என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • திருவேங்கடநாதனை வழிமறித்து சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கினர்.
    • சிகிச்சை பலனின்றி திருவேங்கடநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் முக்கூட்டு பகுதியை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவருடைய மகன் திருவேங்கடநாதன் (வயது 24). டிரைவர்.

    இவரது உறவினர் ஆக்கூர் வேளாண் திடல் பகுதியை சேர்ந்த கண்ணையன் மகன் கலியபெருமாள் (26).

    இவர்கள் குடுபம்த்தினர் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கலியபெருமாளுக்கும், திருவேங்கடநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் இவரும் அங்கிருந்து சென்று விட்டனர். இதை தொடர்ந்து கலியபெருமாள் தனது ஆதரவாளர்களான ஆக்கூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த அருண் ஆகாஷ் (26) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோருடன் சென்று தனது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த திருவேங்கடநாதனை வழிமறித்து சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருவேங்கடநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியபெருமாள், அருண் ஆகாஷ் மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழக்காடும்போது உண்மையான சாட்சிகள் இருவிதமான விளைவுகளை தோற்றுவிக்கும்.
    • இளம் வழக்கறிஞர்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் தலைமை தாங்கியது.

    சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிவஞானம், ஆர்.எஸ்.பி.சவுந்தர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மேலும், இவ்விழாவில், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் 18 மூத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் ஏற்புரை வழங்கி உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம் பேசுகையில், வழக்காடும்போது உண்மையான சாட்சிகள் இருவிதமான விளைவுகளை தோற்றுவிக்கும். இளம் வழக்கறிஞர்கள் பொறு மையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

    இளம் வழக்கறிஞர்கள் திறமைகளையும் வளர்த்துக் கொள்வதில் மட்டுமின்றி, ஒழுக்கத்தை கடைப்பிடித்து நீதியை நிலை நாட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    இதில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மயிலாடுதுறை நீதிமன்றத்தை முழு அதிகாரத்துடன் கூடிய முதன்மை மாவட்ட நீதிமன்றமாக அமைத்துத்தர நீதியரசர்களிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தற்போது வரை 9 பேர் கைது செய்யப்பட்டு 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை தொடர்ந்து நடைபெறும்.

    சீர்காழி:

    சீர்காழியில் காரில் கஞ்சா கடத்திவருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி இன்ஸ்பெக்டர் புயல்.பாலச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் புறவழிச்சாலையில் வாகனதணிக்கை ஈடுப்பட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்த போது காரில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து காரை ஓட்டிவந்த கஞ்சா மொத்தவியாபாரி சிதம்பரம் பகுதியை சேர்ந்த ராஜா (எ) மனோஜ் (25) என்ற நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி, இது தொடர்பாக 9பேரை கைது செய்து, ரூ.2 ½ லட்சம் மதிப்புடைய 5 கிலோ கஞ்சா மற்றும் 9 லட்சம் மதிப்பிலான சொகுசு காரினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து சீர்காழி காவல்நிலையம் வருகைபுரிந்த மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா, கஞ்சாவிற்பனையில் ஈடுப்பட்ட 9பேரை கைது செய்த போலீசாரை பாராட்டியதோடு, இன்ஸ்பெக்டர் புயல்.பாலசந்திரனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்து வதற்காக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் தற்போது வரை 9 பேர் கைது செய்யப்பட்டு 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை தொடர்ந்து நடைபெறும்.

    கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பதற்காக பிரத்தியேக வாட்ஸ்அப் எண் (9442626792) அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண் 04364 211600 என்கிற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவரின் பற்றிய விபரம் பாதுகாக்கப்படும்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 72 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரூ.8 லட்சம் மதிப்புள்ள 39 கிலோ கஞ்சா இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    அப்போது ஏடிஎஸ்பி. தங்கவேல், டிஎஸ்பிகள் லாமேக், கணேசன், ஜெயபாலன், சுகுமார், ராஜ்குமார் காவல்ஆய்வாளர் தனிப்பிரிவு சதீஷ், புயல் பாலச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

    • வயலையொட்டி வசதியாக பாதை அமைக்க இடத்தை கோவிலுக்காக அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.
    • வயலில் இறங்கி அங்கு நடப்பட்டிருந்த நாற்றுகளை சேதப்படுத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே கொற்கை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). விவசாயி. இவரது வயலையொட்டி பொது கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு செல்லும் பாதை குறுகலாக உள்ளது. இவரது வயலையொட்டி வசதியாக பாதை அமைக்க இடத்தை கோவிலுக்காக அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.

