என் மலர்
நாகப்பட்டினம்
- அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- சண்டியாகம் 23-ந் தேதி, ஊஞ்சல் உற்சவம் 25-ந் தேதி நடைபெறுகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூரில் பிரசித்திப் பெற்ற தேவ துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழா அம்மனுக்கு பூச்சொரிதலுடன் தொடங்கியது.
முன்னதாக பெண்கள் பூத்தட்டுகளை சுமந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அம்மனுக்கு மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீ பாரதனை காண்பிக்க ப்பட்டது.
நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பால்குட ஊர்வலம் மற்றும் ரதக்காவடி ஊர்வலம் வரும் 22 தேதியும் , மகா சண்டியாகம் 23ஆம் தேதி, ஊஞ்சல் உற்சவம் 25ஆம் தேதி நடைபெறுகிறது.
இவ்விழாவில் கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி விஜயேந்திர சுவாமிகள் செய்திருந்தார்.
- நாகை - இலங்கை இடையான கப்பல் போக்குவரத்து சேவை நேற்று காலை நாகையிலிருந்து தொடங்கப்பட்டது.
- கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட மறுநாளே ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை - இலங்கை இடையான கப்பல் போக்குவரத்து சேவை நேற்று காலை நாகையிலிருந்து தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று காணொலி மூலம் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
நாகை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை, மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்தா சோனாவால், தமிழக சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நேற்று கப்பலில் 50 பயணிகள் பயணம் செய்தனர். மீண்டும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் கப்பல் மாலை நாகை துறைமுகம் வந்தடைந்தது. கப்பலில் ஆர்வமுடன் வந்திறங்கிய 30 இலங்கை பயணிகளுக்கு நாகை துறைமுக அலுவலர்கள் இனிப்புகளை கொடுத்து வரவேற்றனர்.
இந்த நிலையில் இன்று நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் கப்பலில் செல்ல 7 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதால் இன்று பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே பயணிகள் கப்பல் இயக்கப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட மறுநாளே ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காதோலை கருகமணியை கடலில் விட்டு புனித நீராடி சூரியபகவானை வழிபட்டனர்.
- வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம்:
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய 3 அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகும்.
இந்த நாட்களில் மூதாதையர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம்.
இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று திதி, நீர்க்கடன் செய்ய வேண்டும். இதனால் அவர்களது ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். நாம் செய்த பாவங்கள் நீங்கும்.
நீர்நிலைகள் அருகே அமர்ந்து வேதமந்திரங்கள் சொல்லி திதி கொடுப்பது, மூதாதையர்கள் நினைவாக பிண்டம் செய்து உணவாக படைப்பது என்று செய்து வருகின்றனர்.
அதன்படி, நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது எனப்படும் சித்தர் கடலில் இன்று சூரிய உதயத்தின் போது கடலில் ஏரளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் தேங்காய், வெற்றிலைபாக்கு, எலும்பிச்சைபழம், காதோலை கருகமணியை கடலில் விட்டு புனித நீராடி சூரியபகவானை வழிபட்டனர் .
பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
- அந்த பஸ் நிற்காமல் அதிவேகமாக சென்றது.
- விதிமீறல்கள் தொடர்பாக ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை வட்டார போக்கு வரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நாகை புறவழிச்சாலை செல்லூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேதாரண்யத்தில் இருந்து நாகை வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிறுத்த முயன்றனர்.
ஆனால் அந்த பஸ் நிற்காமல் அதி வேகமாக சென்றது.
இதில் சந்தேகம் அடைந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 2 கிலோ மீட்டர் விரட்டி சென்று வாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே பஸ்சை மடக்கி பிடித்தனர்.
பின்னர் ஆவணங்களை சோதனை செய்த போது, வரி கட்டாமல் பஸ்சை இயங்கியதும், பல்வேறு ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.
இதையடுத்து விதிமீறல்கள் தொடர்பாக ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆம்னி பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவல கத்திற்கு கொண்டு சென்றனர்.
- நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது.
- இந்தப் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குச் செல்வதற்கு ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து ரூ.7,670 டிக்கெட் (ரூ.6500 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டியுடன் சேர்த்து ரூ.7670) விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை www.kpvs.in. என்ற இணையதளத்திற்குச் சென்று பயணத் தேதி, பாஸ்போர்ட் நகல், விசாவின் நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இலங்கையின் இணையதளம் அல்லது அருகில் உள்ள சுற்றுலா நிறுவனங்களை அணுகி கப்பல் பயணத்திற்கான சுற்றுலா விசா ஒரே நாளில் பெற்றுவிடலாம்.
முதல் நாள் பயணத்துக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜி.எஸ்.டி. வரி, 75 சதவீத சிறப்பு சலுகையுடன் ரூ.2,803 மட்டும் வசூலிக்கப்பட்டது.

இந்தப் பயணிகள் கப்பல் ஒரு மணிநேரத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதில் பயணிகளுக்குத் தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுபோக குளுகுளு ஏ.சி. வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள கப்பலில் பொழுதுபோக்கிற்காக 6 தொலைக்காட்சி பெட்டிகள் தமிழ், ஆங்கிலம், மற்ற மொழியினருக்கு தேவையான வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோக ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆபத்து காலங்களில் உயிர் காக்கும் மிதவை படகுகள், மருத்துவ உபகரணங்கள், தீயணைப்புக் கருவிகள் அனைத்தும் உள்ளன.
இந்தப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 10 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. அதன்பின் வட கிழக்கு பருவமழை காலம் என்பதால் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் சில மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மார்ச் மாதம் முதல் தினமும் போக்குவரத்து தொடங்க உள்ளது.
- நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது.
- இந்தப் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
நாகப்பட்டினம்:
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
- அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளது.
- வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை போட்டி தொடங்கும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டுப்பிரிவால் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளது.
அதன்படி நாளை காலை 7 மணிக்கு நாகை மீன்வள பொறியியல் கல்லூரியிலிருந்து தொடங்கி கங்களாஞ்சேரி ரோடு பெருஞ்சாத்தான்குடி வரை சைக்கிள் போட்டி நடத்தப்பட உள்ளது.
போட்டிகள் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது.
3 பிரிவுகளாக நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியாவில் தயாரான சைக்கிள்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
இப்போட்டியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 5ஆயிரமும், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும் , 3-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2ஆயிரமும், 4 முதல் 10-ம் இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதால் போட்டியில் கலந்து கொள்பவர்கள்அவரவர் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை போட்டி தொடங்கும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.எனவே போட்டியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 13, 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் அதிக அளவில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
- சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் ஊராட்சி சகடமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
உதவி இயக்குனர் அசன் இப்ராகிம் முன்னிலை வகித்தார்.
கால்நடை உதவி மருத்துவர் பிரியதர்ஷினி வரவேற்றார்.
முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும்எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள்- ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
இதில் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் உதவி டாக்டா்கள் முத்துகுமரன், ராதா, சிவப்பிரியா, ஸ்ரீதர் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
- நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- பாரம்பரிய நகர்மன்ற கட்டிடம் விரைவில் புனரமைக்கப்படும் என உறுதி கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகர்மன்ற அலுவலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில், நகராட்சியை தரம் உயர்த்துதல், பாரம்பரிய நகர்மன்ற கட்டிடத்தை புனரமைத்தல், பாரதி மார்க்கெட் மற்றும் நாகூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல் ஆகிய திட்டப் பணிகள் குறித்து விவாதிக்க ப்பட்டது.
அப்போது, நகராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சாக்கடை பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டுமென்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ வலியுறுத்தினார். மேலும் பாரம்பரிய நகர்மன்ற கட்டிடம் விரைவில் புனரமைக்கப்படும் என உறுதி கூறினார்.
கலந்தா ய்வுக் கூட்ட த்தில், நகர்மன்றத் தலைவர் இரா.மாரி முத்து, நகர்ம ன்றத் துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில்கு மார், நகராட்சி ஆணையர் ப.திருமால் செல்வம், நகராட்சி செயற்பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் பலகாரங்கள் வைத்து விற்பனை செய்யக்கூடாது.
- சமீபத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை, நாகப்பட்டினம் நகராட்சி சார்பில், உணவு விற்பனையாளர்கள் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் உரிமம், பதிவுச் சான்று முகாம் நாகப்பட்டினம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
உணவு விற்பனை நிறுவனங்கள் மீது புகார்களும் அதிகம் வரத் துவங்கியுள்ளது, உணவு விற்பனை நிலையங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும், கோழி, ஆட்டிறைச்சி உள்ளிட்ட வற்றைகையாளும் உணவு ஹோட்டல்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் கையாள வேண்டும்.
பழைய மற்றும் சமைத்து மீதமாகும் அசைவ உணவுகளை குளிர் பதனப் பெட்டிகளில் வைத்து மீண்டும் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
சைவ மற்றும் அசைவ உணவு தயாரிப்பில் செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக் கூடாது. அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் பலகாரங்கள் வைத்து விற்பனை செய்யக்கூடாது.
தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளில் சட்னி, சாம்பார், குருமா, காப்பி, டீ போன்றவற்றை கட்டி விற்பனை செய்யக்கூடாது. புளித்துப்போன மற்றும் கெட்டுப்போன நிலையில் தயிர், மோர் மற்றும் தேங்காய் சட்னி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்றார்.
இதில் ஹோட்டல் மற்றும் பேக்கரி உணவக சங்க நாகப்பட்டினம் நகரத் தலைவர் முருகையன், சங்க நிர்வாகிகள் பாண்டியன், மகேஷ் உள்ளிட்டு, ஹோட்டல், டீக்கடை, பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், இட்லி கடை, சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் 60-க்கும் அதிகமான உணவு விற்பனையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
20-க்கும் மேற்பட்டோர் உணவு பாதுகாப்புத்துறை பதிவுச் சான்று வேண்டி விண்ணப்பம் அளித்தனர்.முடிவில்
திருமருகல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆண்டனிபிரபு நன்றி கூறினார்.
- அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ முச்சந்தி மகா காளியம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளன.
ஆலயத்தின் புரட்டாசி பொங்கல் திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.
இதனையொட்டி, 500க்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து வீட்டில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை தாமரைக்குளம் தென்கரைதெரு, தர்ம கோவில் தெரு, மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆலயத்திற்கு எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகளுக்குப்பிறகு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று நீர்நிலையில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சக்தி கரகம் முன்னே செல்ல, ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம், வந்தடைந்தது.
அங்கு, முளைப்பாரியை வைத்து, பெண்கள் கும்மியடித்து, குலவையிட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து குளத்தில் முளைப்பாரி விடப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.
நாகப்பட்டினம்:
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் அகில இந்திய தடகள போட்டிகள் கோவாவில் நடைபெற்றது.
போட்டியில் பல மாநிலங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் ஜனனி என்ற மாணவி யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.
வெற்றிபெற்ற மாணவியை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழும இணைச்செயலாளர் சங்கர் கணேஷ், துறை தலைவர் கணேசன், அருள் செல்வன், முதலாம் ஆண்டு துறை தலைவர் தீபா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.






