search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியிருப்பு பகுதி"

    • குடியிருப்பு பகுதியில் உள்ள பனைமரம், தென்னை மரங்களில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தன
    • அந்த வழியாக சென்ற மாணவர்களை கடித்து வந்தன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மடப்புரம் ஊராட்சியில் மடப்புரம், பெரிய மடப்புரம், கீழத்தெரு ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதியில் பனைமரம், தென்னை மரங்களில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தன.

    இந்த கதண்டுகள் அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்களை கடித்து வந்தன. இது குறித்து மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மெஹராஜின்னிசா செல்வநாயகம் பொறையாறு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.

    தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகளை தீ வைத்து அழித்தனர்.

    • குப்பைக்கு தீ மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
    • இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ளது இடையர்பாளையம் கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    சிக்கதாசம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இந்த கிராமத்தில் குப்பைகளை முறையாக சேகரிக்காமல் குவியல் போன்று குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இந்த குப்பைகளுக்கு நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சிலர் தீ வைத்து சென்றுள்ளனர். தீ அந்த பகுதி முழுவதும் பற்றி எரிந்து, அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    இடையர்பாளையம் பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக மாறி மக்கள் மூச்சு விடவே சிரமப்பட்டனர்.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே அப்பகுதி மக்கள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து திடீரென போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    மக்களின் போராட்டம் பற்றி அறிந்ததும், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதிகாரிகள் காலையில் அந்த பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
    • கல்லாங்காடு வலசு, சக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கின்றன.

    வெள்ளகோவில்:

    தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் மிதமான முதல் கன மழை பெய்து வந்தது. இதனால் குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழ்ந்தன. வெள்ளகோவில் பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்ததால் வெள்ளகோவில் நகர் பகுதியில் குமாரவலசு, கல்லாங்காடு வலசு, சக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கின்றன. இதனால் கொசு உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி மழை நீர் தேங்கி இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    • சமூக விரோதிகள் சிலர் கையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர்.
    • தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் சமூக விரோதிகள் சிலர் கையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர்.

    அவர்கள் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. மேலும் தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது. முக்கிய பகுதிகளில் அவர்கள் திரிவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காட்டுமன்னார்கோவிலில் குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு புகுந்தது.
    • பொதுமக்கள் கூச்சலிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட வாத்தியார் தெருவில் குடியிருப்பு பகுதியில் 3 அடி நீளம் நாகப்பாம்பு புகுந்ததுஇதனை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் கொளஞ்சிநாதன் தலைமையிலான குழுவினர் அந்த வீட்டிற்கு சென்று பாம்பை மீட்டு அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர்.

    ×