என் மலர்
நாகப்பட்டினம்
- கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
- 2 இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலம் காரை க்காலில் இருந்து நாக ப்பட்டினம் மாவட்டத்திற்கு மதுப்பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து மதுக் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்தாலும் கடத்தல்கா ரார்களும் பல்வேறு நூதன முறையில் கடத்தலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.
நாகை நல்லியான் தோட்டம், வடக்குபொய்கை நல்லூரில் உள்ளிட்ட பகுதிகளில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டி ல்களை மண்ணுக்குள் புதைத்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மறைத்து வைத்திருந்திருந்த 1180 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்பட்ட 6 மூதாட்டி உள்பட 9 போலீ சாரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கடத்தி லுக்கு பயன்படுத்தப்பட்ட 2 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுப்பாட்டி ல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
வெளி மாநில மதுபாட்டி ல்கள் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட காவலர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தொடர் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படு பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.
- 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்த திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.
மூலவர் ரத்தினகிரீஸ்வரர்- வண்டுவார்குழலி அம்மன் மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திருமார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், கணக்கர் சீனிவாசன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- கல்வெட்டுகளில் உள்ள செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்து கூறினார்.
- முன்னதாக தமிழ்த் துறைத்தலைவி ரஞ்சனி அனைவரையும் வரவேற்றார்.
நாகப்பட்டினம்:
திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை ஒருங்கிணைப்பில் தமிழ் கல்வெட்டுகள் மற்றும் மரபிலக்கணக் கோட்பாடுகள் என்னும் பொருண்மை யிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் தமிழ் கல்வெட்டுகள் மற்றும் மரபிலக்கணக் கோட்பாடுகள் என்னும் தலைப்பில் தமிழ்நாடு நடுவண் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ரவி கல்வெட்டுகள் மற்றும் கல்வெட்டுகளில் மக்கள் அறிந்து கொள்ளும் பல்வேறு வகையான செய்திகளை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறினார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைப் பேராசிரியர் பெருமாள் மாணவ மாணவிகள் இலக்கணம் பயில்வதால் ஏற்படும் சிறப்புகள் பற்றியும் காலம் காலமாக இலக்கணம் மனித வாழ்வை நெறிப்படுத்தும் ஆற்றல் உடையது என்பதைப் பற்றி சொற்பொழிவு ஆற்றினார்.
இந்நிகழ்வில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிவகுருநாதன் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து.
கல்லூரி தாளாளர் வெங்கட்ராஜுலு செயலர் சுந்தர் ராஜு ,முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்விக் குழுமத்தின் இயக்குநரும்,மகரிஷி வித்யா மந்திர்சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர், த. விஜய சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். மேலும் இந் நிகழ்வில் துணை முதல்வர் (கல்விசார்) எஸ். நெல்லிவனம், துணை முதல்வர் (நிர்வாகம்) பவித்ரா வாழ்த்துரை வழங்கினர்.
இக்கல்லூரியின் தமிழ்த் துறைத்தலைவி ரஞ்சனி வரவேற்றார்.
முடிவில் தமிழ்த் துறை துணைதலைவர் கிருஷ்ண ராஜ் நன்றி கூறினார்.
இக்கருத்தரங்கில் அனைத்து துறைப் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து படகு மூலம் கடலுக்கு சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பாதுகாப்பு ஒத்திகயைானது இன்றும், நாளையும் (2 நாட்கள்) கடலோர பகுதிகளில் நடைபெற உள்ளது.
வேதாரண்யம்:
இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு கடலோர கிராமங்களில் அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா? என்பதை பரிசோதிக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக மரைன் போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து சாகர் கவாச் (கடல்கவசம்) பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதியில் இன்று தொடங்கியது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.
அதன்படி, ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி.சுரேஷ் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து படகு மூலம் கடலுக்கு சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலுக்கு செல்லும் வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரையும் கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த பாதுகாப்பு ஒத்திகயைானது இன்றும், நாளையும் (2 நாட்கள்) கடலோர பகுதிகளில் நடைபெற உள்ளது.
- கடந்த 7-ந் தேதி இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கப்பட்டனர்.
