும்பியவருடன் தொடர்பில் இருந்த ஊட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஒரு பெண், ஜெகதளா அருகே காரைக்கொரையை சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.
நீலகிரியில் கொரோனா பாதிப்பு 958 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 803 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3 பேர் இறந்து விட்டனர். 152 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

நீலகிரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. பேலிதளாவில் 50 மரங்கள் முறிந்து விழுந்தன. 6 குடும்பத்தினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகள் மட்டுமன்றி மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் அதிக மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. இதனால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகின்றது. மின் கம்பங்கள், மின் ஒயர்கள் சேதமடைந்துள்ளதால் மின் வினியோகம் தடைபட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஊட்டியில் பரவலாக மழை பெய்து வருகிறது. காற்றின் வேகம் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் தொடர் மழை பெய்ததால் சாலையோரத்தில் உள்ள மண் எப்போதும் ஈரப்பதமாக காணப்படுகிறது.
இதற்கிடையே நேற்று ஊட்டியில் இருந்து குருத்துக்குளி கிராமத்துக்கு செல்லும் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின் வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். எமரால்டு அருகே பேலிதளா பகுதியில் இருந்து வினோபாஜி நகருக்கு செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடுத்தடுத்து 50-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தன. இதனால் அப்பகுதியில் வசித்த 6 குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் இம்மானுவேல் அறிவுரையின் பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ராட்சத மரங்கள் விழுந்ததால் அகற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஒரு நாள் முழுவதும் போராடி அப்புறப்படுத்தினர். மேலும் 6 குடும்பத்தினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு எமரால்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். ஊட்டி- கூடலூர் தேசிய நெடுஞ்சாலை தவளைமலை பகுதியில் கனமழை காரணமாக பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. மேலும் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்றும் பாறைகளை உடைத்து அகற்றும் பணி நடந்தது. 3 பொக்லைன் எந்திரங்கள், உதவியோடு பாறைகள் அப்புறப்படுத்தப்பட்டன. நேற்று முன்தினம் மாலையில் ஒருவழிப்பாதையாக வாகனங்கள் சென்றன.
நேற்று முழுமையாக பாறைகள் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து இரு வழிப்பாதையாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மீட்புப்பணிகள் நடந்து வந்தது. ஊட்டி அருகே கல்லட்டி நீர்வீழ்ச்சியில் கடந்த 2 மாதங்களாக நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. தற்போது பெய்த தொடர் கனமழையால் வனப்பகுதிகளில் தண்ணீர் உற்பத்தியாவதால் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் வெள்ளியை உருக்கியது போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:- ஊட்டி-8, நடுவட்டம்-82, அவலாஞ்சி-108, எமரால்டு -16, அப்பர்பவானி-65, எடப்பள்ளி-25, கூடலூர்-79, தேவாலா -341, அப்பர் கூடலூர்-62, ஓவேலி-51, செருமுள்ளி-53, பாடாந்தொரை-51, பந்தலூர்-188, சேரங்கோடு 181 உள்பட மொத்தம் 1398 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 48.21 ஆகும். அதிகபட்சமாக தேவாலாவில் ஒரே நாளில் 34 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
அவலாஞ்சியில் மழைப்பொழிவு குறைந்து உள்ளது.
குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் குன்னூர்-டால்பின் நோஸ் சாலையில் கரன்சி மற்றும் டால்பின்நோஸ் இடையே சாலையில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்தது. மழையின் காரணமாக சாலையின் மேற்புறம் இருந்த பாறைகளுடன் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் சாலை ஒருபுறம் சேதம் அடைந்தது, இதனால் அந்த சாலை வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தடுப்பு சுவர் கட்டும் பணியில் நேற்று 10 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். மழையின் காரணமாக ஒதுங்கி நின்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பித்தனர்.

நீலகிரியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத மரங்கள் விழுந்தன. இதனால் கூடலூர்- ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. பல இடங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளதால், மின் வினியோகம் 4 நாட்களாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ் கின. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பலத்த மழை பெய்தது.
பலத்த காற்று காரணமாக ஊட்டி அருகே குருத்துக்குளி கிராமத்தில் ஒரு மரம் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை மின்வாள் மூலம் துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். மார்லிமந்து அணை அருகே கோழிப்பண்ணை சாலையின் குறுக்கே 2 ராட்சத மரங்கள் வேருடன் முறிந்து விழுந்தன. இதில் ஒரு மரம் சிறியதாக இருந்ததால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. மற்றொரு மரம் பெரியதாக இருந்ததால் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை பின்பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டு இருந்த குதிரை மீது மரக்கிளைகள் விழுந்ததால் படுகாயம் அடைந்தது. தகவல் அறிந்த கால்நடை டாக்டர்கள் குதிரைக்கு சிகிச்சை அளித்தனர். ஊட்டி-இத்தலார் சாலை உள்பட நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மரங்கள் விழுந்த பகுதியில் மண் சரிந்து கொண்டே இருக்கிறது. சாலையில் விழுந்து கிடந்த மண் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகின்றது. அந்த சாலையில் 2 இடங்களில் அபாயகரமான பகுதி, வாகனங்களில் செல்கிறவர்கள் கவனமாக செல்லவும் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
முல்லைப்பெரியாறு நீர்மின் நிலையத்தில் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கூடலூர்:
கூடலூர் அருகே லோயர்கேம்பில் முல்லைப்பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அங்கு மின் உற்பத்திக்காக 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஜெனரேட்டர்கள் மூலமும் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
கடந்த 4-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையொட்டி 2 ஜெனரேட்டர்கள் மூலம் 54 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது. இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 132 அடியை எட்டியது. இதனால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் உள்ள 4 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு, 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை தாண்டியது.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணையை நம்பி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாய நிலத்தில் இருபோக பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 740 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 125 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று 130 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரேநாளில் 5 அடி உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக இன்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை தாண்டியது. அணை நீர்மட்டம் 133.00 அடியாகவும், நீர் இருப்பு 5,586 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 11,533 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து 1,671 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தில் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் போதிய அளவு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. கடந்த 3-ந்தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115 அடியாக இருந்தது.
