என் மலர்
நீங்கள் தேடியது "ஓசோன்"
- முத்தமிழ் ஆனந்தன் ஓசோன் படலம் பற்றி விளக்க உரையாற்றினார்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் விமல் செய்திருந்தார்.
நாகப்பட்டினம்:
நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில், சி.பி .சி .எல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தேசிய பசுமை படை சார்பில் ஓசோன் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. பசுமை கண்காணிப்பாளர் டிவைனியா, சி.பி.சி.எல் அதிகாரிகள் குமார், நடராஜன், சூரியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் ஓசோன் படலம் பற்றி விளக்க உரையாற்றினார். சுற்றுச்சூ ழல் தகவல் பரப்பு மையத்தி ன் ஒருங்கிணை ப்பாளர் செங்குட்டுவன் நிகழ்ச்சிக ளை தொகுத்து வழங்கினார். முன்னதாக தலைமை ஆசிரியர் நாகராஜன் வரவேற்புரை ஆற்றினார். தேசிய பசுமை படை பள்ளி ஒருங்கிணை ப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.
முடிவில் தேசிய பசுமை படை மாணவர்க ளுக்கு பசுமை தொப்பியும் மஞ்சப்பையும் வழங்க ப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் விமல் செய்திருந்தார்.