- காயம் அடைந்தவர்கள் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர்க ளை வேதாரண்யம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 7-ம் தேதி இலங்கை கடற்கொ ள்ளையர்கள் அரிவாளால் தாக்கி அவர்களிடமிருந்து வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட பொரு ட்களை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளையர்கள் தாக்குத லில் காயமடைந்த வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த மணியன், வேல்முருகன், சத்யராஜ், அக்கரைப்பே ட்டையைச் சேர்ந்த கோடி லிங்கம் ஆகியோர் நாகை அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களை பாஜக மாவட்ட தலைவர் கார்த்தி கேயன் தலைமையில் மாவட்ட செயலாளர் விஜேயந்திரன், விவசாய அணித் தலைவர் சின்னப்பிள்ளை, ஆன்மிக பிரிவு தலைவர் கஜேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகள் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.
மேலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை மூலமாக மத்திய அரசிடம் பேசி மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பா டுகளை செய்து தர நடவடி க்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
- திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது.
- பாலத்தில் உள்ள விரிசலால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது.
இந்த பாலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இந்த பாலம் வழியாக திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், மதுரை, விழுப்புரம், சென்னை, வேலூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால் இந்த சாலை போக்குவரத்து அதிகம் கொண்ட முக்கிய சாலையாக உள்ளது.
இந்த நிலையில் முடிகொண்டான் ஆற்று பாலத்தில் இணைப்பு பகுதிகளில் உள்ள இரும்பு தகடுகள் சேதம் அடைந்து பாலத்தில் விரிசல் விழுந்து வருகிறது.
இந்த விரிசலால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில், பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்ய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வருகிற 10-ந் தேதி முதல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
- டிக்கெட் விலை நபர் ஒருவருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் ரூ. 6 ஆயிரத்து 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
பணிகள் விரைவாக நடந்து வரும் வேளையில் வருகிற 10-ந் தேதி முதல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு நேற்று இரவு வந்து சேர்ந்தது. இதனால் நாகப்பட்டினம் துறைமுகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழுவினர் வருகை தந்துள்ளனர்.
இந்த குழுவினர் பயணிகள் சோதனை கருவி, மருத்துவ பரிசோதனை கருவி, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை சோதனை செய்யும் கருவி, உடமைகளை பாதுகாப்பாக வைப்பது என அனைத்திற்கும் தனித்தனியாக பிரம்மாண்டமான அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நலன் கருதி துறைமுகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இதற்கான டிக்கெட் விலை நபர் ஒருவருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் ரூ. 6 ஆயிரத்து 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு ஒரு பயணி இலவசமாக 50 கிலோ எடையுள்ள பொருட்கள் எடுத்து செல்ல முடியும். இலங்கை செல்வதற்கு பாஸ்போர்ட், விசா ஆகியவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். விமான நிலையத்தில் பின்பற்றப்படும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் நாகப்பட்டினம் துறைமுகத்திலும் பின்பற்றப்படும் என்று இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் நிறுவன இயக்குனர் செய்யது ஹாசிப் ஜூஹைர் கூறினார்.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் வருகிற 10-ந் தேதி காலை 7.30 மணிக்கு கப்பல் புறப்பட்டு 3 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த கப்பலின் சோதனை ஓட்டமானது இன்று காலை 9.45 மணிக்கு தொடங்கி நாகை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இதில் 14 அதிகாரிகள் கப்பலில் பயணம் செய்தனர். இது மீண்டும் இன்று இலங்கைக்கு திரும்பி வர உள்ளது. இதேபோல், நாளை சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது. துறை சார்ந்த பணிகளின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
- கட்டுமான பணிகளை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் சிகிச்சைகள் குறித்து முகமது ஷாநவாஸ் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
அப்போது ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்ப ட்டு முதல் பிரசவமாக மேலவாஞ்சூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி ரோஷி (வயது 27) என்பவருக்கு பிறந்த ஆண் குழந்தையை பார்வையிட்டு அவருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பரிசு பெட்டகத்தை வழங்கினார்.மேலும் அந்த குழந்தைக்கு தருண் என்ற பெயர் சூட்டினார்.
