search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை
    X

    கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை

    • கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
    • ரூ.2 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர தெருவில் அமைந்துள்ள பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடந்தது.

    விழாவிற்கு கைத்தறி துறை உதவி இயக்குநர் மணிமுத்து முன்னிலை வகித்தார். வேலூர் மண்டல மேலாளர் நாகராஜன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலெக்டர் பா.முருகேஷ் குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்.

    கோ ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது. 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டில் சுமார் 174.10 கோடிக்கு விற்பனை இலக்கை எட்டியுள்ளது.

    தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ட்வில் வீவ் ஆயத்த ஆடைகள், காம்பிரே ஆயத்த ஆடைகள், ஸ்லவ் காட்டன் சட்டைகள், டிசைனர் காட்டன் சேலைகள், டிசைனர் கலெக்சன் போர்வைகள், காம்பிரே போர்வைகள் ஆகியவை புதிய வரவுகளாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு 91 லட்ச ரூபாய் விற்பனை செய்த பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஆண்டு ரூ.2 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    56 சதவீதம் கூடுதல் பலன் கிடைப்பதால் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    அரசு ஊழியர்கள் 30 சதவிகித தள்ளுபடியில் வட்டியில்லா கடன் வசதியை பெற்று பயன்பெறலாம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக அனைத்து விடுமுறை நாட்களிலும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் செயல்படும் என கைத்தறி துறை உதவி இயக்குநர் மணிமுத்து தெரிவித்தார்.

    இதில் விற்பனை மேலாளர் தணிகைவேலு, குமரவேல், நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×