என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • 80-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
    • தருமபுரம் ஆதீனத்திற்கும் எங்களுக்கும் தமிழ் நட்பு மட்டுமல்ல குடும்ப நட்பும் உண்டு.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியின் 75-ம் ஆண்டு பவள விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

    விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    முன்னதாக தருமபுரம் ஆதீனம் சார்பில் முதல்-அமைச்சருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, தருமை ஆதீன வானொளி, தொலைக்காட்சி ஒளி ஒலி பதிவகத்தை திறந்து வைத்தும், பவளவிழா மலர் மற்றும் திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல்களை வெளியிட்டார்.

    பின்னர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசுகையில்:-

    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 80-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது, முதல்-அமைச்சர் ஒவ்வொரு கோவிலுக்கும் ரூ.2 லட்சம் கொடுத்து திருப்பணிகளை தொடங்கி வைத்தார் என்றார்.

    தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்:-

    தருமபுரம் ஆதீனத்திற்கும் எங்களுக்கும் தமிழ் நட்பு மட்டுமல்ல குடும்ப நட்பும் உண்டு.

    நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளை பார்த்து வியந்து கொண்டிருக்கிறார்கள்.

    முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் ஆட்சிக்கு மட்டுமல்ல கோவிலின் விடியலுக்கும் சாட்சியாக உள்ளது என பல்வேறு மடாதிபதிகள் பாராட்டி வருகிறார்கள்.

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் அரசாக தமிழக அரசு உள்ளது.

    தருமபுரம் ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் பல்வேறு ஆதீனங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பது போதுமானது.

    விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆதீன நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் மகாபாரதி, முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ் விஜயன், ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, நகர்மன்ற தலைவர் செல்வராஜ், ஆதீனம் செயலர் செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன், திருக்கடையூர் கோவில் கூடுதல் கண்காணிப்பாளர் மணி உள்ளிட்ட அரசு ஊழியர்கள், மாணவ- மாணவிகள், ஆதீனம் ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும்.
    • கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அருகே ராதாநல்லூரில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் ஆலய மற்றும் அர்ச்சகர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    கூட்டத்தில் தொடர்ந்து வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும், சுக்கிரன், சூரியன், சந்திரன் ஆகிய 3 கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.
    • இந்த முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    கல்லூரியின் பவளவிழா மலரையும், திருக்குறள் உரைவளம் நூலையும் வெளியிட்டு, தருமை இணையதள வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி ஒளிப்பதிவகத்தினையும் முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

    1946ம் ஆண்டு தருமை ஆதீனம் 25வது குருமகா சன்னிதானம் தொடங்கிய இக்கல்லூரி 1972ம் ஆண்டு நடந்த வெள்ளிவிழாவில் கலைஞர் கலந்துகொண்டார்., பொன்விழா நிகழ்ச்சியில் பேராசிரியர் அன்பழகனும் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார். பவளவிழா கலந்துகொண்டு இந்த கலைரயங்கில் உரையாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    அறநிலையத் துறையை மிக சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அடிப்படையில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றுப் பன்னிரண்டு திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

    இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத் துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

    தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சினை வரும்போது ஆன்மீகவாதிகளும் போராடி உள்ளனர் என தெரிவித்தார்.

    • ஆவணி மாதம் நாகசதுர்த்தி அன்று பால் குட திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    சீர்காழி:

    கொள்ளிடம் அருகே குமிளங்காட்டில் ஆதிநாகத்தம்மன் கோயில் அமைந்துள்ளது.

    இந்த கோயிலில் வருடம் தோறும் ஆவணி மாதம் நாக சதுர்த்தி அன்று பால் குட திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்து வார்கள்.

    அதேபோல் இந்த வருடம் பால்குடம் திருவிழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு முதல் நாளிலிருந்து பத்தாம் நாள் வரை காப்பு கட்டிக் கொண்ட பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் தலையில் பால்குடம் மற்றும் அலகு காவடிகள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக நாகத்தம்மன் கோயிலுக்கு வந்து அடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்த பக்தர்கள் எடுத்து வந்த பாலை கொண்டு நாகாத்தம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு திபாரதனை காட்டப்பட்டது.

    விழாவில் பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் வந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் கோயில் அறங்காவலர் தெய்வேந்த அடிகளார் மற்றும் விழா குழுவினர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ காணாமல் போனது.
    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை சேர்ந்தங்குடி ஆனதாண்டவபுரம் சாலை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சரவணன் (வயது 39).

    ஆட்டோ டிரைவரான இவர் அந்த பகுதியில் உள்ள வள்ளலார் கோவிலில் இரவு காவலராகவும் இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு வள்ளலார் கோவில் வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளார்.

    அதிகாலை 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தபோது ஆட்டோ காணாமல் போயிருந்தது. இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்திருந்தார்.

    புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் ஆட்டோவை திருடி சென்றவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த பாலாஜி மகன் கட்டக்கால் கலியமூர்த்தி என்கிற கலியமூர்த்தி (36) என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து கலியமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த திருடி சென்ற ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட கலியமூர்த்தி மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த கலியமூர்த்தி மீது தாம்பரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் ஏற்கனவே மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்கள் திருடியதாக வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியின் பவள விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • புதிய கலையரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பழமையான தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. இதன் அருகிலேயே ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி அமைந்துள்ளது.

    இக்கல்லூரியின் 75-ம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை 24-ஆம் தேதி திறந்து வைத்து சிறப்புரயாற்ற உள்ளார்.

    மேலும் ஒலி ,ஒளி தொலைக்காட்சி, வானொலி பதிவகத்தை தொடங்கி வைத்து மற்றும் பவள விழா மலர், திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல் ஆகியவற்றை வெளியிடுகிறார்.

    இந்தக் கல்லூரியில் வெள்ளி விழா ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி பங்கேற்றார். தற்போது பவள விழா ஆண்டில் முதலமைச்சர் கலந்து கொள்வது சிறப்புக்குரியதாகும்.

    இந்த நிலையில் கலையரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளிடம் விழா ஏற்பாடுகள் குறித்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.

    இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன் மற்றும் பன்னீர்செல்வம், நகர மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதீனம் முப்பெரும் விழாவாக நடைபெறும்.

    இந்த நிகழ்வுகளில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    • மாணவர்களுக்கு சமூக வலைதள பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் நிலை குறித்து கருத்துகளை எடுத்துரைத்தார்.

    சீர்காழி:

    சீர்காழியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சமூக வலைதள பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு போதை மற்றும் சமூக வலைதள பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளி தலைமைஆசிரியர் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தார்.

    உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரெங்கன், சீனி வாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை துணைக் கண்காணிப்பாளர் கலை கதிரவன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கருத்துக்களை வழங்கினார் சிறுவய திலேயே போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் நிலை குறித்து பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார்.

    மேலும் மாணவிகள் சமூக வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக கையாள வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    பள்ளி மாணவர்க ளிடையே எவ்வித பாகுபாடும் இன்றி அனைவரும் சகோதரர்களாய் பழக வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி நடக்கிறது.
    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்டு மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம். அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில் புனரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசி திருப்பணிகள் நிறைவடைந்தது.
    • புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சிறு வேம்பு பராசக்தி என்கிற வேம்பரிசி அம்மன் கோயில் உள்ளது.

    இக்கோவில் புனரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசி திருப்பணிகள் நிறைவடைந்தது.

    இதனை ஒட்டி கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம்பூர் வாங்க பூஜைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது விழா அன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை செய்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பூர்ணாஹூதி மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் மேள தாளங்களுடன் கோயில் விமான கலசத்தை வந்து அடைந்தது கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    இதில் கோயில் நிர்வாகி சாந்தகுமாரி, நகர் மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு மற்றும் திரளான பக்தர்கள் தெருவாசிகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீசார் செய்தனர்.

    • 4-ம் கால யாகசால பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமயிலாடியில் பிரகன்நாயகி உடனாகிய சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.

    சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும்.

    இந்த கோயிலில் தான் கோடிக்கணக்கான மதிப்பு வாய்ந்த பல கோயில்களில் இருந்து எடுத்து வரப்பட்ட ஐம்பொன் சிலைகள் மற்றும் விக்கிரகங்கள் இங்கு வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் இங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர்.

    எங்கும் இல்லாத படி இங்குள்ள வடக்கு நோக்கி நிஷ்டையில் அமர்ந்து காட்சி தரும் வடிவேல் குமரன் சந்நிதி இருந்து வருவது கூடுதல் சிறப்பாகும்.

    திருமயிலாடியில் பிரகன்நாயகி உடனாகிய சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடை பெற்றது.

    விழாவை யொட்டி முதல் நாள் காலை யாக பூஜை பூமி பூஜையுடன் துவங்கியது.

    தொடர்ந்து மூன்று கால யாகபூஜைக்கு பிறகு நேற்று நான்காவது யாக கால பூஜையிலிருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், பால கும்பாபிஷேகமும் மூலவருக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    தொடர்ந்து பிரகன்நாயகி, வடக்கு நோக்கிய வடிவேல் குமரன், குளக்கரை விநாயகர், நடராஜ பெருமான், கஜலட்சுமி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் கும்பாபி ஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழாவில் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன் , தொழிலதிபர் சகாதேவன், ஊராட்சி தலைவர்கள் நாகராஜன், இளவரசன்,கனகராஜ் மற்றும் உள்ளூர் வெளியூர்க ளிலிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள்செய்திருந்தனர்.

    • மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • நீட் ரத்து மசோதா வரும்போது வெளிநடப்பு செய்த கட்சி அ.தி.மு.க.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் தமிழக மாணவர்களிடையே நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டமானது மாலை 5 மணி வரை நடைபெற்றது.

    இந்தப் போராட்டத்தின் நிறைவில் பங்கேற்ற திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் , மாநிலங்களவைக்குழு உறுப்பினருமான திருச்சி சிவா கண்டன உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்விற்கு துணைபோன கட்சி அ.தி.மு.க., . நீட் தேர்வை ரத்து செய்கின்ற திருத்த சட்ட மசோதா வரும்போது வெளிநடப்பு செய்த கட்சி அ.தி.மு.க. என கூறினார்.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கடந்த 18-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.
    • கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசத்தை வந்தடைந்தன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் பாண்டூர் கிராமத்தில் பாலாம்பிகா சமேத ஆதி வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.

    பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்களில் 2-வது தளமான கோவிலில் பஞ்சபாண்டவர்கள் சுவாமியை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர்.

    மாணிக்க வாசகரால் போற்றி பாடல் பெற்ற இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் 18 ஆம் தேதி யாக கால பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன.

    நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து. மகாபூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வளம் வந்து விமானங்களை அடைந்தன.

    இதனை அடுத்து வேத மந்திரங்கள் ஓத மங்கள வாத்தியங்கள் இசைக்க சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு மகா கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் அபிஷேக ஆராத னைகள் நடை பெற்றன.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கும்பா பிஷேகத்தை மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர்.

    முன்னதாக சித்தி விநாயகர் கோவில் கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் விழா குழுவினர் கிராம மக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×