என் மலர்tooltip icon

    மதுரை

    • 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்க லம் அருகே உள்ள சாப்டூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது40). இவரது மகள் பெத்தம் மாள்(14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று காலை வெளியே சென்றிருந்த ராஜேந்திரன் மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் தனியறையில் பெத்தம்மாள் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மகளை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் பெத்தம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெத்தம்மாள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    திருமங்கலம் அருகே உள்ள வில்லூரை சேர்ந்த வர் மலைச்சாமி. இவரது மனைவி ஆறுமுகம்(47). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்திய டைந்த ஆறுமுகம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சதுரகிரிக்கு அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
    • காலை 7 மணிக்கு வனத்துறை பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்த பின் மழை ஏற அனுமதிக்கப்பட்டனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலை மேல் உள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த மாதம் சித்திரை மாத அமாவாசையை (19-ந் தேதி முன்னிட்டு இன்று முதல் வருகிற 20-ந் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி பிரதோஷ நாளான இன்று 17-ந் தேதி அதிகாலை முதல் விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் சதுரகிரி மலை அடிவாரத்தில் திரண்டனர்.

    காலை 7 மணிக்கு வனத்துறை பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்த பின் மழை ஏற அனுமதிக்கப்பட்டனர். கோடை காலம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் வெயில் வருவதற்கு முன்பே மலை ஏறுவதை காண முடிந்தது.

    மலையேறுபவர்களின் வசதிக்காக மலைப்பாதைகளில் உள்ள சங்கிலி பாறை, வழுக்குப்பாறை, காராம் பசு சந்திப்பு, விலாவடி கருப்பசாமி கோவில் பகுதிகளில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

    காலை 9 மணி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் சிரமத்துடன் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடந்தது.

    • உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட இந்த யானைக்கு கோவில் நிர்வாகம் தெய்வானை என பெயர் சூட்டி பராமரித்து வருகிறது.
    • வழக்கத்திற்கு மாறாக அதன் உடல் எடை அதிகரித்திருந்தது தெரியவந்தது.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் கோவில் யானை அவ்வை மரணம் அடைந்ததையொட்டி கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அசாம் மாநிலத்தில் இருந்து 7 வயது பெண் யானை வாங்கப்பட்டது. உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட இந்த யானைக்கு கோவில் நிர்வாகம் தெய்வானை என பெயர் சூட்டி பராமரித்து வருகிறது.

    யானை தெய்வானை தினமும் கோவில் பூஜைக்கு திருமஞ்சனம் செய்வதற்கு சரவணப் பொய்கையில் இருந்து புனித நீர் எடுத்து வந்து கோவிலில் சேர்ப்பது, திருவிழாக்களின்போது கொடி பட்டதை தலையில் சுமந்து திருப்பரங்குன்றம் நகரின் முக்கிய வீதிகளில் உலா வருவது, சுவாமி புறப்பாடின்போது சுவாமிக்கு முன்பு செல்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.

    இது தவிர கோவில் நிர்வாகம் மலைக்குப் பின்பகுதியில் இயற்கையான முறையில் யானை குளிப்பதற்காக குளியல் தொட்டி மற்றும் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

    இந்நிலையில் வழக்கமாக நடைபெறும் மருத்துவ பரிசோதனை கோவில் யானைக்கு நடைபெற்றது. அப்போது வழக்கத்திற்கு மாறாக அதன் உடல் எடை அதிகரித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவக் குழுவினர் யானையின் உடல் எடையை குறைக்க பரிந்துரை செய்தனர்.

    அதன் அடிப்படையில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அனுமதியுடன் வனத்துறையினர் ஒப்புதல் பெற்று கோவில் யானை தெய்வானை பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து கோவில் அலுவலர்கள் கூறுகையில், யானை தெய்வானை உடல் எடை அதிகரித்த காரணத்திற்காகவும், அதற்கு மேலும் பயிற்சி அளிப்பதற்காகவும் 10 மாத காலம் பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் பகுதிக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது என தெரிவித்தனர்.

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிககளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • மேம்பாட்டு குழு நிறுவனர் காத்துன் பீவி தலைமை தாங்கினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அன்னை பாத்திமா இஸ்லாமிய மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் ஏழை, எளியோருக்கு ரம்ஜான் பண்டிகையை யொட்டி புத்தாடைகள் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மேம்பாட்டு குழு நிறுவனர் காத்துன் பீவி தலைமை தாங்கினார். சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் டிரஸ்டி ஓஜிர்கான், தலைவர் அக்பர்கான், செயலாளர் ஆரிப்கான், பொருளாளர் ரபிக் முன்னிலை வகித்தனர்.

    பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பாத்திமா பீவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு இஸ்லாமி யர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், கவிஞர் மோகன் தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்டச் செயலாளர்கள் பாலமுருகன் தவிடன், பாண்டுரங்கன், வேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாக்கிலிப்பட்டி பாலமுருகன், சவுந்தர், அக்பர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் தொட்டியில் இறங்கி பார்வதி யானை உற்சாக குளியல் போட்டது.
    • இதற்காக தமிழக அரசு ரூ.23.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது.

