என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை
    X

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் ஊர்வலமாக வந்தனர்.

    எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை

    • எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் வி.கே.எஸ்.மாரிச்சாமி, பி.எஸ்.கண்ணன் முன்னிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சியில் சோலை குணசேகரன், மீனவரணி மாவட்ட செயலாளர் ராமநாதன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் வையத்துரை மாரி, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் சுந்தரா, இளைஞரணி மாவட்ட செயலாளர் சரவணன், குருசாமி, பாண்டி கோவில் பூசாரி கார்த்திகேயன்,முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார்,கோச்சடை ராஜேந்திரன், ஒன்றிய செயலர்கள் யோகராஜ், ஜோதிமுருகன் மற்றும் முத்திருளாண்டி, துதிதிருநாவுக்கரசு, சோலை இளவரசன், ஆரைக்குடி முத்துராமலிங்கம், வேல்முருகன், கீழமாத்தூர் தங்கராஜ், குமரேசன், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சவர்ணம், சரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×