என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகனங்களில் நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
    • விநாயகர் சிலைக்கு தேங்காய், பழம் படைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நகர் பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்ட 10 சிலைகள் போலீஸ் பாதுகாப்போடு விதிமுறைகளுடன் ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகனங்களில் நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு விநாயகர் சிலைக்கு தேங்காய், பழம் படைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். தொடர்ந்து சிலைகளை படகு மூலம் கொண்டு கரைப்ப தற்காக திட்டமிட்டனர்.

    ஆனால் படகு ஏற்பாடு செய்ய காலதாமதம் ஆனதால் சிலைகளை உடனே கரைக்க வேண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, வெற்றிவேல் ஆகியோர் அவர்களிடம் வலியுறுத்தினார்.

    கையில் எடுத்து சென்றால் சிலைகளை முறையாக கடலில் கரைக்க முடியாது. எனவே படகு வந்ததும் அதில் கொண்டு சென்று கரைக்கிறோம் என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து வற்புறுத்தியதால், இந்து முன்னணி அமைப்பு பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிறிய சிலைகளை பெண்களே கையில் கொண்டு சென்று கடலில் கரைத்தனர்.

    பின்னர் படகு வந்ததும் அதில் கொண்டு சென்று நடுக்கடலில் விநாயகரை விஜர்சனம் செய்தனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஊர்க்காவல் படையினர் தீயணைப்பு துறையினர் கடலோர காவல் குழும போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.
    • 63 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியில் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் யோகீஸ்வரன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தியாகராஜன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மேலாண்மை குழுவினர் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் 63 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.

    • கீழையூர் கடலோர காவல் படை குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    • படுகாயம் அடைந்த மீனவர்கள் சிகிச்கைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகை மீனவர்கள் மற்றும் வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இதனால் அவர்களின் தொழில் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதைப்போன்ற சம்பவம் இன்று நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

    நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பகுதியை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமாக படகு உள்ளது.

    இந்நிலையில் கடந்த 21-ந்தேதி சபாபதிக்கு சொந்தமான படகில் பிரகாஷ், பிரவின், திருமுருகன், பிரதீப் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலை கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 அதிவேக விசை படகில் 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்தனர்.

    அவர்கள் சபாபதிக்கு சொந்தமான படகில் ஏறி அதில் இருந்த 4 மீனவர்களை கடுமையாக தாக்கினர். பின்னர் படகில் இருந்த சுமார் 500 கிலோ மீன்பிடி வலைகள், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் வாக்கிடாக்கிகள், தொழில் நுட்ப உபகரணங்கள் ஆகியவற்றை கொள்ளை எடுத்து கொண்டு மீன்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    பின்னர் படுகாயத்துடன் 4 மீனவர்கள் கோடியக்கரை திரும்பினர். பின்னர் இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், கடலோர காவல் படை குழுமத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து கீழையூர் கடலோர காவல் படை குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    படுகாயம் அடைந்த மீனவர்கள் சிகிச்கைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இச்சம்பவம் கோடியக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 4 வீதிகளிலும் கடந்த ஒரு ஆண்டாக வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்ட வணிகர் சங்க செயலாளர் திருமலை செந்தில் மற்றும் வணிகர் சங்க பொருளாளர் கந்தசாமி, வேதாரண்யம் நகர வணிகர் சங்க செயலாளர் முரளி ஆகியோர் மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் நகர கடைத்தெருவில் உள்ள 4 வீதிகளிலும் கடந்த ஒரு ஆண்டாக வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நீண்ட நாட்கள் ஆகியும் முடியாததால் வணிகர்க ளுக்கும், பொதுமக்களுக்கும், அவ்வழியாக செல்லும் போக்குவரத்துக்கும் மிகுந்த இடையூறாக உள்ளது.

