என் மலர்
நீங்கள் தேடியது "தீபாவளி விற்பனை"
- ஜவுளி கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் வெள்ளம் போல திரண்டது.
- சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளிலும் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
சென்னை:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளிக்கு புதிய ஆடை அணிவதும், இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், பட்டாசு வெடிப்பதும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் பாரம்பரிய பழக்கமாக உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. கடந்த வாரம் இந்த விற்பனை சூடு பிடித்தது. ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்தது.
இந்த நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து பட்டாசு விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 9 ஆயிரம் பட்டாசு விற்பனை கடைகளுக்கு தீயணைப்பு துறையினர் தற்காலிக அனுமதி வழங்கி உள்ளனர். இன்று முதல் பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது.
அதுபோல தீபாவளி தினத்தன்று பயன்படுத்தவும், உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கவும் இனிப்பு வகைகளை வாங்குவதும் அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக சென்னையில் இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. இன்று இனிப்பு கடைகளில் பார்சல், பார்சலாக இனிப்புகள் விற்பனையானது.
தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற இனிப்பு கடைகளில் இருந்து சென்னைக்கு லாரி, லாரியாக இனிப்புகள் கொண்டு வரப்பட்டன. அந்த இனிப்புகளும் இன்று ஒரே நாளில் விற்று தீர்ந்தன.
தீபாவளியை முன்னிட்டு அசைவ பிரியர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆடுகள் விற்பனையும் அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக தெரியவந்துள்ளது.
சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளிலும் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதன் காரணமாக தீபாவளி உற்சாகம் இன்றே மக்கள் மனதில் காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து இன்று மதியம் வரை சுமார் 15 லட்சம் பேர் பஸ்கள், ரெயில்கள், தனியார் வாகனங்கள், சொந்த வாகனங்களில் சென்று இருப்பதாக தெரிய வந்து உள்ளது. இதே போன்று தமிழ்நாட்டின் மற்ற நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்கள் இன்று சாலை பயணம் மேற்கொண்டதால் தமிழ்நாட்டின் முக்கிய சாலைகளில் இன்று வாகனங்கள் அதிகளவில் இயக்கப்பட்டதை காண முடிந்தது. பல இடங்களில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில கிலோ மீட்டர்களை கடந்து செல்வதற்கு 3 மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்க நேரிட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஜவுளி கடைகளில் இன்று காலை முதலே மக்கள் அலை அலையாக வந்து புதிய துணிகளை ஆர்வமுடன் வாங்கினார்கள். இதனால் ஜவுளி கடைகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
ஜவுளி கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் வெள்ளம் போல திரண்டது. இதனால் அந்த பகுதிகளில் நீண்ட நேரத்துக்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாடி, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, மயிலாப்பூர், அடையாறு, சோழிங்கநல்லூர், பிராட்வே, தாம்பரம், குரோம்பேட்டை, கீழ்க்கட்டளை, கூடுவாஞ்சேரி பகுதிகளில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் இன்று காலை அலைமோதியது. சென்னை புறநகர் பகுதி மக்கள் மற்ற இடங்களுக்கு ஜவுளிகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்க படையெடுத்ததால் இன்று இறுதிக்கட்ட விற்பனை அமோகமாக நடந்தது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் அலைஅலையாக சென்னைக்குள் திரண்டு வந்தனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளி விற்பனை களை கட்டியது.
பக்கத்து மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் சென்னைக்கு வந்து இருந்தனர். அவர்கள் ஜவுளிகள், இனிப்புகள், பட்டாசுகள், பாத்திரங்கள், நகைகள் போன்றவற்றை வாங்கி சென்றனர். இதனால் புறநகர் செல்லும் ரெயில்கள், பஸ்கள் நிரம்பி வழிந்தன.
இன்று பிற்பகல் 4 மணிக்கு பிறகு சென்னை நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் கடல் அலைபோல் திரளக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை முக்கிய பகுதிகளில் சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வாகன போக்குவரத்து அதிகரித்து இருப்பதால் இன்று மதியம் முதல் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. மின்சார ரெயில்கள் நிரம்பி வருகின்றன. கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமாளிக்கவும் போக்குவரத்து போலீசார் இரவு-பகலாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை பட்டாசு மற்றும் இனிப்பு விற்பனை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ப போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
- ரூ.2 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர தெருவில் அமைந்துள்ள பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடந்தது.
விழாவிற்கு கைத்தறி துறை உதவி இயக்குநர் மணிமுத்து முன்னிலை வகித்தார். வேலூர் மண்டல மேலாளர் நாகராஜன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலெக்டர் பா.முருகேஷ் குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்.
கோ ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது. 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டில் சுமார் 174.10 கோடிக்கு விற்பனை இலக்கை எட்டியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு ட்வில் வீவ் ஆயத்த ஆடைகள், காம்பிரே ஆயத்த ஆடைகள், ஸ்லவ் காட்டன் சட்டைகள், டிசைனர் காட்டன் சேலைகள், டிசைனர் கலெக்சன் போர்வைகள், காம்பிரே போர்வைகள் ஆகியவை புதிய வரவுகளாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 91 லட்ச ரூபாய் விற்பனை செய்த பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஆண்டு ரூ.2 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
56 சதவீதம் கூடுதல் பலன் கிடைப்பதால் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அரசு ஊழியர்கள் 30 சதவிகித தள்ளுபடியில் வட்டியில்லா கடன் வசதியை பெற்று பயன்பெறலாம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக அனைத்து விடுமுறை நாட்களிலும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் செயல்படும் என கைத்தறி துறை உதவி இயக்குநர் மணிமுத்து தெரிவித்தார்.