இதற்கிடையே கேரளா மற்றும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. கடந்த 5 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் நீர்வரத்து இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 740 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 125 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று 130 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரேநாளில் 5 அடி உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக இன்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை தாண்டியது. அணை நீர்மட்டம் 133.00 அடியாகவும், நீர் இருப்பு 5,586 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 11,533 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து 1,671 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குன்னூர் அருகே நடைபாதையை திறக்கக்கோரி டேன் டீ அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
குன்னூர்:
குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு பகுதியில் மாணிக்கம்பிள்ளை தோட்டம் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டேன்டீ தலைமை அலுவலகத்தை ஒட்டியுள்ள நடைபாதை வழியை கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கொரோனா பரவலை காரணம் காட்டி பொது மக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதையை டேன் டீ நிர்வாகம் அடைத்ததாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் ஒரு கி.மீ. தூரம் சுற்றி வனப்பகுதி வழியாக தங்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் வனப்பகுதி வழியாக சென்றதால் வனவிலங்கு தொல்லையால் பாதிக்கப்பட்டனர். அத்துடன் நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு செல்லவும் சிரமம் அடைந்தனர். எனவே டேன் டீ நிர்வாகம் அடைத்த பாதையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் நிர்வாக இயக்குனரை சந்தித்து மனுவும் அளித்தனர். ஆனால் டேன் டீ நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டேன் டீ அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த குன்னூர் வருவாய் ஆய்வாளர் கோபிநாத், குன்னூர் நகர கிராம நிர்வாக அதிகாரி கோபாலகிருஷ்ணன் மற்றும் மேல் குன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அத்துடன் டேன் டீ அதிகாரிகளிடமும் பேசினார்கள். இதையடுத்து அடைத்த நடைபாதையை திறக்க டேன் டீ நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஊட்டியில் தொடர் கனமழையால் நிவாரண முகாம்களில் 900 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஊட்டி:
இந்திய வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்தில்கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது. குறிப்பாக நாளை(சனிக்கிழமை) கனமழை பெய்யும் என்று தெரிவித்து இருக்கிறது. கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு வெள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டது. நடப்பாண்டில் மரங்கள் விழுந்து மின் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு மற்றும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மழைநீர் செல்லக்கூடிய மிகவும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அப்பகுதிகளில் 25 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. முக்கியமாக உயிர்ச்சேதம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எமரால்டு மின்வாரிய குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், இந்திரா நகர், சத்யா நகர், வினோபாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 100 பேர் எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு அறைக்கும் குறிப்பிட்ட நபர்கள் சமூக இடைவெளி விட்டு தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு தேவையான உணவு உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால், தடுப்பு நடவடிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் மழையால் உடல்நிலை பாதிக்கப்படாமல் இருக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் மருத்துவ குழுவினர் தினமும் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்படுகிறது. ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா, சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்களா என்று கண்காணித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை நிவாரண முகாம்களில் 900 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
கோத்தகிரி காந்தி மைதானத்தில் திறந்தவெளியில் செயல்பட்டு வந்த கடைகள் மீண்டும் சந்தைக்கு மாற்றப்பட்டது.
கோத்தகிரி:
கோத்தகிரி தினசரி சந்தையில் காய்கறி, பழம், மீன், இறைச்சி கடைகள் என்று 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சந்தை மூடப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக சந்தையில் உள்ள கடைகள் காந்தி மைதானத்தில் திறந்த வெளியில் மாற்றப்பட்டது.
இங்கு போதிய பாதுகாப்பு இல்லாததாலும், மழை பெய்யும்போது கடைகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுவதாலும் விவசாயிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த கடைகளை மீண்டும் தினசரி சந்தை செயல்பட்ட பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று சாந்திராமு எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக எம்.எல்.ஏ. ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து சந்தையை திறக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து பூட்டி வைக்கப்பட்டு இருந்த கடைகளை வியாபாரிகள் திறந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த சந்தையில் உள்ள கடைகளை இரு பிரிவாக பிரித்து பாதி கடைகளை ஒருநாளும், மீதமுள்ள கடையை மற்றொரு நாளிலும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக கோத்தகிரி பேரூராட்சி செயல் அதிகாரி மணிகண்டன் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில் அலுவலர்கள் சந்தைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள கடைகளை ஆய்வு செய்து குறியீடு செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறும் போது கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த சந்தையில் உள்ள கடைகள் ஏ மற்றும் பி என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஏ என்று குறியீடு போடப்பட்ட கடைகள் அனைத்தும் ஒரு நாளிலும், பி என்று குறியீடு போட்ட கடைகள் மற்றொரு நாளிலும் திறக்கப்படும் என்றனர்.
அதுபோன்று திறந்தவெளி மைதானத்தில் செயல்பட்டு வந்த மீன், கோழி, ஆட்டு இறைச்சி கடைகள் செயல்பட்ட இடத்தில் மழை வெள்ளம் புகுந்ததால் அந்த கடைகளை, மேடான இடத்தில் அமைக்க பேரூராட்சி அனுமதி அளித்தது. இதையடுத்து மழையில் பாதிக்காதவாறு வியாபாரிகள் தங்கள் கடைகளை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.