    எனவே, நெடுஞ்சாலை துறையினர் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று க்கொண்ட மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • முத்தமிழ் ஆனந்தன் ஓசோன் படலம் பற்றி விளக்க உரையாற்றினார்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் விமல் செய்திருந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில், சி.பி .சி .எல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தேசிய பசுமை படை சார்பில் ஓசோன் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. பசுமை கண்காணிப்பாளர் டிவைனியா, சி.பி.சி.எல் அதிகாரிகள் குமார், நடராஜன், சூரியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் ஓசோன் படலம் பற்றி விளக்க உரையாற்றினார். சுற்றுச்சூ ழல் தகவல் பரப்பு மையத்தி ன் ஒருங்கிணை ப்பாளர் செங்குட்டுவன் நிகழ்ச்சிக ளை தொகுத்து வழங்கினார். முன்னதாக தலைமை ஆசிரியர் நாகராஜன் வரவேற்புரை ஆற்றினார். தேசிய பசுமை படை பள்ளி ஒருங்கிணை ப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

    முடிவில் தேசிய பசுமை படை மாணவர்க ளுக்கு பசுமை தொப்பியும் மஞ்சப்பையும் வழங்க ப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் விமல் செய்திருந்தார்.

    • கட்டியை கர்ப்பப்பையில் இருந்து அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் அகற்றினர்.
    • இந்த கட்டி சுஜித்ராவின் கர்ப்பப்பையில் சுமார் 20 ஆண்டுகளாக இருந்து உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி சுஜித்ரா (வயது 50). சுசித்ராவுக்கு கடந்த சில நாட்களாக வயிறு வலி இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க முடியாமல் அவதிப்பட்டார்.

    சம்பவத்த ன்று அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகி ச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அங்கு சுசித்ராவின் வயிறு பகுதியை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கால்பந்தை விட 16 கிலோ எடையிலான கட்டி ஒன்று சுசித்ராவின் கர்ப்பபையில் இருப்பதை கண்டுபி டித்தனர்.

    இந்த கட்டியை அகற்ற சுசித்ராவுக்கு பல்வேறு கட்ட மருத்துவ மருத்துவ பரிசோ தனைகளும், ஆலோ சனைகளும் செய்யப்பட்டது.

    இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை நிபுணர் அமுதன் தலைமையில் உதவி நிபுணர் ராஜேஷ், மயக்கவியல் நிபுணர்கள் ஆனந்தராஜ், அருண் ஆகியோர் கொண்ட டாக்டர் குழுவினர் சுசித்ராவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதில் சுமார் 16 கிலோ எடை கொண்ட கட்டியினை கர்ப்பப்பையில் இருந்து அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

    பைப்ரோய்டு யூட்டரஸ் எனப்படும் இந்த கட்டி சுஜித்ராவின் கர்ப்ப பையில் 20 ஆண்டுகளாக இருந்து உள்ளது. தொப்பை தானே என்று கண்டு கொள்ளாமல் அவர் விட்டு விட்டார். சிறிது, சிறிதாக அந்த கட்டி வளர்ந்து ஒரு கட்டத்தில் சிறுநீரகத்தை அடைக்கும் தருவாயில் சென்று விட்டது.

    முடியாத பட்சத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றினோம். தற்போது நினைத்து நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து பழுதடைந்த நிலையில் உள்ளது.
    • புதர்மண்டி கிடக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கட்டலாடியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாட தேவைகளுக்கு கட்டலாடியிலிருந்து ஆண்டிதோப்பு வழியாக திருமருகல் வரும் சாலை உள்ளது.

    இந்த சாலையை கட்டலாடி பொதுமக்கள் கடைத்தெரு, ஊராட்சி ஒன்றிய அலுவ லகம், வேளாண்துறை அலு வலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வங்கி, பொதுப்பணித்துறை அலுவலகம், பஸ் நிலையம் என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சாலையில் இருபுறமும் செடி,கொடிகள், நாணல், கருவேல மரங்கள் வளர்ந்து பழுதான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகா ரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு புதர்மண்டி கிடக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

    • வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
    • நிகழ்ச்சியில் 950-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.

    விழாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜோதிமணி அம்மாள் துவக்கி வைத்தார்.

    தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரி - ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை பிரிவின் முதன்மையர் செந்தில்குமார் மற்றும் ஒன் லைப் ஒன் சாய்ஸ் லைஃப் ஸ்கில்ஸ் அகாடமியின் தலைவரும் உளவியல் பயிற்சியாளருமான கார்த்திக் வேலு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அவர்களது எதிர்காலம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நு ட்பங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.

