மாதப்பூரில் குடியிருப்பு பகுதியில் அத்துமீறும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார்

சமூக விரோதிகள் சிலர் கையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர்.தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் சமூக விரோதிகள் சிலர் கையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர்.

அவர்கள் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. மேலும் தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது. முக்கிய பகுதிகளில் அவர்கள் திரிவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com