இதில் விற்பனை மேலாளர் தணிகைவேலு, குமரவேல், நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வேப்பமூடு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
- ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டா டப்படும். தீபாவளி பண்டி கைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் மாவட் டத்தில் உள்ள கடை வீதி களில் இன்று கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவிலில் கடந்த 2 நாட்களாக காலையில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இதை யடுத்து கடை வீதிகளுக்கு காலை முதலே பொதுமக்கள் வரத்தொடங்கினார்கள்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் இருசக்கர வாக னங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் குடும்பத் தோடு கடை வீதிக்கு வந்தி ருந்தனர். இதனால் நாகர்கோ வில் செம்மங்குடி ரோட்டில் கூட்டம் அலை மோதியது. ஜவுளிக்கடை களில் தீபாவளி பண்டிகை யையொட்டி புத்தாடைகள் பல்வேறு டிசைன்களில் விற்பனைக்கு வந்திருந்தது. குழந்தைகள் முதல் பெரி யவர்கள் வரை அதை எடுத்து மகிழ்ந்தனர். மீனாட்சிபுரம் சாலை, கலெக் டர் அலுவலக சாலை, செட்டிகுளம், வட சேரி, வேப்பமூடு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
பொதுமக்கள் குடும்பத் தோடு வந்து புத்தாடைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். இதேபோல் தீபாவளி பண்டிகையை யொட்டி பேக்கரிகளில் பல்வேறு விதமான இனிப்பு வகைகளும் தயார் செய்து வைக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் அவற்றை வாங்கி சென்றனர். பட்டாசு கடைகளிலும் இன்று கூட் டம் அதிகமாக இருந்தது. பல்வேறு விதமான பட்டாசு கள் விற்பனைக்கு வந்துள் ளது. பொதுமக்கள் தங்க ளுக்கு தேவையான பட்டாசு களை ஆர்வமாக வாங்கி சென்றனர். ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், பேக்கரிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து நாகர்கோவில் நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
கோட்டார், செட்டிகுளம், வடசேரி பகுதிகளில் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அண்ணா பஸ் நிலையம், வட சேரி பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட் டது. கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் உத்தர வின்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மப்டி உடை யில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். சந்தேகப்ப டும்படி யாக நபர்கள் யாராவது சுற்றித்திரிந்தால் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கு மாறும் ஒலி பொருக்கி மூலமாக அறி விப்புகள் வெளியிடப்பட் டது. அஞ்சுகிராமம், கன்னி யாகுமரி, கொட்டாரம், ஆரல்வாய்மொழி, குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம், இரணியல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் இன்று ஜவுளி கள் எடுப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
அண்ணா பஸ் நிலையம், வடசேரி, கோட்டார், செட்டிகுளம் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப் பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.
- கடைவீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
- கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
நாகர்கோவில் :
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வரு கிறது.
நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் இன்று காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புத்தாடைகள் எடுப்ப தற்காக கடைவீதிகளுக்கு வந்திருந்தனர்.
தீபாவளி பண்டி கைக்காக புத்தம் புது மாடல்களில் சிறுவர் களுக்கான புத்தாடைகள் கடைகளுக்கு வந்திருந்தது. அதை பொதுமக்கள் தேர்வு செய்து வாங்கி சென்றனர். மேலும் வடசேரி, செட்டிகுளம் கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள துணிக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. பட்டாசு கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளியை குதூகலபடுத்தும் வகையில் புத்தம் புது மாடல்களில் பட்டாசுகள் விற்பனைக்கு வந்திருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். இரவு வான வேடிக்கைகள் 120 ஷாட் முதல் 1000 ஷார்ட் வரை இந்த முறை விற்பனைக்கு வந்துள்ளது.
ஆயிரம் ஷார்ட் வெடிகள் சுமார் 2 மணி நேரம் வரை வானில் வெவ்வேறு வண்ணங்களில் வெடித்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. மேலும் தீபாவளி பட்டாசு கிப்ட் பாக்ஸ்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது. பொது மக்கள் பட்டாசுகளை வாங்கி சென்றனர். பட்டாசு கடைகளை கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
லைசென்சு இல்லாமல் யாராவது பட்டாசு விற்பனை செய்கிறார்களா? என்பது குறித்து கண்காணிப்பு குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் தீயணைப்புத்துறை சார்பிலும் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? என்பது குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. புத்தம் புது வகையான இனிப்பு வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பால்கோவா ஸ்வீட் பல வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. பொதுமக்கள் இனிப்பு மற்றும் கார வகைகளையும் வாங்கி சென்றனர். கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி யதையடுத்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஏற்கனவே கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்ததையடுத்து பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி யுள்ளனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ்நிலையத்தில் மப்டி உடையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். சந்தேகப்படும் படியான நபர்கள் யாராவது சுற்றி திரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தg; gட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டனர். பார்வதிபுரம், செட்டிகுளம், கோட்டாறு, அண்ணா பஸ் நிலைய பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், அஞ்சு கிராமம், களியக்காவிளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாக இருந்தது.