    ஆனால் இடத்தை கொடுக்க கண்ணன் மறுத்துவிட்டார். சம்பவத்தன்று கண்ணன் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து மொட்டை போட்டுள்ளார்.

    இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த கென்னடி, அவரது மனைவி கலையரசி, அவர்களது மகன் சிலம்பரசன் (22), மகள் உஷா மற்றும் சிலர் கண்ணனை திட்டி தாக்கினர்.

    மேலும் சிலம்பரசன் தரப்பினர் கண்ணன் வயலில் இறங்கி அங்கு நடப்பட்டிருந்த நாற்றுகளை சேதப்படுத்தினர்.

    இதுகுறித்து கண்ணன் மணல்மேடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேதமடைந்த வகுப்பறை கட்டிடம் அகற்றப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர –வேண்டும்.
    • ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதம–டைந்திருப்பதால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

    தரங்கம்பாடி, டிச.18-

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் நந்தினி தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா,ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை–களை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-

    மோகன்தாஸ்:- மக்கள் கூடும் பொது இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    சாந்தி:- ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த தண்ணீர் தொட்டியை அகற்ற வேண்டும்.

    சக்கரபாணி:- மருதூர் நடுநிலைப்பள்ளியில் சேதமடைந்து வகுப்பறை கட்டிடம் அகற்றப்பட்ட இடத்தில் புதிதாக ஒரு வகுப்பறை கட்டிடம் தரவேண்டும்.

    ராஜ்கண்ணன்:- மடப்புரம் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் சேதமடைந்து இருப்பதால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

    முத்துலட்சுமி:-ஆறுபாதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் பகுதிநேரஅங்காடி அமைத்து தர வேண்டும். ஆறுபாதி சத்தியவான் வாய்க்காலில் நிலத்தடிநீர் பாதிக்கும் வகையில் மயிலாடுதுறை நகர பாதாள சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ரஜினி:-சேமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை ஆகிய ஊராட்சிகளில் மயான சாலை அமைத்து தர வேண்டும்.

    இதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சாலை வசதி மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நேரில் சென்று பார்வையிட்டு நிறைவேற்றப்படும்.

    தற்போது உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    இதில் மாவட்ட கவுன்சிலர்கள் வெண்ணிலா தென்னரசு, துளசிரேகா ரமேஷ் மற்றும் ஒன்றிய பொறியாளர் முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, வேளாண்மை துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் இளநிலை உதவியாளர் முருகன் நன்றி கூறினார்.

    • விஜய் 57-60 எடை பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை.
    • தங்க பதக்கம் வென்ற மாணவர் இன்பத்தமிழன் மாநில போட்டிக்கு தேர்வு.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட அளவில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் குத்தாலம் தாலுக்கா, திருமணஞ்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 9-ம் வகுப்பு மாணவன் இன்பத்தமிழன் 75-80 எடை பிரிவில் தங்க பதங்கமும், விஜய் 57-60 எடை பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஆசைத்தம்பி, அருண்ராஜ் மற்றும் வழிகாட்டியாய் இருந்த உதவி தலைமை ஆசிரியர் முருகன் ஆகியோர்களை தலைமை ஆசிரியை பிரேமாவதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்.

    தங்க பதக்கம் வென்ற மாணவர் இன்பத்தமிழன் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடி கீேழ விழுந்தது.
    • மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் இன்று நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

    மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இன்று தேர்வு நடை பெற்றது.

    இதைத் தொடர்ந்து இந்த கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் தேர்வு எழுதி விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

    அவர்கள் கல்லூரியில் இருந்து மன்னம்பந்தம் சாலையில் சென்ற போது நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. உடனே மோட்டார் சைக்கிளை ஒட்டிய மாணவர் திடீர் பிரேக் போட்டுள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடி கீேழ விழுந்தது.