    கல்வி குழுமத்தின் இணைச் செயலர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தனர். நிர்வாகத் தலைவர் மணிகண்ட குமரன், கல்விசார் இயக்குனர் மோகன், தேர்வு நெறியாளர் சின்னதுரை, மாணவர் சேர்க்கை பிரிவின் தலைவர் ஹரி நாராயணன், முதலா மாண்டு துறை முதன்மையர் தேவராஜன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் வாழ்த்துரை யாற்றினர். நிகழ்ச்சி ஏற்பாடு களை துறைதலைவர் முனைவர் தீபா, கூடுதல் துறை தலைவர்கள் முனைவர் பொன்சடைலட்சுமி, முனைவர் தாரணி, முனைவர் மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    நிகழ்வில் 950 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

    • காசிவிஸ்வநாத திருசிற்றம்பல விநாயகர் கோவிலில் மத நல்லிணக்க விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
    • ஊர்வலமானது 5 கி.மீ. தூரம் சென்று ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தில் உள்ள காசிவிஸ்வநாத திருசிற்றம்பல விநாயகர் கோவிலில் மத நல்லிணக்க விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.

    முன்னதாக கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோவிலில் இருந்து விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட மும்மதத்தினரும் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வேதார ண்யம் நிலவள வங்கி தலைவர் பிரபு, அகரம் மெட்ரிக் பள்ளி தாளாளர் விவேக் வெங்கட்ராமன், சமூக ஆர்வலர்கள் விஜயபாலன், விஜயராமன் சேட்டாபாய், வெங்கட் மற்றும் காங்கிரஸ் கட்சி வர்த்தக பிரிவு அப்சல்உசேன், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் வைரம், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கமம் கோவிந்தராஜ், நகர காங்கிரஸ் தலைவர் அர்ஜூனன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் போஸ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

    ஊர்வலமானது 5 கி.மீ. தூரம் சென்று மருதவம்புலம் ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது.

    இதேபோல், தோப்புத்துறை, ஆயக்காரன்புலம், ஆதனூர், நெய்விளக்கு, கரியாபட்டிணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.
    • குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு குறித்து எப்படி என்பது குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.

    வேதாரண்யம்நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பை இல்லாத நகராட்சியாக மாற்றுவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    நகராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி கடற்கரையில் தூய்மை பணி மேலும் மாணவ மாணவிகள் தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நேற்று வேதாரணியம் குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரிப்பது எப்படிஅதில் இருந்து உயரம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் புகழேந்திநகராட்சி ஆணையர் வெங்கட லெட்சுமணன் நகர மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நகராட்சியில் குப்பை கிடங்கில் பணிபுரியும் பணியாளர்கள் குப்பைகளை எப்படி கையாளுகின்றனர் மக்கும் குப்பை மக்காத குப்பைதரம் பிரிப்பது எவ்வளவு சிரமங்கள் உள்ளன குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது எப்படி என்பது குறி த்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது நகரமன்ற உறுப்பி னர்கள் நகராட்சி பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • சாலையில் சென்று கொண்டிருந்த வேன் வெற்றிச்செல்வன் மீது மோதியது.
    • அவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி காரைநகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (வயது53). இவர் கருங்ண்ணி ஊராட்சியில், ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தார்.

    வழக்கம் போல் பணி முடித்துவிட்டு நேற்று மாலை வீட்டிற்கு வந்த அவர் அங்கிருந்து சாலையை கடக்க முயன்றனர்.

    அப்போது நாகையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் ஓடாச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த வேன் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயத்தோடு மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்த கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சரணாலயத்தில் வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.
    • நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.

    வேதாரண்யம்:

    கோடியக்கரை வனவிலங்கு சரணா லயத்தில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் அமிஷேக் தோமர் ஆலோசனையின் பேரில், திருச்சி மண்டல வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள். வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் முறைகள் குறித்த பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.

    பயிற்சியை நாகப்பட்டி னம் வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான், மாயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி உதவி பேராசிரியர்கள் பாண்டி யன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கணக்கெடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.

    ×