என் மலர்
செய்திகள்

ராஜராஜேஸ்வரி தனது மகள்கள் மற்றும் மாமியாருடன் உள்ளதை காணலாம்
கொரோனாவால் கணவர் இறந்ததால் 4 மகள்களுடன் வாழ்வாதாரம் இன்றி பரிதவிக்கும் பெண்
கொரோனாவால் கணவர் இறந்ததால் 4 மகள்களுடன் வாழ்வாதாரம் இன்றி பெண் பரிதவித்து வருகிறார். எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வேதாரண்யம்:
கணவரை இழந்த ராஜராஜேஸ்வரி தனது மகள்கள் மற்றும் மாமியார் வடுவம்மாளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர்கள் வசித்து வரும் வீட்டிற்கு கீற்று கூட போட முடியாத நிலையில் பிளாஸ்டிக் பாய் போட்டு வாழ்ந்து வருகின்றனர். ராஜராஜேஸ்வரி 4 மகள்கள் மற்றும் கண் பார்வையில்லாத மாமியருடன் வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வருகிறார். பள்ளி படிப்பு படித்து வரும் மகள்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வரும் எங்களுக்கு வீடு கட்டித்தரவும், மகள்களின் படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் ராஜராஜேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா செட்டிபுலம் இடையார் காட்டை சேர்ந்தவர் சுந்தரம் (வயது59). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜராஜேஸ்வரி (46). இவர்களுக்கு அபிராமி (17), பிரபா (14), நிதியரசி (12), அகல்யா (10) ஆகிய 4 மகள்கள். சுந்தரத்தின் தாய் வடுவம்மாள் (92). கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுந்தரம் கடந்த மாதம் 28-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Next Story