என் மலர்
நாகப்பட்டினம்
கணவரை இழந்த ராஜராஜேஸ்வரி தனது மகள்கள் மற்றும் மாமியார் வடுவம்மாளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர்கள் வசித்து வரும் வீட்டிற்கு கீற்று கூட போட முடியாத நிலையில் பிளாஸ்டிக் பாய் போட்டு வாழ்ந்து வருகின்றனர். ராஜராஜேஸ்வரி 4 மகள்கள் மற்றும் கண் பார்வையில்லாத மாமியருடன் வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வருகிறார். பள்ளி படிப்பு படித்து வரும் மகள்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வரும் எங்களுக்கு வீடு கட்டித்தரவும், மகள்களின் படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் ராஜராஜேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜாசாகர் அணைகளில் இருந்து 9 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.
ஒகேனக்கல்லில் நேற்று மாலை விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 11 ஆயிரத்து 772 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 15 ஆயிரத்து 740 கன அடியானது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 400 கன அடியாக குறைக்கப்பட்டது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 113.59 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 114.46 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி சென்ற அரசு பேருந்து கரியாப்பட்டினம் பள்ளிவாசல் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்பக்க டயர் வெடித்து பேருந்தில் பயணம் செய்த கட்டிமேடு சேர்ந்த கார்த்திக் வயது 34 என்பவர் காலில் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்கரையில் இலங்கைக்கு கடல்வழியாக கடத்துவதற்காக படகில் கஞ்சா பதிக்கி வைத்து இருப்பதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் புஷ்பவனம் விரைந்து சென்று போலீசார் கடற்கரையில் நின்றிருந்த பைபர் படகுகளை சோதனை செய்தனர்.
இதில் மணிகண்டன் (வயது 33) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 3 சாக்கில் அடைக்கப்பட்ட 92 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.50 லட்சம் மதிப்புடைய கஞ்சா மூட்டைகள், படகையும் பறிமுதல் செய்தனர். மேலும் மணிகண்டனை கைது செய்து கடலோர காவல் குழும போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதுவரை பிடிபட்ட கஞ்சா வழக்குகளில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாமலும், அதனை கடத்துபவர்களுக்கு எந்த தண்டனையும் இதுவரை வழங்கப்படவில்லை. வழக்குகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவந்து தொடர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக்கவனம் எடுத்து போதைப் பொருள் கடத்துபவர்கள் மீதான வழக்கை விரைவில் விசாரித்த அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே கடத்தலை ஒழிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவேரி டெல்டா மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொருட்டு 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை எம்.எஸ்.எம்.இ. வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகம் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எந்தத் தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோ அந்தத் தொழிலுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் அரசாக தி.மு.க. அரசு மாறி விட்டது.
இது குறித்து தொடர்புடைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தடை செய்யப்பட்ட பட்டியலில் பெட்ரோ கெமிக்கல் இல்லை என்று பதிலளித்ததாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது.
2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் பிரிவு 22(2)-ல் இரண்டாவது அட்டவணையில் உள்ள தொழிற்சாலைகளை நீக்கவோ அல்லது சேர்க்கவோ வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. சட்டத்தில் இடமில்லை என்றால் அதற்கான விதிகளை சேர்க்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்து காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்க வேண்டும் என்பதும், சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி வேளாண் தொழிலை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதும் தான் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிலைப்பாடும் இது தான்.
‘மக்களுக்காக சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல’ என்பதைக் கருத்தில் கொண்டு, காவேரி டெல்டா பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... கோவில்களில் பக்தர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7-ம் நாள் விழாவான 16-ந் தேதியன்று தேரோட்டமும், 10-ம் நாள் விழாவான 19-ந் தேதியன்று பரணிதீபம், மகாதீபம் ஏற்றப்படும்.
அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள மாட வீதியில் அருணாசலேஸ்வரர், விநாயகர், முருகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமி தேர்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்த தேர்கள் தகர கொட்டகை மற்றும் பைபர் சீட்களால் ஆன கெட்டகையால் மூடப்பட்டு இருக்கும். தீபத்திருவிழாவை முன்னிட்டு தேர்களை புனரமைப்பு செய்வதற்காக கொட்டகைகள் அகற்றப்பட்டு உள்ளது. இந்த ஆண்டும் தீபத்திருவிழா கடந்த ஆண்டை போல கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா தொற்று குறையும் பட்சத்தில் திருவிழா நடத்த முதல்-அமைச்சர் அனுமதி அளிப்பார் என கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அதனால் இந்த ஆண்டு தீபத்திருவிழா எப்படி நடைபெற உள்ளது என்று கேள்விக்குறியாக உள்ளது.






