search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோடியக்கரை அருகே நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்- 500 கிலோ வலைகளை எடுத்து சென்றனர்
    X

    கோடியக்கரை அருகே நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்- 500 கிலோ வலைகளை எடுத்து சென்றனர்

    • கீழையூர் கடலோர காவல் படை குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    • படுகாயம் அடைந்த மீனவர்கள் சிகிச்கைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகை மீனவர்கள் மற்றும் வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இதனால் அவர்களின் தொழில் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதைப்போன்ற சம்பவம் இன்று நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

    நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பகுதியை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமாக படகு உள்ளது.

    இந்நிலையில் கடந்த 21-ந்தேதி சபாபதிக்கு சொந்தமான படகில் பிரகாஷ், பிரவின், திருமுருகன், பிரதீப் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலை கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 அதிவேக விசை படகில் 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்தனர்.

    அவர்கள் சபாபதிக்கு சொந்தமான படகில் ஏறி அதில் இருந்த 4 மீனவர்களை கடுமையாக தாக்கினர். பின்னர் படகில் இருந்த சுமார் 500 கிலோ மீன்பிடி வலைகள், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் வாக்கிடாக்கிகள், தொழில் நுட்ப உபகரணங்கள் ஆகியவற்றை கொள்ளை எடுத்து கொண்டு மீன்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    பின்னர் படுகாயத்துடன் 4 மீனவர்கள் கோடியக்கரை திரும்பினர். பின்னர் இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், கடலோர காவல் படை குழுமத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து கீழையூர் கடலோர காவல் படை குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    படுகாயம் அடைந்த மீனவர்கள் சிகிச்கைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இச்சம்பவம் கோடியக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×