பின்னர் அதைத் தொடர்ந்து திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளத்திடலில் இடிக்க ப்பட்ட சமுதாயக்கூடத்திற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் கட்டுமான பணி களை தொடங்கப்படாமல் இருப்பதை பார்வையிட்டு உடன் கட்டுமான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷாசி த்திக்கா,வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் ,பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன்,பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகமது சுல்தான்,பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ்,சுகாதார ஆய்வாளர் பரமநாதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நாட்டுமட மாரியம்மன் புரட்டாசி பெருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
8-ம் நாள் திருவிழாவில் பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள் பால் தயிர் பஞ்சாமிர்தம் பன்னீர் இளநீர் சந்தனம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்பு அம்மன் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் பரிவார தேவதைகளுடன் கோவிலை சுற்றி வீதி உலா காட்சி நடைபெற்றது வேதாரணியம் கோயில் வாதின வித்துவான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
- மாணவிகள் விழிப்புணர்வு பகாதைகளுடன் கோடியக்கரை பூங்காவிலிருந்து ஊர்வலமாக சரணாலயம் வந்தனர்.
- அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக்காப்பாளர் அபிஷேக் தோமர், உத்தரவின்படி நாகப்பட்டினம் வனஉயிரினக் கோட்டம் வேதாரண்யம் வனச்சரகம் கோடியக்கரை சரணா லயத்தில் வனஉயிரின வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்சியாக வனசரக அலுவலர் அயூப்கான் தலைமையில் கோடியக்கரை அரசு மேல்நிலைபள்ளி மாணவ, மாணவிகள் ஆரியர்கள், வனத்துறை , பணியாளர்கள், வனவர்கள் மகாலெட்சுமி, பெரியசாமி, சதீஷ்குமார். மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர், பாலசுப்பிரமணியன் மற்றும் துணை தலைவர் குமார் ,உறுப்பினர்கள் ராமன், வீரசுந்தரம், சிவகணேசன் உள்ளியிட்டோர் கலந்துகொ ண்டனர்.
பின்பு தம்புசாமி இல்லவளாகத்தில் மரக்கன்று நடப்பட்டன .வன உயிரின வாரா நிகழ்ச்சியினை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பகாதைகளுடன் கோடியக்கரை பூங்கா விலிருந்து ஊர் வலமாக சரணாலயம நுழைவுவாயிலை வந்த டைந்து அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பின் சரணாலய பகுதிகளை சுற்றி காண்பித்தும் வனஉயிரினங்கள், வனம், மற்றும் பறவைகள் குறித்து டாக்டர். சிவகணேசன் மாணவ- மாணவிகளுக்கு எடுத்து உரைத்தார்.
முடிவில் வனஉயிரின வார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
- காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது.
- வீட்டில் இருந்த பொருட்கள், முக்கிய ஆவணங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை சிவன்தெற்கு வீதியை சேர்ந்தவர் அருள்வாசகம். இவர் குத்தாலம் பேரூராட்சியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அருள் வாசகம் பணிக்கு சென்ற நிலையில், மனைவி மங்கையர்கரசியும் வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடைக்கு சென்று விட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக அருள் வாசகம் வீட்டில் தீப்பிடித்தது. தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ மளமள வென பரவியது.
இது குறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இருந்தும் வீட்டிலிருந்த பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் நில பத்திரம், ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டி ருக்கலாம் என்று கூறப்படு கிறது. இது குறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மொத்தம் 11 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட்டுள்ளது.
- இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
முக்குலத்துப் புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :-
கடந்த ஆண்டு பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் , சட்டமன்றம், சட்டமேலவை ஆகியவற்றின் ஒப்புதலோடு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அந்த மாநிலத்தில் சாதிவாரி கணக்கீடை நடத்த உத்தரவிட்டார்.
மொத்தம் 11 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட்டுள்ளது.
இதே போல கேரளாவிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போவதாக அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இதுவே உண்மையான சமூகநீதி என்று முக்குலத்துப்புலிகள் கட்சியின் சார்பில் நீண்ட காலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம்.
பீகாரை முன்மாதிரியாக கொண்டு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
அதேபோல தேசிய அளவிலான கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