    மதுரை

    உலகப்புகழ் பெற்ற தலங்களில் மீனாட்சி அம்மன் கோவில் குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் பார்வதி என்ற பெண் யானை உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு பார்வதி யானைக்கு கண்களில் வெண்புரை பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்வை குறைபாடு உருவானது. இதைத்தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து கால்நடை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் பார்வதி யானைக்கு சிகிச்சை அளித்தனர். இதன் விளைவாக கண்புரை நோய் முற்றிலும் குணமாகி, பழைய நிலைக்கு வந்தது. மேலும் பார்வதி யானைக்கு மன அழுத்தத்தை நீக்கும் பயிற்சி தரப்பட வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் யானை நீச்சல் அடித்து குளிக்க வசதியாக, குளியல் தொட்டி (தெப்பம்) கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ.23.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதன் அடிப்படையில் மீனாட்சி அம்மன் கோவில் வளா கத்தில் யானை தெப்பம் கட்டப்பட்டது.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது பார்வதி யானைக்காக கோவில் வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள யானை தெப்பம் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் ஊழியர்கள் பார்வதி யானையை அழைத்து வந்தனர்.

    தண்ணீரைப் பார்த்ததும் யானைக்கு உற்சாகம் ஏற்பட்டது. தொட்டியில் இறங்கிய பார்வதி யானை உற்சாகத்தில் அங்கும் இங்கும் ஓடி உற்சாக குளியல் போட்டது. இது பார்வை யாளர்களை கவர்ந்தது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • ராம்குமாரிடம் 8 பேர் கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது.

    மதுரை:

    மதுரை தெற்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 41). இவர் அதே பகுதியில் தங்க நகை வளையல் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராம்குமார் விளக்குத்தூண் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் நகை கடை நடத்தி வருகிறேன். என்னிடம் செல்லூர் பெரியார் தெருவை சேர்ந்த செல்லபாண்டியன் மனைவி தீபா (28), திருமலை கண்ணன் மனைவி தீபிகா (30), பாலகுரு மனைவி அன்னலட்சுமி (49), எல்லீஸ் நகர் ஜெயபிரபா, மாங்குளம் பாரதி நகர் காஞ்சிவனம் மனைவி துர்கா தேவி (39), சிலைமான் தங்க முனீஸ்வரன் (36), கருப்பாயூரணி கிருஷ்ணமூர்த்தி (36), விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மணிகண்டன் (35) ஆகிய 8 பேர் ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை வாங்கிச் சென்றனர்.

    இதற்கான பணத்தை அவர்கள் தரவில்லை. நான் அவர்களிடம் பணத்தை கேட்டபோது, அவர்கள் திருப்பி தர மறுத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராம்குமார் ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை கொடுத்தற்கான ஆவணங்களை ஒப்படைத்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் ராம்குமாரிடம் 8 பேர் கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 8 பேரையும் விளக்குத்தூண் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • காரியாப்பட்டி என்.பி.எம். டிரஸ்ட் நிறு வனர் அழகர்சாமி நன்றி கூறினார்.

    மதுரை

    காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தில் முன்னாள் ஒன்றிய செயலா ளர் பால்ச்சாமி தேவர் படத்திறப்பு, பிரைஸ் அறக் கட்டளை தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைபெற்றது.

    அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி னார். தி.மு.க. மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், ராஜேந்திரன், ஜெயப்பெருமாள், நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் ஏழை-எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்ெதாகை, விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், நெல் விதை கள், பெண்களுக்கு சேலை, தையல் எந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு சைக்கிள் ஆகியவற்ைற அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கி னார்.

    இதில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., திருச்சுழி யூனியன் சேர்மன் பொன்னுத்தம்பி, காரியா பட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்லம், போஸ் தேவர், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காரியாப்பட்டி என்.பி.எம். டிரஸ்ட் நிறு வனர் அழகர்சாமி நன்றி கூறினார்.

    • கொரோனா கால கட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 542 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
    • கிட்டத்தட்ட 6 லட்சத்து 30 ஆயிரத்து 500 பேர் வரை ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்தனர்.

    மதுரை:

    தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு, மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த 2008-ம் ஆண்டு 200 வாகனங்களுடன் தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்சு திட்டத்தில் தற்போது 1,353 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 205 வாகனங்கள் மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் கருவிகளுடன் அமைந்து உள்ளன. மீதம் உள்ளவற்றில் 65 ஆம்புலன்சுகள் குழந்தைகளுக்கானவை.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் 293 ஆம்புலன்சுகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.102 கோடியே 28 லட்சத்து 37 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய அடையாளமாக 108 ஆம்புலன்ஸ் திட்டம் உள்ளது. இதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.

    அவசர தொலைபேசி எண் 108-க்கு தினமும் 12 ஆயிரத்து 500 அழைப்புகள் வருகின்றன. இலவச ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தற்போது வரை 1 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 266 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    கொரோனா கால கட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 542 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது கிட்டத்தட்ட 6 லட்சத்து 30 ஆயிரத்து 500 பேர் வரை ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்தனர். இதற்காக 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநாட்டில் அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கலந்து கொண்டனர். 

    • முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
    • சதீஷ், ஆசாத், சோலைமணி கண்டன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரையை தொழில் நகரமாக்க முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், கலெக்டர் அனீஷ்சேகரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க பழமையான நகரமாக மதுரை உள்ளது. மதுரைக்கென்று பல தனிசிறப்புகள் உள்ளன. மதுரையை தொழில் நகர மாகவும் அழைக்கப்பட வேண்டும். மதுரையில் மிகப்பெரிய தொழிற்சாலைகளோ, மிகப்பெரிய தொழில் நிறுவனங்களோ இல்லை.

    இதனால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர்கள் வேலைதேடி சென்னை, திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களை நோக்கி செல்கின்றனர்.

    இன்னும் சில ஆண்டு களில் மதுரை உள்கட்ட மைப்பு அமையப்பெற்ற நகரமாக மாற உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மதுரையை தொழில் நகரமாக மாற்றும் வகையிலும் மிகப்பெரிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலீட்டாளர்கள் மாநாடு மதுரையில் நடந்த மாநில அரசை வலியுறுத்த வேண்டும்.

    தற்பொழுது தமிழக அரசால் மாட்டுத்தாவ ணியில் அமைய இருக்கும் டைட்டல் பார்க்கை இதற்கு முந்தைய தி.மு.க ஆட்சியின் போது தகவல் தொழிநுட்ப பூங்காவுக்கு என்று ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட வடபழஞ்சியில் அமைக்க வேண்டும்.

    அந்த பகுதியில் டைட்டல் பார்க் அமையும் பட்சத்தில் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வளர்ச்சி பெறும். அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் உயரும். அதே போல் மதுரையை சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் கிரைனைட் குவாரிகள் இயங்கி வருகிறது.

    மதுரையில் மட்டும் அனைத்து கிரைனைட் குவாரிகளும் தடைசெய்யபட்டுள்ளது. இதனால் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் கிரானைட் குவாரி செயல்படுகிறது. ஆனால் அதன் அருகில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள கிரானைட் குவாரிகள் இயங்கவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.

    அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட குவாரிகளை தவிர்த்து மற்ற கிரைனைட் குவாரிகள் இயங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிக்குமார், ஊடகபிரிவு கோட்ட பொறுப்பாளர் நாகராஜன், முன்னாள் ஓ.பி.சி. அணி மாநில துணை தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி, வக்கீல் ரவீந்திரன், வேல்முருகன், வெற்றி கண்ணன், காளிதாஸ் கருப்பையா, சதீஷ்,

    ஆசாத், சோலைமணி கண்டன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • காலிபணியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கூறினார்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.

    மதுரை

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு-2023 -ல் தமிழ்நாட்டில் உள்ள போட்டித் தேர்வர்கள் கலந்து கொள்ளலாம்.

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (Staff Selection Commission, Government of India) "ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு - 2023 (Combined Graduate Level Examination, 2023)" தொடர்பான அறிவிப்பை 3.4.2023-அன்று வெளியிட்டுள்ளது.

    மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் / சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் "B" மற்றும் குரூப் "C" நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் (Recruitment Notice) விரிவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/ PortalManagement/UploadedFiles/noticeCG LE03042023.pdf என்ற இணையதள முகவரி யிலும் உள்ளது.

    இந்த காலிபணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்ப டையிலான இந்த தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 4.5.2023 ஆகும்.

    தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023-ல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்க ளிலும். தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்கள், நகரங்களில் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam - CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. இந்த தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த இணைய தளத்தில் " TN Career Services Employment" மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் "AIM TN" என்ற YouTube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறலாம்.

    இந்த தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.

    • புனித ஜெர்மேனம்மாள் திருவிழா நடந்தது.
    • ஏற்பாடுகளை புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான புனிதஜெர்மேனம்மாள் ஆலய 111-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து திருப்பலி மறையுரை நடந்தது.

    விழா நடைபெறும் நாட்களில் தினசரி கொடி பவனி, ஜெபமாலை, திருப்பலி நடைபெறும். வருகிற 22-ந் தேதி இரவு திருவிழா திருப்பலி, தேர் பவனி, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.

    மறுநாள் 23-ந் தேதி புது நன்மை விழா, தேர் பவனி, 24-ந் தேதி காலை நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • வாடிப்பட்டியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது.
    • தாதம்பட்டி வளவன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பஸ் நிலையம் முன்பு நடந்தது. ஒன்றிய செயலாளர் தமிழ் நிலவன் தலைமை தாங்கினார்.

    துணைச் செயலாளர் சிறுத்தை பாலன், பாசறை பேரூர் செயலாளர் யுவராஜா, தொகுதி செயலாளர் வளவன் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் அரசு விஜயார் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் தளபதி, அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்தார்.

    நில உரிமை மீட்பு துணை அமைப்பாளர் விடுதலை வீரன் இனிப்பு வழங்கினார். தி.மு.க முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், த.மா.க வட்டாரத் தலைவர் பால சரவணன், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மச்சராசன், குண்டுமலை, பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். தாதம்பட்டி வளவன் நன்றி கூறினார்.

    ×