search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் தீபாவளி விற்பனை களை கட்டியது
    X

    நாகர்கோவிலில் தீபாவளி விற்பனை களை கட்டியது

    • கடைவீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
    • கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

    நாகர்கோவில் :

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வரு கிறது.

    நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் இன்று காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புத்தாடைகள் எடுப்ப தற்காக கடைவீதிகளுக்கு வந்திருந்தனர்.

    தீபாவளி பண்டி கைக்காக புத்தம் புது மாடல்களில் சிறுவர் களுக்கான புத்தாடைகள் கடைகளுக்கு வந்திருந்தது. அதை பொதுமக்கள் தேர்வு செய்து வாங்கி சென்றனர். மேலும் வடசேரி, செட்டிகுளம் கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள துணிக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. பட்டாசு கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளியை குதூகலபடுத்தும் வகையில் புத்தம் புது மாடல்களில் பட்டாசுகள் விற்பனைக்கு வந்திருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். இரவு வான வேடிக்கைகள் 120 ஷாட் முதல் 1000 ஷார்ட் வரை இந்த முறை விற்பனைக்கு வந்துள்ளது.

    ஆயிரம் ஷார்ட் வெடிகள் சுமார் 2 மணி நேரம் வரை வானில் வெவ்வேறு வண்ணங்களில் வெடித்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. மேலும் தீபாவளி பட்டாசு கிப்ட் பாக்ஸ்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது. பொது மக்கள் பட்டாசுகளை வாங்கி சென்றனர். பட்டாசு கடைகளை கண்காணிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    லைசென்சு இல்லாமல் யாராவது பட்டாசு விற்பனை செய்கிறார்களா? என்பது குறித்து கண்காணிப்பு குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் தீயணைப்புத்துறை சார்பிலும் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? என்பது குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. புத்தம் புது வகையான இனிப்பு வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பால்கோவா ஸ்வீட் பல வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. பொதுமக்கள் இனிப்பு மற்றும் கார வகைகளையும் வாங்கி சென்றனர். கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி யதையடுத்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ஏற்கனவே கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்ததையடுத்து பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி யுள்ளனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ்நிலையத்தில் மப்டி உடையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். சந்தேகப்படும் படியான நபர்கள் யாராவது சுற்றி திரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தg; gட்டுள்ளது.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டனர். பார்வதிபுரம், செட்டிகுளம், கோட்டாறு, அண்ணா பஸ் நிலைய பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், அஞ்சு கிராமம், களியக்காவிளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாக இருந்தது.

    Next Story
    ×