    இந்த சாலை விபத்தில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரையபுரம் நடுத்தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் லோகேஸ்வரன் (வயது 17) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுாயம் அடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரித்து வருகிறார்கள். சாலை விபத்தில் மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தவிட்டு மற்றும் உமி ஆகியவைகள் குடோனில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது.
    • குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து இயங்கி வரும் இந்த அரிசி ஆலையின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் இங்கு எடுத்து வரப்பட்டு ஊறல் போடப்பட்டு உலர வைக்கப்பட்டு பின்னர் அரைக்கப்பட்டு ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆலையில் நெல் அரவை செய்யும்போது, அரவை இயந்திரத்தின் மூலம் வெளியேறும் தவிடு மற்றும் உமி ஆகியவைகள் அங்குள்ள குடோனில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியை சேமித்து வைக்கப்பட்டுள்ள குடோனில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதனை அறிந்த இரவு நேர அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று திடீரென ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உரிய நேரத்தில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பேராபத்தும் பெரும் நஷ்டமும் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் மயிலாடுதுறையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
    • சுமார் 200 லிட்டர் சாராயம் காரைக்காலில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு அன்பழகன், உள்ளிட்ட போலீசார் மயிலாடுதுறையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது அந்த வழியாக காரை மறித்து சோதனை செய்தனர். அதில் சுமார் 200 லிட்டர் சாராயம் காரைக்காலில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மயிலாடுதுறை நீடூர் பகுதி பல்லவராயன் பேட்டை சேர்ந்த பசுபதி (வயது 23) என்பவரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை திருடிய வழக்கு.
    • சுமார் 25 பவுன் தங்க கட்டியை போலீசார் கைப்பற்றினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரை அடுத்த மேலையூர் ராசாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 32). மேலையூர் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு மற்றும் 2 கொலை முயற்சி வழக்குகளில் முக்கிய குற்றவாளியான இவர் கைது செய்யப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு ஜாமீனில் வெளியே வந்தார்.

    அதன்பின்னர் மயிலா டுதுறை மாவட்டத்தில் பூம்புகார் அருகே குரங்குபு த்தூரில் டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை திருடிய வழக்கு, தலச்சங்காடு பகுதியில் வீட்டில் புகுந்து 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கு, மயிலாடுதுறை அருகே மணக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளையடித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு குற்ற சம்பவம் நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்ப டையில் அடையாளம் கண்டு போலீசார் தனிப்படை அமைத்து சிவானந்தத்தை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ராசாங்குளம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்ல் சிவானந்தம் வந்துள்ளது போலீசாருக்கு தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவானந்தத்தை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் பல்வேறு இடங்களில் கொள்ளை யடித்த தங்கத்தை உருக்கி தங்க கட்டியாக மாற்றி வைத்திருந்தது தெரியவந்தது. தற்போது அதில் சுமார் 25 பவுன் தங்க கட்டியை போலீசார் கைப்பற்றினார்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடராஜன் இறந்து விட்ட நிலையில் ருக்மணி தனது குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
    • சீர்காழியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருக்கோலக்கா தெரு சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ருக்மணி (வயது 80) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார்கள். நடராஜன் இறந்து விட்ட நிலையில் ருக்மணி தனது குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    சீர்காழி சுற்று வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இவரது கூரை வீட்டின் சுவர் சேதமடைந்து இருந்தது. இந்நிலையில் வழக்கம்போல் ருக்மணி தனது வீட்டில் உறங்கியுள்ளார்.

    இன்று அதிகாலை சேதம் அடைந்திருந்த வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து வீட்டின் உள்ளே படுத்திருந்த ருக்மணி மீது விழுந்துள்ளது. இதில் அவர் ஈடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

    வழக்கம் போல் அவரது மகள் உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்து கதவை திறந்த போதுதான் உள்ளே சுவர் இடிந்து கிடப்பது தெரிய வந்தது. பின்னர் இடிபாடுகளை அகற்றி பார்த்தபோது தான், தன் தாய் இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உதவியுடன் சுவற்றை அகற்றி ருக்மணியின் உடலை மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கிராமநிர்வாக அதிகாரி தமிழ்மணி மற்றும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மூதாட்டி ருக்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கஞ்சா விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை குடிநீர் தொட்டி அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், மயிலாடுதுறை அருகே சித்தர்காடு மெயின் ரோட்டை சேர்ந்த செல்லதுரை மகன் அரவிந்தன் (வயது 22) என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ×