என் மலர்
மதுரை
- கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட இவரது காளை, பிடிமாடாக அறிவிக்கப்பட்டது.
- மனம் தளராக மாணவி, தனது ஜல்லிக்கட்டு காளை வீராவை அலங்காநல்லூரில் களமிறக்கினார். அந்த போட்டியில் அவரது காளை வெற்றி பெற்றது.
அவனியாபுரம்:
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்த யோக தர்ஷினி என்ற மாணவியின் காளை வெற்றி பெற்று உள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் அந்த மாணவி தனது வீட்டில் வடமுகத்து கருப்பு, வீரா, பாண்டி மணி ஆகிய 3 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.
கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட இவரது காளை, பிடிமாடாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் போட்டி குழுவினர் அவருக்கு ஆறுதல் பரிசு கொடுக்க முன் வந்தனர். ஆனால் தனது மாடு பிடிமாடாகியதால், அந்த பரிசு வாங்க மாணவி யோக தர்ஷினி மறுத்துவிட்டார்.
அதன் பிறகு இந்த ஆண்டு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தனது காளைகளை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று, அதனை தயார்படுத்தி வந்தார். அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க தனது காளைகளை பதிவு செய்திருந்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இவரது காளை பிடிமாடாகியது. அதில் மனம் தளராக மாணவி யோக தர்ஷினி, தனது ஜல்லிக்கட்டு காளை வீராவை அலங்காநல்லூரில் களமிறக்கினார். அந்த போட்டியில் அவரது காளை வெற்றி பெற்றது. இதற்காக யோக தர்சினிக்கு 2 தங்க காசுகள், ஒரு சைக்கிள் பரிசாக கிடைத்தது. அந்த பரிசை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி ஆகியோர் நேரடியாக மாணவிக்கு வழங்கி பாராட்டினர்.
- எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு
மதுரை
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் வி.கே.எஸ்.மாரிச்சாமி, பி.எஸ்.கண்ணன் முன்னிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் சோலை குணசேகரன், மீனவரணி மாவட்ட செயலாளர் ராமநாதன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் வையத்துரை மாரி, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் சுந்தரா, இளைஞரணி மாவட்ட செயலாளர் சரவணன், குருசாமி, பாண்டி கோவில் பூசாரி கார்த்திகேயன்,முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார்,கோச்சடை ராஜேந்திரன், ஒன்றிய செயலர்கள் யோகராஜ், ஜோதிமுருகன் மற்றும் முத்திருளாண்டி, துதிதிருநாவுக்கரசு, சோலை இளவரசன், ஆரைக்குடி முத்துராமலிங்கம், வேல்முருகன், கீழமாத்தூர் தங்கராஜ், குமரேசன், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சவர்ணம், சரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை ரெயில் நிலையம் முன்பு கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா, ரூ. 2,590-யும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை
மதுரை ரெயில் நிலைய முன்பு திலகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது சந்தேகப்படும் வகையில் கிழக்கு நுழைவாயில் அருகே நின்ற ஆட்டோவை கண்காணித்தார். அந்த ஆட்டோவில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் மெயின் ரோடு சிராக்உசேன் மகன் முகமது அனிபா (36), தனக்கன்குளம் வெங்களமூர்த்திநகர் மீரா உசேன் மகன் இம்ரான் கான் (22) ஆகியோரை கைது செய்தார். அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா, ரூ. 2,590-யும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மதுரை சிறையில் கைதி பரிதாபமாக இறந்தார்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
கரும்பாலை பி.டி.காலனியை சேர்ந்த முனியன் மகன் முருகன் (44). இவர் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி பாலகிருஷ்ணன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதி முருகனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை
மதுரை வண்டியூர் சி.எஸ். ஆர். தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 20). இவர் ரிங் ரோட்டில் உள்ள பஞ்சர் கடையில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த யாகப்பா நகர் வெற்றிவேல் மகன் அஜித்குமார் (26) அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.100-ஐ வழிப்பறி செய்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோட்டையை சேர்ந்தவர் ஞானசேகரன் (60). இவர் நரிமேடு அவ்வையார்தெரு ஆட்டோ நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை 2 வாலிபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. 600-ஐ வழிப்பறி செய்தனர்.
இதுகுறித்து ஞான சேகரன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட பி.பி. குளம் நேதாஜிரோடு மாணிக்கம் மகன் முருகன் என்ற டால்பின் (29), திருமங்கலம் ஆனந்த் நகர் குமார் மகன் கவியரசன் என்ற பொம்மை கையன் (23) ஆகியோரை கைது செய்தனர்.
- மதுரை தெற்கு கோட்டத்தில், நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை தெற்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (19-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மதுரை பெருநகர் மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் குறைகளை தெரிவிக்கலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
- மதுரையில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தினர்.
- மதுரை மாநகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை
தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி போக்குவரத்து போலீசார் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாநகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது வாகன ஓட்டிகளிடம், "தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன், அதிவேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட மாட்டேன், இருசக்கர வாகனத்தில் 3 நபர்களுடன் பயணிக்க மாட்டேன், குடிபோதையில் வாகனம் ஓட்ட மாட்டேன், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட மாட்டேன், சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்ற மாட்டேன், பயணிகள் ஏற்றி செல்லும் வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை பின்பற்றுவேன், போக்குவரத்து சமிக்கைகளை பின் பற்றுவேன், படிக்கட்டில் பயணம் செய்ய மாட்டேன்" என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினர்.
இதில் தல்லாகுளம் போக்குவரத்து உதவி கமிஷனர் மாரியப்பன், இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சின்ன கருத்தபாண்டி, ஆண்டவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
- தலைக்கவசத்தின் அவசியம் பற்றியும் விளக்கி பேசினர்.
மதுரை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாடிப்பட்டி போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் சரவணமுருகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜய ரங்கன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் பேசும்போது, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றியும், தலைக்கவசத்தின் அவசியம் பற்றியும் விளக்கி பேசினர். அப்போது, கடந்த ஆண்டு சாலை விபத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இனி வரும் காலங்களில் விபத்தே இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும், அது உங்கள் கையில் தான் உள்ளது. மிதவேகம் மிக நன்று, என்ற கருத்தை மனதில் கொண்டு வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்றனர். முடிவில் விவசாய ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.
- எழுமலையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- மேற்கண்ட தகவலை உசிலம்பட்டி செயற்பொறியாளர் அழகுமணிமாறன் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்டம் எழுமலை துணை மின்நிலையம், ராமநாத புரம், கிருஷ்ணா புரம், சின்னக்கட்டளை, மங்கள்ரேவு ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை (19-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப் பட்டி, அதிகாரி பட்டி, துள்ளுகுட்டிநாயக்கனூர், தி.ராமநாதபுரம், தி.கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, கோட்டை பட்டி, தாடையம்பட்டி, பாறை பட்டி, கோடநாயக்கன் பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், எ.பெருமாள்பட்டி, மானூத்து ஆகிய பகுதிகளில், சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவ், எஸ.கோட்டை ப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம், பொம்ம னம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரிய கட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராணம் பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தக வலை உசிலம்பட்டி செயற்பொறி யாளர் அழகுமணிமாறன் தெரிவித்துள்ளார்.
- சோழவந்தானில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.
- சுயம்பு சனீஷ்வரருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவ அபிஷேகம் நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் வைகையாற்றின் கிழக்கு கரையில் அமைந்து விசாக நட்சத்திர தலமாக விளங்கி வரும் சனீஷ்வரர் கோவிலில் திருகணித பஞ்சாங்கபடியான வக்கிர நிவர்த்தி விழா நடந்தது. சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு நேற்று மாலை 6.45. மணியளவில் பெயர்ச்சி ஆனார். இந்த நிகழ்வையொட்டி அர்ச்சகர் ராமசுப்பிரமணி தலைமையில் யாகவேள்வி தொடங்கியது. பின்னர் மாவலிங்கம் தலவிருட்சமாக உள்ள மூலவர் சுயம்பு சனீஷ்வரருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவ அபிஷேகம் நடந்தது. பக்தர்களின் பெயர் ராசிக்கு பரிகாரம் செய்து எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இந்த வக்கிர பெயர்ச்சியையொட்டி கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் ஆவார்கள். இதில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் வீரத்தை பறைசாற்றும் வகையில் நடத்தப்படும் போட்டி ஜல்லிக்கட்டு.
- மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள்.
தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் வீரத்தை பறைசாற்றும் வகையில் நடத்தப்படும் போட்டி ஜல்லிக்கட்டு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டில்
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் 15-ந் தேதியும், பாலமேட்டில் 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந்தேதியும் நடந்தது. அவனியாபுரத்தில் 737, பாலமேட்டில் 860, அலங்காநல்லூரில் 825 என 3 இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 2,422 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 1,200 வீரர்கள் பங்கேற்றனர்.
உலகப் பிரசித்தி பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. காலை தொடங்கியதில் இருந்து மாலை முடியும் வரை மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. வாடிவாசலில் இருந்து திமிறிக் கொண்டு ஓடி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு பிடித்தனர். ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளையும் பல வீரர்கள் பாய்ந்து பிடித்து அசத்தினர்.
அதே நேரத்தில் ஏராளமான காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டி விட்டு ஓடியது. அதிலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இலங்கை முன்னாள் மந்திரி செந்தில் தொண்டைமான், நடிகர் சூரி, ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரின் காளைகள் களத்தில் நின்று விளையாடின. அவர்களது காளைகள் பிடிக்க முடியாத அளவுக்கு ஆக்ரோஷம் காட்டி வீரர்களை தூக்கி வீசி ன.
அதுமட்டுமின்றி போட்டியில் பங்கேற்ற சென்னகரம்பட்டி செல்வராணி, ஆனையூர் மாணவி தீப்தி,மதுரை சேர்ந்த வேதா, ஐராவதநல்லூர் பள்ளி மாணவி யோக தர்ஷினி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் வளர்த்த காளைகளும் களம் கண்டன. அந்தக் காளைகளும் களத்தில் கலக்கின. பல காளைகள் களத்தில் நின்று விளையாடி, வீரர்களை தூக்கி வீசியது. காளைகள் ஆக்ரோஷமாக நின்று விளையாடியதும், அனைத்து காளைகளையும் வீரர்கள் போட்டி போட்டு அடக்கியதும் பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிக பரிசுகள் தரமானதாகவும், விலை மதிப்புள்ளதாகவும் வழங்கப்பட்டன. அலங்காநல்லூரில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள்கள், தங்க காசுகள், தங்க மோதிரம், கட்டில், பீரோ, கிரைண்டர், எல்.இ.டி. டி.வி., வால் கிளாக், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
அது மட்டுமே போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும், வாடிவாசல் அவிழ்க்காத காளைகளுக்கும் அமைச்சர் மூர்த்தி தங்கக்காசு வழங்கினார். மேலும் பல காளைகளை அடக்கிய வீரர்கள், வீரர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் என்ற வாலிபருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு அமெரிக்காவின் ஹுஸ்டன் தமிழ் சங்கம் சார்பில் நாட்டு மாடு பரிசாக கொடுக்கப்பட்டது.
இந்த போட்டியில் 20 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த ஏனாதியை சேர்ந்த அஜய், 12 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பிடித்த அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித் ஆகியோருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு களத்தில் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் சுழன்று ஆட்டம் காட்டிய புதுக்கோட்டை கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. அந்த காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த புதுக்கோட்டை சுரேஷ் என்பவரின் காளை மற்றும் மூன்றாம் இடம் பிடித்த உசிலம்பட்டி பாட்டாளி ராஜா ஆகியோரின் காளைக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டன.
மொத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் ஏராளமான பரிசுகளுடன் ஜல்லிக்கட்டு களத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.
+2
- சிறந்த காளையின் உமையாளர் புதுக்கோட்டை தமிழ்ச்செல்வனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
- ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் என மொத்தம் 53 பேர் காயமடைந்தனர்
மதுரை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளையர்களின் பிடியில் சிக்காமல் பெரும்பாலான காளைகள் கெத்து காட்டின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
விறுவிறுப்பாக மொத்தம் 10 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. மொத்தம் 823 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில், அபி சித்தர் என்ற மாடுபிடி வீரர் 26 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
20 காளைகளை அடக்கிய ஏனாதி அஜய் என்பவர் இரண்டாம் பரிசும், 12 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் ரஞ்சித் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் என மொத்தம் 53 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.






